மும்பை தாக்குதலை அடுத்து நமது நாட்டிற்கு புதிய உளவுத்துறை அமைப்பை ஏற்படுத்தியது மதிய அரசு .ஆனாலும் இன்னும் குண்டு வெடிப்புகள் தொடர்ந்து கொண்டுருக்கிறது என்பது வருந்தபட்தக்க ஒன்றாகும்.அஸ்ஸாம் மாநிலத்தில் ஏற்பட்ட தொடர் குண்டு வெடிப்பு என்பது இன்னும் நமது பதுகாப்பு துரையின் குறைபாட்டை வெளிச்ச மிட்டு காட்டுகிறது .
நமது நாட்டிற்கென்று புகழ் பெற்ற உளவுத்துறைகள் இருகின்றன இருந்தும் என்ன பயன் இஸ்ரேலின் மொசாத் மற்றும் அமெரிக்காவின் பெடெரல் புலனாய்வு துறை போல் நடக்க போவதை முன்கூடியே உறுதிப்படுத்த வேண்டாமா .மதிப்ற மனித உயிர்கள் மடிந்த பின்பு பாதுகாப்பை சில நாட்களுக்கு பலபடுதுவதும் பின்பு எப்பொழுதும் போல் அசட்டையாக இருபதும் வாடிக்கையாகிவிட்டது .
உளவு அமைப்புகள் நாட்டிற்காக வேலை பார்பதை விட்டு விட்டு அரசியல் வாதிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் உளவு பார்ப்பது தொடர்ந்தாள் இன்னும் பல இழப்புகளை நாம் சந்திக நேரிடும் .
நான் நமது பாதுக்கப்பு துறையை குறைத்து சொல்ல வரவில்லை அதில்லுல குறைகளை கலய சொல்லிகிறேன்.