அரசியல் கட்சிகள் தங்களுக்கு என்று ஒரு தனிப்பட்ட தொலைக்காட்சி சானல்களை வைத்துள்ளன என்பதை யாவரும் அறிந்ததே.தமிழ் தமிழ் என்று தமிழை கொன்று சினிமா அதை சார்ந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி கொண்டிருக்கும் தொலைக்காட்சிகளுக்கு மத்தியில்,மக்கள் தொலைக்காட்சி தனது வித்யாசமான அணுகுமுறையால் தனக்கென தனி இடத்தை பெற்றது.
பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அவர்களால் தொடங்கப்பட்ட இந்த மக்கள் தொலைக்காட்சி .மண் பயனுற வேண்டும் என்ற கூறிய நோக்கத்திற்கு தொடங்கப்பட்ட இந்த தொலைக்காட்சி மற்ற தொலைக்காட்சிகளை காட்டிலும் வித்யாசப்பட்டது .அரசியலில் ஆயிரம் பல்டி அடித்தாலும் மக்கள் தொலைக்காட்சி எந்த வித சமரசமும் செய்து கொள்ளவில்லை தனது நிகழ்ச்சிகளில் .
சுதந்திரதினம், பொங்கல், தீபாவளி நடிகைகள் பேட்டி எடுக்கும் தொலைகாட்சிகளுக்கு மத்தியில் மக்கள் சார்ந்த கிராமிய மனம் கமழும் நிகழ்ச்சிகளை வழங்கி தமிழ் மக்கள் இடத்தே ஒரு நற்பெயரை பெற்று இருந்தது .
கோட்டு,சூட்டு போட்டு கொண்டு செய்திவாசிபவர்கள் மத்தியில் சட்டை ,வேட்டி,வெள்ளை துண்டு அணிந்து செய்திவாசிபதிலும் வித்யாசம் காட்டியது ,அதிலும் முடிந்தவரை தமிழ் பெயரையே பயன்படுத்தி வந்தார்கள் .நிகழ்ச்சிகளில் ஒரு தரம் முகம் சுளிக்க வைக்காத காட்சி அமைப்பு என்று பலதரப்பிலும் பாராடப்ப்டது.
விளம்பரத்திலும் உடலுக்கு கேடு விளைவிக்கும் குளிர்பானங்கள் போன்றவற்றை ஏற்று கொள்ளவதில்லை என்ற கட்டுப்பாடு .மக்களை ஆட்டுவிக்கும் மெகா சீரியல் நாடகங்களுக்கு மத்தியில் சந்தன காடு ,ஈழம் நேற்றும் இன்றும் ,நேதாஜியின் வரலாறு போன்ற தொடர்களை ஒளிபரப்பி தமிழ் தொலைக்காட்சி நேயர்களை தன் பக்கம் கவர்தது .
இப்படி அனைத்திலும் வித்யாசம் காட்டிய இந்த மக்கள் தொலைகாட்சியில் டெலி
ஷாப்பிங் விளம்பரங்கள் அண்மைக்காலமாக ஒளிபரப்ப படுகிறது .வித்யாசமான நிகழ்ச்சிகளை கொடுக்க முடியாத மற்ற தொலைக்காட்சிகள் தான் இப்படி டெலி ஷாப்பிங் விளம்பரங்களை காட்டி காலம் கடத்தி கொண்டு இருகிறார்கள் .ஏன் இந்த மாற்றம் மக்களுக்காக ஒரு தொலைக்காட்சி என்ற பெயர் பெற்ற இந்த தொலைக்காட்சி எப்படி தனது நிகழ்ச்சிகளை சமரசம் செய்து கொண்டது .
விரைவில் இயேசு அழைக்கிறார் போன்ற நிகழ்ச்சிகளும் ஒளிபரப்ப படும் என்று வார ஏடுகளில் படித்தேன் .
மக்கள் தொலைக்காட்சி ஏன் இப்படி ஆகிவிட்டது?. மாற்றத்தை கொண்டுவந்து உலகு வாழ் தமிழர்களிடையே ஊடக புரட்சி செய்த இந்த தொலைக்காட்சி மீண்டும் தனது பழைய முகத்திற்கு மாற வேண்டும் .மாறுமா ?
its true makkal television programmes are now changing with the tele shop ads
ReplyDeleteஇதில் மக்கள் தொலைக்காட்சியை மட்டும் குறை சொல்வது தவறு. நமது மக்களின் மாறிவரும் ரசனையும் சமூக கேடுகளும்தான் இது போன்ற நல்ல தொலைக்காட்சிகளையும் இந்த நிலைக்குத்தள்ளுகின்றன. தமிழ் பண்ணிசை நிகழ்ச்சிக்கும் மலரும் பூமி நிகழ்ச்சிக்கும் ஈடாக எத்தனை தமிழ் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன? ஆனால் இந்த நிகழ்ச்சிகளுக்கு வரும் விளம்பரங்கள் எத்தனை? மானும் மயிலும் பத்து மணிநேரம் அவிழ்த்துப்போட்டுவிட்டு ஆடினாலும் நம் மக்கள் குடும்பத்துடன் பார்த்து மகிழ்வார்கள். இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு கோடி கோடியாக விளம்பரமும் தருவார்கள். ஆனால் மக்கள் தொலைக்காட்சியில் வரும் அருமையான நிகழ்ச்சிகளை எத்தனை பேர் ரசிக்கிறார்கள். பாராளுமன்ற தேர்தலில் பாமாக கட்சி தோற்றதற்கு மக்கள் தொலைக்காட்சியும் ஒரு காரணம் என்றும் அது வெகுசன ரசனைக்கேற்றவாறு மாறவேண்டும் ஒரு ஞான சூனியம் பிளாக் எழுதியது. எங்கே போய் முட்டிக்கொள்வது.
ReplyDelete//இதில் மக்கள் தொலைக்காட்சியை மட்டும் குறை சொல்வது தவறு. நமது மக்களின் மாறிவரும் ரசனையும் சமூக கேடுகளும்தான் இது போன்ற நல்ல தொலைக்காட்சிகளையும் இந்த நிலைக்குத்தள்ளுகின்றன. தமிழ் பண்ணிசை நிகழ்ச்சிக்கும் மலரும் பூமி நிகழ்ச்சிக்கும் ஈடாக எத்தனை தமிழ் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன? ஆனால் இந்த நிகழ்ச்சிகளுக்கு வரும் விளம்பரங்கள் எத்தனை? மானும் மயிலும் பத்து மணிநேரம் அவிழ்த்துப்போட்டுவிட்டு ஆடினாலும் நம் மக்கள் குடும்பத்துடன் பார்த்து மகிழ்வார்கள். இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு கோடி கோடியாக விளம்பரமும் தருவார்கள். ஆனால் மக்கள் தொலைக்காட்சியில் வரும் அருமையான நிகழ்ச்சிகளை எத்தனை பேர் ரசிக்கிறார்கள். பாராளுமன்ற தேர்தலில் பாமாக கட்சி தோற்றதற்கு மக்கள் தொலைக்காட்சியும் ஒரு காரணம் என்றும் அது வெகுசன ரசனைக்கேற்றவாறு மாறவேண்டும் ஒரு ஞான சூனியம் பிளாக் எழுதியது. எங்கே போய் முட்டிக்கொள்வது.//
ReplyDeleteநல்ல கருத்து நன்றி தமிழ் நாடன்
nanba paman aasai yaarai vittathu
ReplyDelete