சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்டில் மாநிலத்தில் ஆதிகாலம் தொட்டு காடுகளிலே வாழ்ந்து வரும் பழங்குடி இன மக்களுக்கு இன்று வரை எந்த அடிப்படை வசதியும் செய்யாத இந்த அரசாங்கம் பெரும் முதலாளிகளின் அடிவருடியாகி பல்லாயிரம் சதுர கிலோமீட்டர் நீளமுள்ள வன பிரதேசத்தை அழித்து சுரங்கம் தோண்டுவதற்கு அனுமதி அளித்துள்ளது.காடுகளையே கடவுளாக போற்றும் இந்த பகுதியில் வாழும் பழங்குடி மக்கள் இதற்க்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார்கள் அவர்களுக்கு ஆதரவாக மாவோ இயக்கங்களும் களம் இறங்கின.
இதனால் அந்த பகுதிகளில் சுரங்கம் அமைக்க முடியாமல் பெரும் நிறுவனங்கள் திணறின.பெரும் முதலாளிகளுக்கு ஒரு பிரச்னை என்றால் அது இந்திய அரசாங்கத்திற்கும் ஒரு பிரச்னை அல்லவா?தேர்தலுக்கு இந்த நிறுவனங்கள் தான் கோடி கோடியாய் நன்கொடை தருகிறதே அதனால் பச்சை வேட்டை என்று பெயர் வைத்து கொண்டு ராணுவ பலத்தை பயன்படுத்தி நர வேட்டை ஆடிவருகிறது. பழங்குடி மக்கள் வசிக்கும் பல நூறு கிராமங்களை சூறை ஆடி உள்ளது.பல ஆயிரம் பழங்குடி மக்கள் இதில் கடுமையாக பாதிக்க பட்டுள்ளனர்.
தன் சொந்த மக்களுக்கே அகதிகள் முகாமை திறந்த பெருமை இந்த மத்திய அரசாங்கத்திற்கே சேரும்.இவர்களை போய் ஈழ மக்களுக்கு உதவுங்கள் என்றால் எப்படி செய்வார்கள்.முதலாளிகள் நன்றாக இருக்க வேண்டும் அது மட்டுமே இந்த அரசாங்கத்திற்கு குறிக்கோள். காடுகளில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் பழங்குடி மக்களை அடித்து விரட்டுகிறார்கள் இது என்ன ஜனநாயக நாடா இல்லை சர்வாதிகார நாடா.
சானியா மிர்சாவுக்கு கல்யாணமா இல்லையா என்று வாய் கிழிய பேசி கருத்து கணிப்பு நடத்தும் ஊடகங்கள் இந்த பச்சை வேட்டை என்ற பெயரில் இயற்கைக்கு எதிராகவும் அங்கு வாழ்ந்து வரும் பழங்குடி இன மக்களுக்குஎதிராகவும் நடந்துவரும் நிகழ்வுகளை குறித்து ஏன் ஒரு உண்மை நிலையை வெளியிட வில்லை.
"கனிம நிறுவனங்கள் என்ற சாதுக்கள், இப்பகுதியில் எப்போது குடியேறப் போகின்றனர் என்பது தெரியவில்லை.இந்த ராமாயணமும், கம்பர் எழுதியதைப் போல், முடிவுக்கு வருமா என்பதையும் இப்போது சொல்ல முடியாது. ஏனெனில், இந்த முறை ராட்சதர்கள், நாட்டில் 223 மாவட் டங்களிலிருந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்; ராமனின் கைகளும், ஜனநாயகத்தால் கட்டப்பட்டுள்ளன".
இன்றைய தினமலர் செய்திகளில் இப்படி குறிபிட்டுளனர்.கனிம நிறுவனங்கள் எல்லாம் சாதுக்கலாம் அவர்களை எதிர்க்கும் பழங்குடி இன மக்கள் மற்றும் மாவோக்கள் ராட்சசர்கலாம்.தன மண்ணை காப்பதற்கு போராடும் மக்களை ராட்சசர்கள் என்று கூறுவது எப்படி சரியாய் இருக்கும் .மக்களின் உயிரை குடித்து கோடிகளில் புரளும் பரகாசுற நிறுவங்கள் யாவும் தான் ராட்சசர்கள்.தான் பிறந்த மண்ணிற்காக தன உயிரை கொடுத்து போராடுபவர்கள் தீவிரவாதிகள் என்று சொல்லும் இந்த மாதிரி ஊடகங்களை என்ன சொல்ல ?
" வாழ்க ஜனநாயகம் "