இணைய சொந்தங்களே வருக வருக !!!!!!!

Pages

Jul 9, 2009

சிரிப்பு சிரிப்பா வருதுங்க -நகைச்சுவை


மக்களின் நன்மைக்காகத்தான் இந்த விலை ஏற்றம்
அமைச்சர்



அண்ணன் தம்பி பாசம்



என்ன பேசிக்கறாங்க



வருங்கால முதல்வர் காரசார பேட்டி



மக்களாட்சியில் அடுத்த அதிரடி



இந்த டிவி பழைய மாடல்

முதல் முயற்சி நல்ல இருக்குங்களா .

(ராஜபக்சேவின் போட்டோ வை தவிர மற்றவை எல்லாம் கற்பனையே யாரையும் புண் படுதுவதர்கல்ல)

மறக்காம ஒட்டு போட்டு உங்க சனநாயக கடமைய நிறைவேத்துங்க

Jul 8, 2009

அடுத்த ஆண்டில் கூகிள் ஆபரேடிங் சிஸ்டம் -கூகிள் அறிவிப்பு





கூகிள் இன்று புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது .அடுத்த ஆண்டு நடுவில் கூகிள் (Chrome OS) ஆபரேடிங் சிஸ்டம் வெளியிடுகிறோம் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்க பட்டுள்ளது.ஓபன் சோர்ஸ் முறையில் அந்த (os) இயங்கும் என்று அறிவிக்க பட்டுள்ளது.மேலும் இந்த புதிய (os)லைட் வெயிட் ஆகா இருக்கும் லினக்ஸ் கெர்னலை அடிபடையாக கொண்டு உருவாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இது முற்றிலும் புதிய ப்ராஜெக்ட் கூகிள் (android) லிருந்து வித்யாசபடும் என்றும் அறிவித்துள்ளது .

புதிய இயங்குதளம் மூலம் இணையம் தொடர்பான சேவைகளை உடனடியாக பெறமுடியும் என்றும் .மேலும் வைரஸ் போன்ற பிரச்சனைகளையும் தவிர்க்கும் வகையில் இந்த இயங்கு தளம் உருவாக்கப்படும் என்று தெரிகிறது. இந்த இயங்குதளத்தின் முக்கிய குறிக்கோள் வேகம்,பாதுகாப்பு,எளிமை. அதாவது இந்த புதிய (os) இயக்குவதற்கு வேகமாகவும் ,வைரஸ் போன்ற பிரச்சினைகளில் இருந்து பாதுகாப்பாவும் ,பயன்படுத்துவதற்கு மிக எளிமையாகவும் இருக்கும்.இந்த இயங்கு தளம் இணையத்தை அடிபடையாக கொண்டு இயங்கும் என்றும் அதனால் ஏற்கனவே உள்ள இணையம் தொடர்பான (web based applications)மென் பொருட்கள் எந்த மாற்றமும் செய்யாமல் இதில் இயங்கும் என்றும் தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு நடுவில் (netbooks)இக்கு கூகிள் கிரோம் (0s)வெளியிடப்படும் பின்பு ஆல்பா பதிப்பு வெளியிட்டு பல்வேறு விதமான சோதனைகள் மேற்கொள்ள படும் என்று கூறியுள்ளது .

கூகுளின் இந்த அதிரடி அறிவிப்பால் மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கும் கூகுளுக்கும் கடும் போட்டி நிலவும்.கூகுளின் சவாலை மைக்ரோசாப்ட் சமாளிக்குமா ? என்பதை பொறுத்து இருந்து பார்போம் .

மேலும் தகவல்களுக்கு கூகுளின் ப்ளாக் சென்று பார்க்கவும்.
-http://googleblog.blogspot.com/2009/07/introducing-google-chrome-os.html

Jul 7, 2009

யூத் புல் விகடனில் எனது பதிவு -நன்றி விகடன்

பதிவுலக சொந்தங்களே எனது பதிவு இன்று யூத் புல் விகடன் இணைய தளத்தில் வெளியாகி உள்ளது .ரொம்பவும் மகிழ்ச்சியாக உள்ளது எனது பதிவை வெளியிட்ட விகடனுக்கு மனமார்ந்த நன்றி.

மாட்டு வண்டி -நினைவுகள்




மேலும் தமிழ் திரட்டிகள் மூலம் அதரவு அளித்த சொந்தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் .

மாட்டு வண்டி -நினைவுகள்

படம் உதவி நன்றி மதிமாறன்

மாட்டு வண்டி என்று சொன்னால் கிராமங்கள் தான் நினைவுக்கு வரும் முதலில் .இன்று கிராமங்களில் மாட்டு வண்டிகள் குறைந்து டிராக்டர் வாகனம் வந்து விட்டது .ஆனாலும் விடாப்பிடியாக இன்னும் சில பேர் மாட்டு வண்டி வைத்து கொண்டு விவசாயம் பார்த்து கொண்டுதான் இருகிறார்கள் .மாட்டு வண்டி ஓட்டுவது ஒரு கலை மாட்டின் சுபாவத்திற்கு ஏற்ப அதை அதட்டி ஓட்டுவார்கள்.

நான் சின்ன வயதில் என் அப்பிச்சி வீட்டில் இருந்துதான் பள்ளிக்கூடம் போவேன்.அப்பொழுது எங்கள் அப்பிச்சி வீட்டில் மாட்டு வண்டி இருக்கும் அப்பா எல்லாம் தேங்காய் எடுப்பது ,குப்பை அள்ளுவதற்கு மாட்டு வண்டியை தான் பெரிதும் பயன்படுத்துவார்கள் .அதனால அடிக்கடி மாட்டு வண்டிக்கு வேலை இருந்துகொண்டே இருக்கும் .தோப்பில் தேங்காய் எடுக்க போகும் பொழுது வெறும் மாட்டு வண்டியாதான் போகும் அதனால நானும் எங்க சின்ன மாமனும் வண்டியில் ஏறி கொள்வோம் .எங்க அப்பிச்சி தான் மாட்டை பூட்டி வண்டியை கிளப்புவாரு .அப்படி போகும் பொது என்ன சந்தோஷம் ஆய் ஊய் என்று சத்தம் போட்டு கொண்டே போவோம்.மாட்டு வண்டி தேங்காய் எடுக்குற பக்கம் போயிடுச்சா அப்படியே எட்டி குதுசுட்டு ஆளுக்கு ஒரு தேங்காய் எடுத்து வண்டிக்குள்ள போடுவோம்.

தேங்காய் வண்டில தேங்காய் நரம்பிடுசுன மறுபடியும் கெளம்பும் வீட்டுக்கு நானும் எங்க சின்ன மாமனும் தேங்காய் மேல ஏறி உட்காந்துகுவோம்.அப்புறம் மாட்டு வண்டி வெறுமனே போயிட்டு இருக்கும் பொழுது ரெண்டு கையையும் பலகையிலிருந்து எடுத்து விட்டு எதையும் புடிக்காம நிக்கணும்னு போட்டி வைப்போம் .அப்படியே மெதுவா எந்துருச்சு நின்னு ரெண்டுகையும் எதையும் புடிக்காம நின்ன வரும்பாருங்க ஒரு பயம் அப்பா ஒரே சத்தம் வண்டிக்குள்ள . எங்க அப்பிச்சி திரும்பி பார்த்துட்டு கம்முனு உட்காரமாடீங்கள அப்படீன்னு சொல்லிட்டு மாடுகளை விரட்டும் .

அப்பிடி இல்லையா இப்ப பூங்கவுல குழந்தைகள் விளையாடுமே (see saw) அது போல முன்னடியிருகுற நொகம் அப்படீனு சொல்லுவாங்க அதுல உட்கார்ந்துட்டு விளையாடுவோம் .அதுக்கும் நீமுந்தி நா முந்தினு ஒரே ரகளையா இருக்கும்.

அப்பெல்லாம் ஒரு ஊருக்கு போரதுன கூட மாட்டு வண்டிதான் .கோயிலுக்கு போகனுமா மாட்டு வண்டி தான் அதுவும் கோயிலுக்கு போயிட்டு வரப்ப பொறி கடலை வாங்கி கலந்து ஆளுக்கு ஒரு வாய் அள்ளி போட்டுட்டு பேசி கொண்டே வருவோம் .அப்பா எல்லாம் கோயில்விழா என்றால் மாட்டு வண்டிதான் பிரதான வாகனம் குடும்பமாய் போவார்கள் வண்டி பூட்டிட்டு.

அந்த கனத்தை நினைத்து பார்த்தல் எவ்வளவு சந்தோஷம் .நான் பள்ளி மேல் வகுப்பு செல்ல செல்ல மாட்டு வண்டியும் என்னை விட்டு விலகிக்கொண்டே சென்றது .அதன் அருமை அப்பொழுது தெரிய இப்பொழுது தெரிகிறது அதன் அன்யோன்யம் .டிராக்டர் வந்து மாட்டு வண்டியின் உபயோகத்தை பெருமளவு குறைத்து விட்டது. இன்னும் சொல்ல போனால் நமது நாட்டு மாடுகளே குறைந்து விட்டன எல்லாம் கலப்பின மாடுகள் தான் .எங்கள் வீட்டில் கூட தாத்தா இருந்த வரைக்கும் நாட்டு மாடுகள் தான் அதிகமா வளர்ப்பார் .பின் அவர் இறந்து விட நாட்டு மாடுகள் வளர்க்கும் பழக்கம் போய் உழுவதற்கு எல்லாம் இப்பொழுது எங்கள் வீட்டில் டிராக்டர் தான்.

மீண்டும் வருமா மாட்டுவண்டி என் நினைவுகளை சுமக்க.

என்னமோ போங்க




என்ன பண்றாங்க ஏது பண்றாங்க ஒரு மண்ணும் புரிய மாட்டிங்குது.மெத்த படிச்சா மேதாவிகள் வருசத்திற்கு ஒரு முறை பட்ஜெட் தாக்கல் பண்றாங்க நம்ம பாராளுமன்றத்தில.கோட்டு,சூட்டு போட்டு கிட்டு கைல ஒரு தோல் பையா வச்சுகிட்ட டிவி காரங்க காமெராவுக்கு முன்னாடி பொட்டிய தொக்கி காட்டு உள்ளார போறாங்க.போய் அந்த பட்ஜெட் தாக்கல் பண்ணிட்டு ,இது ஏழைகளுக்கான பட்ஜெட் ,விவசாய மக்களுக்கு ஆனா பட்ஜெட் ,மக்களுக்கு ஆனா பட்ஜெட் அப்படீனு வெளில வந்து சொல்லறாங்க.பெரிய பெரிய டிவி காரங்களும் நாலஞ்சு மேதாவிகளை கூட்டிட்டு வந்து உட்கார வச்சு ஒரு வாரத்துக்கு பட்ஜெட் பத்தி பேசறாங்க .

அப்புறம் ஆளுங்கட்சி அரசியல் வாதிகள் இது நான் பார்த்ததிலே மிக சிறந்த பட்ஜெட் ,மக்களுக்கான பட்ஜெட் என்று சொல்லுவாங்க.எதிர்க்கட்சி காரங்க என்ன சொல்லுவாங்க இது மக்களுக்கு மேலும் சுமை அளிக்க கூடிய பட்ஜெட் ,தொலைநோக்கு திட்டங்கள் எதுவும் இல்ல என்று சொல்லுவாங்க.சரி விடுங்க

இப்ப என்னுடைய கேள்வி என்னன்னா இத்தன வருசமா பட்ஜெட் போடுறீங்களே ஏன் ஏழை இன்னும் ஏழையாகவே இருக்கிறான்?விவசாய் துறைக்கு இவ்வளவு நிதி அப்படீனு சொல்வீங்க அப்புறம் ஏன் விவசாய் தற்கொலை செஞ்சுகுறாங்க? ஏழை களுக்கான பட்ஜெட் சொல்லறீங்க ஆனா பணக்கறாங்க மேலும் பணக்காரங்க ஆகிகிட்டு இருகாங்க ஏழை மென்மேலும் ஏழை ஆகிட்டு இருகாங்க? ஏன் இந்த பொருளாதார இடைவெளி?அதுல வரி குறைப்பு இதுல வரிகுறைப்பு அப்படீனு சொல்றீங்க ஆனா இங்க விலை வாசி விர்ருனு ஏறிட்டு இருக்கு அது எப்படி சாமி?

இதுக்கு விடை தெரிஞ்ச யாரவது எனக்கு புரியிற மாதிரி சொல்லுங்கோ.

Jul 4, 2009

கூகிள் இணையதளத்தால் பூமியின் சுற்று சூழலுக்கு பாதிப்பா?


இணைய உலகத்தில் முடிசூட ராஜாவான கூகிள் இணையதளத்தை பற்றி இணையம் உபயோகிக்கும் அனைவரும் தெரிந்து இருப்போம்.நாம் தேடும் தகவல்களை வினாடிக்கும் குறைவான நேரத்தில் நமது கண்முன்னே தகவல்களை கொண்டு வந்து கொட்டுகிறது .மற்றும் அதன் பல்வேறு விதமான சேவைகளால் பெரும்பாலான இனணயம் உலவும் மக்களை தன் பக்கம் ஈர்த்து வருகிறது .பிரமாண்ட தொழில் நுட்பத்தில் மிக எளிய நடையில் அனைவரும் பயன் படுத்துமாறு அதன் ஒவ்வொரு சேவையும் இருக்கிறது .இப்படி பல்வேறு புகழுக்கும் ராஜாவான கூகிள் தனது சர்ச் என்ஜின் சேவையால் பூமியின் சுற்று சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது எப்படி ?

அதாவது நமக்கு ஏதேனும் தகவல் தேவை பட்டால் நாம் உடனே செல்வது கூகிள் தேடுபொறியை தான் .உதாரணத்திற்கு ஒரு மென்பொருளை பற்றி தேடுகிறோம்" மென்பொருள் " என்று அடித்தவுடன் கூகிள் தனது ஒரு சர்வருக்கும் மட்டும் சென்று தேடாது பல்லாயிரம் மயில்களுக்கு அப்பால் உள்ள மற்ற சர்வேர்களிலும் மென்பொருள் குறித்த தகவல் இருக்கிறதா என்று தேடும் .அப்படி தேடும் வேகம் நொடிக்கும் குறைவானதே அந்த அளவிற்கு கூகிள் உள்கட்டமைப்பு வசதிகளை நவீன தொழிநுட்பத்தில் வைத்துள்ளது.அப்படி நாம் தேடும் தகவலை நம்மிடம் அதிவேகத்தில் கொண்டு வந்து சேர்ப்பதற்கு கூகிள் அதிக அளவு மின்சாரத்தை எடுத்துகொள்கிர்றது. இந்த ஒரு நிகழ்வால் மட்டும் அதாவது நாம் தேடும் ஒரு தகவல்களுக்கு (7g)அளவுக்கு கரிமில வாயுவை வெளியிடுகிறது (co2).

அதாவது ஒவ்வொரு ரெண்டு தேடலுக்கும் கூகிள் வெளியிடும் கரிமில வாயுவின் அளவு எவ்வளவு தெரியுமா? ஒரு கப் தேநீர் தயாரிக்க எவ்வளவு எரிபொருள் வேண்டுமோ அந்த அளவிற்கு .ஒரு கப் தேநீர் தயாரிக்கும் பொழுது
(15g)கரிமில வாயு (co2).

கூகிள் தந்து அதிவேக தேடலுக்கு உலகத்தில் பல இடங்களில் தனது சர்வர்களை(data centres) நிறுவியுள்ளது.இதன் மூலம் ஒரு நாளில் இணயத்தில் தேடப்படும் தேடல்களில் நாற்பது சதவிகிதம் கூகிள் தேடுபொறி மூலம் மட்டும் மேற்கொள்ள பட்டு வருகிறது .இதன் மூலம் எவ்வளவு மின்சக்தி செலவிடப்படும் என்று கணக்கிட்டு கொள்ளுங்கள் .பூமியின் சுற்று சூழல் இதன் மூலம் மேலும் வெப்பமடையும் .மேலும் தகவல்களுக்கு
(http://enews.toxicslink.org/news-view.php?id=52)(Issue 9
January , 2009
)
(http://www.financialexpress.com/news/Google-searches-affect-environment/409508/)

அனால் கூகுளின் அங்கீகரிக்கப்பட்ட வலைப்பூவில் அவர்கள் சொல்வதோ -நாங்கள் எங்களது பொறியாளர்களின் கடின உழைப்பில் மேம்படுத்தப்பட்ட குறைந்த அளவே மின்சக்தி உபயோகிக்கும் (data centres)சர்வர்களை அமைத்துள்ளதாக அறிவித்துள்ளனர் .இந்த மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்தால் முன்பை விட ஐம்பது சதவிகிதம் குறைவாக மின்சக்தி உபயோகிக்கப்படும் என்று கூறியுள்ளனர்.மேலும் மின்சக்தி உபயோகத்தை குறைக்க பல்வேறு விதமான முறைகளை கையாண்டு வருகிறோம் என்று கூறியுள்ளனர்.http://googleblog.blogspot.com/
http://www.google.com/corporate/green/clean-energy.html

நாம் பயன் படுத்தும் கணினி கூட அதிக அளவு வெப்பத்தை ஏற்படுத்து கின்றது .அதனால் தேவை இல்லாத நேரத்தில் கணினியின் இயக்கத்தை நிறுத்தி வைப்பது நல்லது .

(blackle.com) என்ற இணயதளம் ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த ஹீப் மீடியா என்ற நிறுவனம் நிறுவி உள்ளது .இது ஒரு தேடுபொறிக்கான தளம் அடிப்படையில் கூகிள் இணையதளத்தின் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது.இணயதளத்தில் நாம் தேடல் மேற்கொள்ள படுவது மூலம் குறிப்பிட்ட அளவு மின்சக்தியை நாம் சேமிக்க முடியும் என்று அந்த இணயதளம் கூறுகின்றது .

எது எப்படியோ நாமும் நம்முடிய சார்பில் வெப்ப மாயம் ஆவதை தடுக்க சிறு சிறு முயற்சிகளை மேற்கொள்வோம்.

Jul 2, 2009

அட படிச்ச முட்டாள்களே


நம்ம மத்திய அரசாங்கம் கொஞ்சா நாளைக்கு முன்னாடி ஒரு சட்டம் கொண்டு வந்தங்கல்ல அது உங்களுக்கு நியாபகம் இருக்க இல்லையா .அதாவது பொது இடத்தில் யாரும் புகை பிடிக்க கூடாது,மீறினால் அபராதம் என்று முன்னாள் மத்திய சுகதாரத்துறை அமைச்சர் அன்புமணி ஒரு சட்டம் கொண்டு வந்தாருங்க நிறைய பேருக்கு அந்த சட்டம் மறந்து போயிருக்கும்.அந்த சட்டத்தை பத்தி வாய்கிழிய ஊரெல்லாம் ரெண்டு நாள் பேசுனாங்க மூணாவது நாள் பழைய குருடி கதவை திறடி என்ற கதையாய் அவ அவன் பொது எடத்துல நின்னு புகை பிடிச்சுட்டு இருக்கான்.

இப்ப எதுக்குடா நீ படிச்சவங்களை வம்புக்கு இழுக்குறே அப்படீனு கேக்குறீங்களா? படிச்சவங்க எப்ப பார்த்தாலும் படிக்காதவனை கண்டால் ஒரு இளக்காரமா ஒரு பார்வை பார்பான் என்ன அவன் அறிவு கம்மி எத சொன்னாலும் புரிசுக்க மாடீங்கறான் .சரி நாம படிச்சவுங்க தானே நம்மக்கு எது சொன்னாலும் புரியும் தானே.அப்புறம் ஏன் இன்னும் பொது இடத்துல புகை பிடிக்கறீங்க.

நாலு எழுது படிச்ச நாம அரங்சாங்கமோ அல்லது வேறு ஏதாவது ஒரு சமுதாய அமைப்போ தப்பு செஞ்சுட்ட வாய்கிழிய அவுங்கள பத்தி குறை சொல்ல்றோம் அல்லது திட்டுகிறோம்.ஆனா அரசாங்கம் இந்த பொது இடத்தில் புகை பிடிக்க தடை என்ற சட்டம் எதுக்கு போட்டாங்க.

1)பொது இடத்துல புகை பிடித்தால் உன்னை மட்டும் பாதிக்காது உன்ன சுத்தி இருகரவங்களையும் பாதிக்கும் அதனால் அந்த சட்டம் போட்டாங்க.
2)இதனால் என்ன நன்மை சுற்றுசூழல் மாசு அடைவது சிறிதளவேனும் குறிக்கிறது.
3)இந்த சட்டதினால பொது இடத்தில் முக்கியமா ,கடைகள் ,பேருந்து நிறுத்தங்கள்,பூங்காக்கள் போன்ற இடங்களில் குழந்தைகள், பெரியவர்கள்,மற்றும் நோயுற்றவர்கள் போன்றவர்களும் இருப்பார்கள் அந்த கெட்ட நாற்றத்தில் இருந்து அவர்கள் இதனால் பெரிதும் பயன் அடைவார்கள்.

மொத்தத்தில் புகை பிடிகிறதை சுத்தமா நிறுத்தி விட்டால் உடலுக்கு இன்னும் நன்மை
இப்படி இன்னும் ஏராளமான நன்மைகள் சொல்லிடே போகலாம் .

இப்ப சென்னை பெரு நகரத்தில நெறைய இடங்களில் பார்த்து இருக்கிறேன் முக்கியமா மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்பவர்கள் இன்னும் பிற அலுவகங்களில் வேலை பார்பவர்கள் அலுவலங்களுக்கு பக்கத்தில் இருக்கும் கடைகளில் போய் சிகரெட் போன்றவற்றை வாங்கி சாலை ஓரங்களில் நின்று புகைத்து கொண்டு இருகிறார்கள் .என் படிக்கும் கல்லூரி மாணவர்கள் கூட பொது இடத்தில் தான் இன்னும் புகைத்து கொண்டு இருகிறார்கள் .இன்னும் சொல்ல போன சட்டத்தை காவல் காக்க வேண்டிய காவலர்களே அந்த தப்ப பண்ணிட்டு இருக்காங்க .

இவங்க எல்லாம் மெத்த படிச்சவங்க தானே அரசாங்கம் புதுசா வரி போட சட்டம் கொண்டு வந்த ஆய் ஊய் கூச்சல் போடறவுங்க தானே.இந்த பொது இடத்தில புகைக்க தடை என்ற சட்டத்தை ஏன் பின்பற்ற தெரியல .அப்படி செஞ்சா அவுங்க உடம்புக்கும் நல்லதுதானே.அதுமட்டுமா புகையால் ஏற்படும் தீமைகளையும் நீங்க மத்தவங்களுக்கு சொல்லி புரிய வைக்க முடியும்.

கிராமத்துல சொல்லுவாங்க படிக்காதவனை விட படிச்சவங்க தான் இப்ப அதிகமா தப்பு பண்றாங்கன்னு.

தெரிந்ததே தப்பு செய்கிறவர்கள் படித்த முட்டாள்கள் தானே ?