இணைய சொந்தங்களே வருக வருக !!!!!!!

Pages

Apr 25, 2009

காங்கிரஸ் தலை தங்கபாலு -வேட்டு வெள்ளைசாமி காமெடி பேட்டி

இது முற்றிலும் கற்பனையே யாரையும் புண்படுத்துவதற்கு இல்லை
நமது தமிழ் ஊடக அரசியல் சிறப்பு நிருபர் வெத்து வேட்டு வெள்ளைசாமி சிறப்பு தேர்தல் பேட்டி காண்பது நமது தமிழக காங்கிரஸ் கட்சியின் ஒரே தலைவர் வேற யாரு நம்ம சேலம் தொகுதி எம்.பி தங்கபாளுவுடன் நேரடி சந்திப்பு.

வெத்து வேட்டு வெள்ளைசாமி சுருக்கம் வெ.வே.வெ:

நமது நிருபர் தலைவர் வருகைக்காக காத்து கொண்டு இருக்கிறார் .

சிறுது நேரத்தில் தங்கத்தலைவர் தொங்கபாலு மனிக்கவும் தங்கபாலு வருகிறார்.வந்ததும் நம்ம நிருபரிடும் வணக்கம் சொல்லி மன்னிக்கவும் கொஞ்ச தாமதம் ஆய்டுச்சு மெகா டிவி கேமரா மேன் அறிவாலயத்தில் இருந்தான் ஐயோ மாத்தி சொல்லிட்டேன் சத்யமூர்த்தி பவன்ல இருந்தான் கூட்டிட்டு வரதுக்கு கொஞ்சம் லேட் .

வெ.வே.வெ : பரவா இல்ல சார் பேட்டிய ஆரும்பிகலாம சார் ?

தங்க: கொஞ்சம் பொறுங்க கேமரா மேன் காமெராவ செட் பண்ணட்டும் (ஏன்பா சைடு கேமரா எங்கப்பா அதையும் பிக்ஸ் பண்ணிஎடுங்க .கேமரா மேன் அய்யா அந்த கேமரா கல்யாண வீட்டுக்கு வாடகைக்கு போயருகுதுங்க வரவேற்பு விழா முடுஞ்சுதான் வரும். தங்கபாலு சரி சரி செல் போன்ல கேமரா இருந்த அதுனாலாவது எடுங்க சொல்லிட்டு) சரி இப்ப இப்ப ஆரம்பியுங்க

வெ.வே.வெ: அய்யா உங்கள பத்தி கொஞ்சம் சொல்லுங்க

தங்க : என்ன பத்தி தகவல் வேணுமுனா மெகா டிவி பாருங்க சும்மாவா அம்பது கோடி செலவு செஞ்சு டிவி ஆரம்பிச்சேன் . அதுல நா காலைல எந்துருச்சு பல்லு விலக்கி காபி குடிகறதுலஇருந்து நைட்டு குட் நைட்
கொசுபத்தி ஏத்தி வச்ட்டு தூங்கறது வரைக்கும் கான்பிபாங்க .

வெ.வே.வெ:இந்த தேர்தலா பத்தி கொஞ்சம் சொல்லுங்க உங்க வெற்றி வாய்ப்பு எப்பிடி இருக்கு .

தங்க : (கொஞ்ச நேரம் கேமரா வையே வெறித்து பார்த்து விட்டு ) அன்னை சானியா மன்னிக்கவும் சோனியா காந்தி தலைமையில் இந்த முறையும் அபார வெற்றி பெறுவோம் .


வெ.வே.வெ: (சிரித்துக்கொண்டு ) ஐந்து ஆண்டுகால காங்கிரஸ் அரசின் சாதனைகள் எனவேன்று கொஞ்சம் சொல்லுங்க

தங்க : என்ன அப்பிடி கேட்டு விடீர்கள் எங்களது லட்சியமே "முடிந்தவரைக்கும் கொள்ளை அடி முடியலேனா காலை பிடி " என்கிற கொள்கை படி எங்கால எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்திரிகிறோம் .
அரசு நிறுவன பங்குகளை தனியாருக்கு தாரைவாற்பது ,விவசாயத்தை படுகுழியில் தள்ளுவது குறிப்பாக தமிழக மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக மெகா டிவி ,வசந்த் டிவி கொண்டுவந்தது அதுமட்டுமா ஈழ தமிழருக்கும் நாங்கள் செய்த சேவை இந்த நாடே அறியும் .முந்தாநேத்து காலைல கூட ஈழ தமிழர்கள் சாம்பார் வைக்க வசதியாக ஆச்சி மசாலா ரெண்டு லட்சம் பாக்கெட் கள்ள தோணி வழிய அனுப்பி வச்சோம் .இது வொன்றே போதுமே நாங்கள் வெற்றி பெற இங்கு மட்டுமல்ல ஈழத்தில் நின்றாலும் எங்கள் வெற்றி உரிதி.


வெ.வே.வெ: ( இப்பவே கண்ண கண்ணு இருட்டுதே ) அய்யா தமிழகத்தில் காமராசர் ஆட்சி கொண்டு வருவோம் என்று நீங்களும் உங்க சக காங்கிரஸ் தலைவர்களும் மேடைக்கு மேடை கூவுறீங்க அத பத்தி கொஞ்சம் ..,
தங்க : என்னத்த சொல்லறதுங்க அவரு பொழைக்க தெரியாத மனுஷன் ஒரு பங்களாவ கண்டார ,காலேஜ் ,வணிகவளாகம் கண்டார இல்ல கொஞ்சமா ஒரு நானூறு ஐந்நூறு ஏகர் நிலதகண்டார பாவம் .

வெ.வே.வெ: (நீங்கல்லாம் தலைவர வந்ததுக்கு நாங்க தான் பாவம் பநீருகனும் என்று நினைத்து கொண்டு ) நீங்க மக்கள் அவைல ஒரு கேள்வி கூட தொகுதி பத்தி கேகுளைங்க்ற பேச்சு இருக்குதுங்க .

தங்க : அதி முற்றிலும் வதந்தி என்றே சொல்வேன் நான் கேட்காம எப்படி மெகா டிவி ,கலூரிகள் நாலு ஆஞ்சு ,ஷாப்பிங் வாளகம் வந்தது. அன்னை சோனியா வின் வலி காட்டுதலின் பேரில் நமது மக்களுக்கு போராடி பெற்றேன் .
அதுவுமிலாம நா கேள்வி கேட்க ஆரம்பிச்ச இந்த நாடு தாங்காது அதான் .

வெ.வே.வெ: அய்யா காங்கிரஸ் என்றாலே கோஸ்டி சண்டைனு சொல்றாங்க உண்மையா ?

தங்க : (கட்சின்னு இருந்தா சண்ட வரத்தான் செய்யும் என்று உள்ளுக்குள் நினைத்த படி) உங்களுக்கு தெரியுமா ஒற்றுமை என்றால் காங்கிரஸ் என்றுதான் அர்த்தம் . நம் தமிழக காங்கிரசில் கோஸ்டி பூசல் என்பது கிடையவே கிடையாது .குறிப்பாக வன்முறையை முற்றிலும் வெறுபவர்கள் நாங்கள் கத்தி ,கம்பு ,உருட்டு தடி போன்றவற்றில் எங்களக்கு நம்பிக்கை இல்லை .அவ்வபொழுது புழுக்கம் தாங்காம சட்டைய கிளுசுகுவோம் அவ்வளவுதான் .அதை திரித்து இந்த காங்கிரஸ் கட்சின் வளர்ச்சி பிடிக்காமல் குற்றச்சாட்டு .

வெ.வே.வெ: (இதை எப்படி தான் சிரிக்காம சொல்றாரோ என்று நினைத்து கொண்டு ) இந்தா முறையும் உங்களுக்கு சேலம் தொகுதிக்கு சீட் கொடுதுருகாங்க நீங்க வெற்றி பெற்றால் தொகுதி மக்களுக்கு என மாதிரியான நன்மைகளை செய்வீர்கள் ?

தங்க : நான் வெற்றி பெறுவது உறுதி இந்த முறை வெற்றி பெற்றால் மெகா டிவி போன்று மெகா இசை ,மெகா செய்திகள் என்று இன்னும் இரண்டு புதிய தொலைக்காட்சி நிறுவ அனுமதி பெறப்படும். பனை மர கள் தென்னை மர கள் போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பானத்தை தடை செய்து சேலம் தொகுதியில் புதிதாக நானூறு ஹெக்டேர் விவசாய நிலத்தில் மதுபான தொழிற்சாலை அமைக்கப்படும் . அதிலும் குறிப்பாக ஜிகா டிவி என்ற கேபிள் தொலைக்காட்சி ஆரம்பிக்கப்படும் .அதில் தொகுதி பிரச்சனை குறித்து உடனுக்கு உடன் தீர்த்து முடிக்கப்படும் .

வெ.வே.வெ: கூட்டணியில் இருக்கும் திராவிட கட்சி தலைவர் பற்றி கொஞ்சம் கூறவும்

தங்க : ஆறு கோடி தமிழனுக்கு ஒரே தலைவா அவர் .இவரின் பொற்கால ஆட்சியில் தான் நம் தமிழ் நாட்டை கற்காலத்துக்கு அழைத்து சென்றவர் .தமிழன் நலனில் அட்கரை கொண்டவர் ஓர் சிறு உதாரணம் ஈழ மக்கள் சிறப்பு விடுமுறையை முன்னிட்டு அனைத்து கடைகளும் மூடப்பட்டும் பேருந்துகள் நிறுத்தப்பட்டும் தமிழ் குடி மக்கள் பாதிக்க படுவார்களே என்ற காரணத்திற்கு மது கடைகளை திறந்து வைத்து ஊற்றி கொடுக்க யாருக்கு வரும் மனசு .

வெ.வே.வெ: ஈழ தமிழர் பிரச்சனை பற்றி


தங்க :(முந்திக்கொண்டு ) அன்னை சோனியா தலைமையில் கொஞ்ச நாளில் பிரச்சனையை முடித்துவிடுவோம் . அப்புறம் பாருங்கள் ஈழ பிரச்சனை எலவே எலாது.

வெ.வே.வெ: அய்யா அணு ஆயுத ஒப்பந்தும் என்னவானது


தங்க : மின் உற்பத்தி செய்வதற்கு செய்யப்பட்ட ஒப்பந்தும் நானும் கூட என்னக்கு மனு செய்துருகிரேன் அணு உலையை பெறுவதற்கு பார்போம் .அதிலும் நான் வெற்றி பெற்றால் தமிழ் நாட்டில் முதல் தநீயர் அணு உலையை காங்கிரஸ் சார்பில் சேலம் தொகுதியில் நிறுவுவேன் .


வெ.வே.வெ:( நம்மள கொள்ளாம விட மாட்டார் போலிருக்கே ) அய்யா இறுதி கேள்வி தமிழக மக்களை பற்றி கொஞ்சம் ..,

தங்க : மனிக்கவும் நேரம் குறைவாக உள்ளது நான் தற்பொழுது விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சிக்கு போய்கொண்டு இருகிறேன் சிறப்பு விருதினராக மறுபடியும் சந்திப்போம் .

வணக்கம்

கேமரா ஆப் செய்த பின்பு தங்கம் வெ.வே.வெ விடம் பதிவை வெளியிடும் பொழுது மீடியா பாட்னர் மெகா டிவி னு போடுங்க என்ற சொன்னார் .

அவரது விருப்ப படியே இப்பதிவை இணைந்து வழங்குவது மெகா டிவி .

பின்னோட்டம் இடுங்கள் முன்னேற்றுவதற்காக

3 comments:

  1. super appu superu

    ReplyDelete
  2. நண்பா .... உங்களது மின்னஞ்சல் முகவரி கிடைக்குமா ?

    ReplyDelete