இணைய சொந்தங்களே வருக வருக !!!!!!!

Pages

Mar 31, 2010

பெறு வெடிப்பு கொள்கையால்(பிக் பாங்)யாருக்கு என்ன பயன்?


சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளின் எல்லை ஓரத்தில் சுவிட்சர்லாந்து நாட்டில் பூமிக்கு அடியில் இருபத்தி ஏழு கிலோமீட்டர் நீளத்திற்கு சோதனை சாலை அமைத்து பிரபஞ்சம் எப்படி உருவானது என்பதை பற்றி சோதனை செய்வதற்கு பலாயிரம் கோடிகளை கொட்டி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.இந்த சோதனையின் இராண்டாம் கட்டமும் வெற்றிபெற்றதாக செய்திகள் வெளிவருகின்றன.இந்த சோதனைகள் மூலம் பிரபஞ்சம் எப்படி உருவானது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடிக்க முடியும் என்று கூறுகிறார்கள்.என் கேள்வி என்னவென்றால் எதற்கு இந்த பெருவெடிப்பு ஆராய்ச்சி ?

இந்த ஆராய்சிக்காக பூமிக்கு அடியில் பல கிலோமீட்டர்கள் தோண்டி சோதனை கூடம் ஏற்படுத்தி இருகிறார்கள்.இதற்கு ஆனா செலவுகளோ பலாயிரகனக்கான கோடிகளை தாண்டும்.இந்த சோதனை வெற்றி பெற்றாலும் சாதாரண மக்களுக்கு இதில் எந்த பயனும் இல்லை ஒரு சில பெருநிறுவனங்கள் மட்டும் இதில் காசு பார்க்கமுடியும்.மேலும் இயற்கை படைத்த இந்த பூ உலகத்தை பேணுவதை விட்டு அதற்க்கு எதிரான வேலையே மட்டுமே இன்று ஆராய்ச்சி என்ற பெயரால் நடை பெற்றுக்கொண்டு இருக்கிறது.பூமிக்கு அடியில் நடக்கும் இந்த சோதனையால் எதிர்காலத்தில் பூமிக்கு ஆபத்து இல்லை என்றும் உறுதியாக கூற முடியாது. ஏனென்றால் நில நடுக்கம் ஏற்பட்டால் இந்த சோதனை கூடம் பாதிக்கப்படலாம் அதனால் இரும்பு சோதனைகூடத்தில் சுத்திக்கொண்டு இருக்கும் அதிவேக அணுக்கள் வெளிவரலாம் இதன் மூலம் பூமிக்கு பேராபத்து ஏற்படலாம்,போர் ஏற்பட்டு இந்த சோதனை கூடத்தின் மேல் தாக்குதல் நடத்தினால் அதன் மூலமும் இந்த சோதனை கூடம் சேதம் ஏற்பட்டு பூமிக்கு பாதிப்பு ஏற்படலாம்,சோதனை சாலையில் சிறு தவறு நேர்ந்து அதன் மூலம் அணுதுகள்கள் வெளிவந்து பதிப்பை ஏற்படுத்தலாம்.இப்படி எல்லாம் நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதங்கள். அதற்காக விஞ்ஞானம் தேவை இல்லை என்று சொல்லவரவில்லை. அணுவை பிளக்க முடியாது என்று அந்த காலத்தில் பாடிவைத்தார்கள் ஆனால் தற்கால மனிதன் அணுவையும் பிளந்தான்.அப்படி செய்ததுதான் புலிவாலை புடித்த கதையாகி போனது.அணுவை பிளந்ததன் மூலம் அதில் வெளிப்படும் ஆற்றலை வைத்து பெரும் அழிவை தரும் அணுகுண்டை மனிதன் கண்டுபிடித்தான்.இன்று அணுவால் நன்மைகளை விட தீமைகளே அதிகம் உலக பெரும் வல்லரசுகள் யாவும் பிற நாடுகளை மிரட்ட தன் அணுகுண்டு கை இருப்பையே கைகாட்டுகின்றனர்.அணு ஆற்றல் மூலம் மின்சாரம் எடுக்கிறார்கள் இதன் பயன் கொஞ்சம் என்றாலும் ஆபத்துகள் அதிகம்.மேலும் அணுகதிர் பாதிப்பு என்பது சில நாட்களில் மறைந்திடகூடியது அல்ல அதன் பாதிப்புகள் குறைய பல நூறு வருடங்கள் ஆகும்.

விஞ்ஞானம் மனிதனை நல்ல வழிப்படுத்துவதாக இருக்க வேண்டும் மேலும் அணைத்து தரப்பு மக்களுக்கும் அது பயன் உள்ளதாக இருக்க வேண்டும்.இந்த பெருவெடிப்பு சோதனை என்னைபொருத்தவரை தேவை இல்லாதது.அதில் கொட்டப்படும் கோடி கணக்கான பணத்தை அடிப்படை வசதி இல்லாத பலகோடி மக்கள் இந்த உலகத்தில் இருகிறார்கள் அவர்களுக்கு பயன்படுத்தாலாம்.மேலும் மனிதன் மனிதனோடு சண்டை இட்டால் அது மனிதர்க்கு மட்டுமே பாதிப்பு இயற்கையோடு சண்டை இட்டால் அது உலகத்திற்கே பாதிப்பு.

இயற்கை கொடுத்த அன்பு பரிசு இந்த பூமி இதை பத்திரமாக பயன் படுத்தினாலே போதும் அதைவிடுத்து இந்த பரிசு எங்கே வாங்கியது எப்படி செய்தது என்று சோதித்தால் இயற்கையும் நம்மை சோதிக்கும்.