இணைய சொந்தங்களே வருக வருக !!!!!!!

Pages

May 30, 2009

வருக வருக ராஜபக்க்ஷே அவர்களே ?

இலங்கை அதிபர் ராஜப்பக்ஷே இந்தியா வருகை தருவார் என்று எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார் என்று நாளேடுகள் தெரிவிக்கின்றன.

இலங்கை மண்ணில் என் இன மக்களை கொன்று குவித்து ,என் இன பெண்களின் கற்பை பறித்து ,இளைஞர்களை தூக்கில் தொங்கவிடப்பட்டு ,ஏன் கருவிலிருக்கும் சிசுவைகூட விட்டுவைக்காமல் துப்பாக்கி தோட்டவிர்க்கு இரையாக்கி ரத்தம் குடித்த சிங்கள பேரினவாத அதிபர் வருக! வருக! என்று வரவேர்க்கபடுவீர்கள் எங்களை ஆளும் ஆட்சிகாரர்களால் .

நாங்கள் ஒன்றும் சீக்கியர்கள் ஆல்ல தன் இனம் அவமானபட்டால் ,அடிமைபடுதப்பட்டால் செருப்பால் அடிப்பதற்கும் ,அந்நிய நாட்டில் தன் இனத்தான் ஒருவன் கொல்லப்பட்டால் கலவரம் செய்து பொது(7000கோடி) சொத்தை சேத படுத்துவதற்கும்.

நாங்கள் தமிழர்கள் தன்மானம் அற்ற தமிழர்கள் காசுக்காக ஓட்டை விற்று கள்ள ஒட்டு போடும் வீர தமிழர்கள் .தமிழன் தமிழன் என்று கூறிக்கொண்டே காசுக்காக தன் இனத்தை கொன்று குவிக்க உதவி புரிந்த கயவர்களுக்கே ஓட்டளிப்போம் .எத்தனை அவமானப்படாலும் அதை பொறுத்துக்கொண்டு (காசுக்காக ) அதை எல்லாம் மறந்து விடுவோம்,மன்னித்து விடுவோம் .

அதனால் நீங்கள் நிம்மதியாக இந்தியாவிற்கு வரலாம் ,எந்த பயமும் இன்றி ஏன் என்றால் நாங்கள் உங்களை ஒன்றும் செய்து விடமாடோம் ,ரத்தின கம்பள வரவேற்பளிப்போம் ,ஐந்து நட்சத்திர விடுதியில் தங்க வைப்போம் ,இன்னும் மீதமுள்ள என் இன மக்களை அளிப்பதற்கு தேவையான உதவிகளை செய்வோம் அல்லது தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு மறு சீரமைப்பு என்று நாங்கள் செலுத்திய வரி பணத்தை எங்கள் ஆட்சியாளர்கள் மூலம் தருவோம் நிம்மதியாக பெற்று செல்லுங்கள் .அங்கு சென்று மிச்சம் மீதி இருக்கும் என் இனமான தமிழர்களை அழிபீர்களோ அல்லது அடிமைபடுதுவீர்களோ நாங்கள் ஒன்றும் செய்யபோவது இல்லை .வெறும் கூச்சல் மட்டுமே போடுவோம் அல்லது பேரணி நடத்துவோம் அவ்வளவுதான் .

எங்களுக்கு தேவை ஈழ தமிழர்கள் வாழ்வுரிமை அல்ல ஆட்சி அதிகாரத்தை பிடிக்க வேண்டும் அதற்காக நாங்கள் என்ன வேணாலும் செய்வோம் அவ்வளவுதான் !.

2 comments:

 1. பல்பீர் சிங்May 31, 2009 at 8:19 AM

  தோழா,

  பஞ்சாபில் நடந்தது இனக் கலவரமில்லை சாதி மோதல். ஆதிக்க சாதி சீக்கியருக்கு எதிராக தலித் சீக்கியரின் கலக நடவடிக்கை.திருத்தி எழுதுங்கள்.
  ராஜபட்சேவை விரட்டியடிக்க வாழ்த்துக்கள்.

  அன்புடன்
  பல்பீர்
  சென்னை-2

  ReplyDelete
 2. எப்போது கட்சி குடும்ப அரசியலை மற்றும் ஜாதி அரசியலை விட்டு வெளியே வருகின்றோமே அப்போதுதான் இந்த தமிழ் ஈன தலைவர்களை ஓரம்கட்ட முடியும்
  http://kandumkaanaan.blogspot.com/2009/05/blog-post_29.html

  ReplyDelete