Dec 30, 2008
மின் சிக்கனம் இவர்களுக்கு இல்லை
மின் பற்றாக்குறையை சமாளிக்க, தொழிற்சாலைகளுக்கு வாரத்தில் இரண்டு நாள் கட்டாய விடுமுறை அளிக்க தொழிலதிபர்கள் சம்மதித்துள்ளனர் என்று மின்சாரத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி அறிவித்துள்ளார் .அய்யா முதலில் உங்கள் கட்சி மாநாட்டுக்கு செலவிடப்படும் மின்சாரத்தை குறையுங்கள் .ஊரே இருளில் மூழ்கி இருந்தாலும் உங்கள் மாநாட்டுக்கு மட்டும் எங்கிருந்து மின்சாரம் வருகிறது என்று தெரியவில்லை .உங்களுக்கே மனது உறுத்த வில்லையா பல மயில் தூரத்திற்கு மின் விளக்குகளை அமைத்து எதை சாதித்தீர்கள் மாறாக பொது மக்களின் சாபத்திற்கு ஆலகின்றீர்கள். மின்சிக்கனத்தை பற்றி பிறருக்கு அறிவுரை கூறும் முன் நீங்களும் உங்கள் கட்சியனரும் அடைதி பின்பற்றுங்கள் .
வேண்டாம் இலவசம்
நம் மக்களை மேலும் மேலும் சோம்பேறிகளாக மாறி கொண்டுருக்கிறது நம்மை ஆளும் அரசு .இரண்டு ரூபாய்க்கு அரிசி ,இலவச வண்ண தொலைக்காட்சி என்று கொடுக்கிறது .மக்கள் பணத்தில் பொருட்களை தருவதற்கு நீங்கள் யார் ?
ஒரு உதாரணம் பார்ப்போம்:
இலவச தொலைக்காட்சி என்று ஒன்று கொடுத்தார்களே அது எதற்கு என்றால் நும் மக்கள் பொது அறிவை பெருக்குவதற்கு என்றார்கள் சிரிப்பு தான் வருகிறது .இப்பொழுது இருக்கும் தொலைக்காட்சி அலைவரிசைகள் பெரும்பாலும் மக்களின் அறிய நேரத்தை வீணடித்து கொண்டு இருக்கின்றன ( எனக்கு தெரிந்து மக்கள் தொலைக்காட்சி தவற ) .தீபாவளி பொங்கல் போன்ற நாட்களில் சிறப்பு நிகழ்ச்சி என்று பார்த்தல் சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளே ஒளிபரப்புகின்றன .அதை விடுங்கள் சுதந்திர தினத்திற்கும் நமீதாவிற்கும் என்ன சம்மந்தம் என்றே என்னக்கு புரியவில்லை .
பொங்கலுக்கு பொங்கல் வைக்கும் பொருட்கள் இலவசமாக தருவதாக அறிவித்துள்ளீர்கள் அய்யா ஒன்றை தெரிந்துகொள்ளுங்கள் விவசாயிகள் பொங்கலன்று பயன்படும் கரும்புக்கு விலை கேட்கிறார்கள் அதை தாருங்கள் . நிலவி வரும் கடும் மின்தடை இன்னும் பல இன்னல்களுக்கு ஆளாகி விளைய வைத்து இருகிறார்கள்.அவர்களை வாழவையுங்கள் அப்பொழுது கொஞ்ச நஞ்ச மிருக்கும் நம் விவசாயமும் வாழும் .

தமிழ் தொலைக்காட்சி ஊடகம்
ஊடகம் என்ற வலிமையான ஒன்று மக்களுக்கு எவ்வளவோ நன்மைகளை செய்யலாம் ஆனால் அவர்கள் தங்கள் சுயலாபதிர்கக நம் கலாச்சாரத்தை பெரிதும் சீரழித்து வருகின்றனர்.இன்றைய தேதியில் தமிழ்நாட்டில் மட்டும் 30 கும் மேற்பட்ட தொலைக்காட்சி அலைவரிசைகள் தங்கள் நிகழ்ச்சிகளை போட்டி போட்டு கொண்டு ஒளிபரப்புகின்றன . இருந்தும் என்ன பயன் தமிழனின் பண்பாட்டை உரித்து காட்டுவது ஒரு சில தொலைக்காட்சிகளே மற்றவை எல்லாம் திரைபடத்துறையை நம்பி தங்கள் நிகழ்ச்சிகளை அமைத்து மக்களின் அறியாய் பொழுதுகளை வீணடித்து கொண்டு இருகின்றன .
Subscribe to:
Posts (Atom)