நான் என் சிறுவயது காலத்தில் பள்ளியை விட்டு வந்ததும் பக்கத்து வீட்டு நண்பர்களுடன் பொழுது இருட்டும் வரை விளையாடுவோம் .என் காலத்தில் பலவிதமான விளையாட்டுகள் மிகுதியாக விளையாடுவோம் ,தட்டு கரையான்,கண்ணாம்பூச்சி,நொங்கு வண்டி ,ஐஸ் நம்பர் , நொண்டி விளையாட்டு,கபடி,அஞ்சான் கல் ,பாண்டியன் குழி, உயிர் கொடுத்து விளையாடுதல் போன்ற விளையாட்டுகள் இப்பொழுது உள்ள கிராமத்து சிறுவர்கள் கூட இவ்வித விளையாட்டை விளையாடுவது கிடையாது .
மெல்ல மெல்ல நம் மண் வாசனையுடன் கூடிய இந்த விளையாட்டுகள் நம் காலத்திலேயே நம் கண் முன்னே சிறுக சிறுக மறைந்து கொண்டு இருக்கிறது .
இப்பொழுதுள்ள சிறுவர்கள் கூட கையில் கிரிக்கெட் மட்டையை பிடித்து கொண்டும், கூடை பந்தை அடித்து கொண்டும் திரிகிறார்கள் .நான் இதை தவறு என்று சொல்ல வரவில்லை எங்கோ அந்நிய மண்ணில் இருந்து வந்த விளையாட்டை நாம் பெரிதும் விருப்பும் பொழுது நம் மன்னனின் விளையாட்டுகள் என் மறக்கடிக்க படுகின்றன .
நான் மேலே குர்ரிப்பிட்டுல்குத்து விளையாட்டு,கண்ணாம் poochi விளையாட்டுகள் எல்லாம் மனதிற்கும்,நம் உடம்பிற்கும்,மிகுந்த உற்சாகத்தையும்,நண்பர்களுகுடனான பின்னைப்பு, ஒற்றுமை போன்றவை சிறுவர்களின் மனதில் ஏற்படுத்து கின்றன .மேலும் இது போன்ற விளையாட்டுகளுக்கு எந்த விதமான பொருட் செல்லவும் இல்லை,உடம்பு இருந்தால் போதும் .
பின்பு என் இந்த விளையாட்டுகள் நம் கண்முன்ன மறைந்து கொண்டு இருகின்றன ?
காரணம் முன்பெல்லாம் தொலைக்காட்சி வசதி அதிகமாக இருக்காது அப்படியே இருந்தாலும் தூர்தர்ஷன் ஒன்று தான் பிரதான வீடுகளில் தெரியும் .
அதனால் சிறுவர்களுக்கு வேறு பொழுது போக்கு இல்லை அதனால் நன்றாக விளையாடினார்கள் .ஆனால் இப்பொழுது அப்படியா நூற்று கணக்கான தனியார் தொலைக்காட்சிகள் பணம் பண்ணும் ஒரே ஒரு குறி கொள்ளுக்காக
சிறுவர்களின் மனதை சிதைக்கும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றன .சிறு பருவதினர்க்காகவே சில பன்னாட்டு சேனல்கள் ஒலிபரப்பு ஆகின்றன .பள்ளியை விட்டு வரும் சிறுவர்களும் தொலைக்காட்சியே கதி என்று கிடக்கின்றனர் .அவர்கள் பொய்யான ஒரு மாயா பிம்பதினையே தன் நிஜம் என்று அவர்கள் மனதில் ஊன்றிவிடுகிறது .இன்னும் சில சிறுவர்கள் விளையாடுவார்கள் என்னவென்று பார்த்தல்,கிரிக்கெட்,டென்னிஸ் போன்றவையாகும் .
ஊடகங்களின் தொடர் பிரச்சாரத்தால் அவர்கள் டென்னிஸ்,கிரிக்கெட்,குத்து சண்டை போன்றவையே விளையாட்டுகள் என்று ஒரு எண்ணம் பலருக்கு வந்து விடுகிறது .இதில் இன்னு பிற விளையாட்டுகளையும் சேர்த்து கொள்ளலாம் .அனைத்தும் எப்படி நம் நாட்டிற்க்கு வந்தது என்று பார்த்தீர்கள் என்றால் தொலைக்காட்சி வாயிலாகத்தான் பெரும்பாலும் நம் மனதில் இடம் பெற்றன .
இவை அன்னதும் மேற்கத்திய விளையாட்டுகள் என்றாலும் அதில் ஒரு குறிப்பிடா அளவினர்தான் விளையாட முடியும். ஆனால் நம் கிராமத்து விளையாட்டுகள் அப்படி அல்ல எதனை பேர் வேண்டு மானாலும் பங்கேற்று விளையாடலாம் .
இப்போதுள்ள பெரும்பான்மையான பெற்றோர்கள் தங்கள் குழந்தை விளையாடுவதற்கு அனுமதிப்பதில்லை .பள்ளியில் உள்ள விளையாட்டு நேரம் தவிர சிறுவர்களும் விளையாடுவது இல்லை குழந்தைகள் வந்தவுடன் அவர்களை டியூஷன் க்கு அனுப்பி விடுகின்றனர் ,இன்னும் சிலரோ டான்ஸ் கிளாஸ் ,மியூசிக் கிளாஸ் போன்றவற்றுக்கு அனுப்பி தங்கள் குழந்தைகளை
"கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிபோலாமா" ,வேர் ஈஸ் தா பார்ட்டிக்கும் ஆடவிட்டு சந்தோஷ படுகின்றனர்.
இப்பொழுது உள்ள குழந்தைகள் அவர்களின் சிறுவயதின் அருமை தெரியாமல் வளர்கின்றனர் .இதற்க்கு காரணம் பெற்றோர்களும் ஊடங்களும் தான் என்று சொன்னால் அது மிகயாகாது .
இதுக்கு தீர்வு என்று பார்த்தால் சிறுவர்களை அதிகமாக தொலைக்காட்சி முன் அமர அனுமதிக்ககூடாது .மாலை பொழுதில் அவர்களை வித விதமான விளையாட்டுகளை விளையாட சொல்லி ஊக்கப்படுத்த வேண்டும் . அவர்கள் இருக்கும் பொழுது அதிகமாக தொலைக்காட்சி பெட்டியை பார்க்ககூடாது,
தொலை காட்சிகளும் சிறுவர்களின் நலன் கருதி சினிமா தொடர்பு இல்லாது அறிவு சார் நிகழ்ச்சியை தயாரிக்க வேண்டும் .
இன்று சில கிராமங்களில் நீங்கள் "வெண்ணிலா கபடி குழு" வில் பார்த்து இருப்பீர்கள் அது போல திரு விழா நாட்களில் மட்டும் தான் நம் விளையாட்டுகளை பார்க்க முடிகிறது.
மீண்டும் எழுமா நம் மண்ணின் விளையாட்டுகள் .
அல்லது நமூர் கோலி சோடாவை அடித்து நொறுக்கிய அந்நிய குளிர் பானும் போல் நம் மண்ணின் விளையாட்டுகளை பணம் கொழிக்கும் அந்நிய விளையாட்டுகளும் ,முதலாளித்துவ ஊடகங்குளும் நம் கண்ணில் இருந்து
மறைத்து விடுமோ?
சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது