இணைய சொந்தங்களே வருக வருக !!!!!!!

Pages

Nov 5, 2009

சமூக அக்கறை ஊடகங்களுக்கு வேண்டும்


  • ஊடகத்துறை இப்பொழுது மிகவும் பெரிய அளவில் வளர்ச்சியை பெற்றுவருகிறது .உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தருவதில் நீ நான் என்று போட்டிபோட்டு கொண்டு செய்திகளை தருகின்றன .இதனால் இன்று உலக நிகழ்வுகளைஉடனுக்கு உடன் தெரிந்து கொள்ள முடிகிறது .

நமது இந்திய நாட்டில் செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேவை மிகப்பெரிய அளவில் வளர்ந்து இருக்கிறது .தொலைக்காட்சி,இணையம்,வானொலி என்று பலவிதமான ஊடகங்களும் அடங்கும் .அதிலும் தொலைக்காட்சி என்று எடுத்து கொண்டால் எத்தனை எத்தனை தொலைக்காட்சிகள் உள்ளூர் தொலைக்காட்சி முதல் உலக அளவில் புகழ் பெற்ற ஸ்டார் ,பி.பி.சி வரை.


  • நமது இந்திய நாடு விவசாயத்தை அடிப்படையாக கொண்டநாடு.பெரும்பான்மையான மக்கள் விவசாயத்தை நம்பியே இருகிறார்கள்.எவ்வளவுதான் நாம் மென்பொருள் துறையிலும் ,மின்னணு துறையிலும் நாம்சிறந்து விளங்கினாலும் விவசாயம் தான் நம் நாட்டின் முதுகெலும்பு.ஆனால் இன்று அந்த முதுகெலும்பு ஒடிந்து கிடக்கிறது .நமது ஆட்சியாளர்களின் தவறான கொள்கைகள் தான் காரணம் .சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் மண்ணை மாற்றானுக்கு வித்து மண்ணோடு உறவாடிய விவசாயை வெறும் கையோடு நிற்க வைத்தது . மீதம் உள்ள நிலங்களை ரசாயன உரங்களை பயன் படுத்துங்கள் ,வீரிய விதைகளை பயன்படுத்துங்கள் ,பூச்சிக்கொல்லியை அடியுங்கள் என்று விவசாய்களிடம் சொல்லி மண்ணை மலடாக்கியது ,விவசாயி கடனாளி ஆக்கியது.

இந்த ரெண்டுக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா ?

சொல்கிறேன் .நம் தமிழ்நாட்டை எடுத்துகொள்ளுங்கள் நமது மாநிலம் பெரும்பான்மையாக விவசாய நிலங்களை கொண்டது அப்பொழுது நம் மக்களில் பெரும்பான்மையானோர் விவசாயம் செய்பவர்களே .தமிழுக்கு(தமிங்க்லிஷ் ) தொலைக்காட்சிகள் கிட்ட தட்ட இருபத்தைந்துக்கு மேல் இருக்கிறது .அதில் அரசியல் சார்பு சில தொலைக்காட்சிகள் இருந்தாலும் அவை கட்சினுடைய தொலைக்காட்சிகள் இல்லை கட்சி தலைவர்கள் நடத்தும் தனியார் நிறுவனங்கள் மற்றவை மிகப்பெரிய ஊடக நிறுவங்களின் தொலைக்காட்சிகள் ஆகும் .
சரி இத்தனை தொலைக்காட்சிகளிலும் என்ன ஓளிபரப்பு செய்கிறார்கள் ,திரைப்படங்கள் ,பாடல்கள் ,நகைச்சுவை நிகழ்ச்சி ,நெடுந்தொடர்கள் ,சினிமா சார்ந்த நிகழ்ச்சிகள் போன்றவற்றை மட்டுமே திரும்ப திரும்ப காட்டுகிறார்கள் .
ஊடகம் என்றால் சினிமா மட்டும் தான் என்று ஒரு நிலையை இவர்கள் கொண்டு வந்து விட்டார்கள்.

முன்பு எல்லாம் இரவு நேரத்தில் குடும்பத்தில் அனைவரும் அமர்ந்து ஒன்று கூடி பேசி சிரிப்பார்கள் ஒன்று கூடி உணவு உண்பார்கள் ,ஆனால் இப்பொழுது நிலைமை என்ன குடும்ப உறுவுகளை காட்டுகிறோம் என்று சொல்லி குடும்ப உறவுகளை சிதைக்கும் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.நாம் வாய்விட்டு சிரிபதர்க்கே இன்று திரையில் வடிவேலும் ,விவேக்கும் வரவேண்டியதாக உள்ளது.இன்னும் சில நேரங்களில் மருத்துவம் சம்மந்த பட்ட நிகழ்ச்சிகளை
தொலைக்காட்சி ஊடங்களுக்கு இது மட்டும் போதுமா? கோடிகனக்கானோர் கவனிக்கும் வெகுஜன ஊடகங்கள் மிக பெரிய சமூக அக்கறை இருக்கா வேண்டும் அல்லவா?

மக்களுக்கு உபயோகமாக எவ்வளவு தரமான நிகழ்ச்சிகளை அளிக்கவேண்டும் இவர்கள் .பகுத்தறிவு தலைவர்களின் ஆட்சி இது ஆனால் அவர்களின் தொலைக்காட்சியோ மானுக்கும் மயிலுக்கும் மல்லு கட்டி கொண்டு இருக்கிறது.

ஆடி கலைத்த நடிகைகளை கூட்டி குத்தாட்டம் போடுவதற்கு பதிலாக அழிந்து கொண்டு இருக்கும் நம் நாட்டு புற கலைகளை வளர்க்கும் நிகழ்ச்சிகளை தந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் .கோட்டு சூட்டு அணிந்தவர்களிடம் பேட்டி எடுக்கும் இவர்கள் கோவணம் கட்டியவனை நீங்கள் கவனித்ததுண்டா .விவசாயம் சார்ந்த நமது பகுதிக்கு விவசாயம் தொடர்பான நிகழ்ச்சிகளை இவர்கள் வழங்கியதுண்டா?

இல்லை இல்லை என்று தான் சொல்ல வேண்டும். கோடிகளில் லாபம் சம்பாதிக்கும் இவர்களுக்கு கோவணம் கட்டியவர்களை பற்றி சிந்திக்க நேரம் இருக்குமா ?

மக்களின்
நேரத்தை வீனடிபதற்கு பதிலாக விவசாய்கள் பயன் பெரும் அளவுக்கு விவசாயம் சார்ந்த தொழில் வாய்புகள் மற்றும் விவசாயத்தின் இன்றைய நிலயை நிகழ்ச்சிகளை வழங்கினால் எத்தனை லட்சம் மக்கள் பயன் பெறுவார்கள்.விவசாயத்தை பற்றி இன்றைய தலைமுறைக்கு எந்தளவுக்கு தெரியும்.கடையில் காசுகொடுத்தால் பொருள் கிடைக்கும் என்று மட்டும் தான் தெரியும்.

மறைந்து கொண்டு இருக்கும் நமது பாரம்பரிய விவசாயத்தை மீட்டு எடுப்பதில் நம் ஆட்சி ஆளர்களுக்கு எவ்வளவு கடமை இருகிறதோ அதே அளவுக்கும் இந்த ஊடகங்களுக்கும் இருக்கிறது .இந்த வகையில் மக்கள் தொலைக்காட்சி மற்ற தொலைக்காட்சி அலைவரிசைகளில் மாறுபட்டு நமது கலாச்சாரம்,பண்பாடு ,விவசாயம் சார்ந்த நிகழ்ச்சி களை வழங்கு கிறது .இந்த பொறுப்புணர்வு மற்ற ஊடகங்களுக்கும் வரவேண்டும்.

Nov 4, 2009

என்னமா கேள்வி கேக்குது பயபுள்ள -நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும்

கீழ விதவிதமா போஸ் குடுத்துட்டு உட்காந்துட்டு இருக்கிறது என்னுடைய மாமா பொண்ணுங்க .நல்ல சுட்டி சரி கேமரா -வுக்கு போஸ் குடுன்னு சொன்னதுதான் பாக்கி எப்படி உட்காந்து வேலை செய்ற மாதிரி போஸ் கொடுக்குது பாருங்க .






நான் பதிவு எழுதி அஞ்சு மாசம் ஆச்சுங்க .சில பல காரணங்களால என்னால தொடர்ந்து எழுத முடியல .இதுவரை என வலைத்தளத்திற்கு வந்து நலம் விசாரித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி .

Jul 9, 2009

சிரிப்பு சிரிப்பா வருதுங்க -நகைச்சுவை


மக்களின் நன்மைக்காகத்தான் இந்த விலை ஏற்றம்
அமைச்சர்



அண்ணன் தம்பி பாசம்



என்ன பேசிக்கறாங்க



வருங்கால முதல்வர் காரசார பேட்டி



மக்களாட்சியில் அடுத்த அதிரடி



இந்த டிவி பழைய மாடல்

முதல் முயற்சி நல்ல இருக்குங்களா .

(ராஜபக்சேவின் போட்டோ வை தவிர மற்றவை எல்லாம் கற்பனையே யாரையும் புண் படுதுவதர்கல்ல)

மறக்காம ஒட்டு போட்டு உங்க சனநாயக கடமைய நிறைவேத்துங்க

Jul 8, 2009

அடுத்த ஆண்டில் கூகிள் ஆபரேடிங் சிஸ்டம் -கூகிள் அறிவிப்பு





கூகிள் இன்று புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது .அடுத்த ஆண்டு நடுவில் கூகிள் (Chrome OS) ஆபரேடிங் சிஸ்டம் வெளியிடுகிறோம் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்க பட்டுள்ளது.ஓபன் சோர்ஸ் முறையில் அந்த (os) இயங்கும் என்று அறிவிக்க பட்டுள்ளது.மேலும் இந்த புதிய (os)லைட் வெயிட் ஆகா இருக்கும் லினக்ஸ் கெர்னலை அடிபடையாக கொண்டு உருவாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இது முற்றிலும் புதிய ப்ராஜெக்ட் கூகிள் (android) லிருந்து வித்யாசபடும் என்றும் அறிவித்துள்ளது .

புதிய இயங்குதளம் மூலம் இணையம் தொடர்பான சேவைகளை உடனடியாக பெறமுடியும் என்றும் .மேலும் வைரஸ் போன்ற பிரச்சனைகளையும் தவிர்க்கும் வகையில் இந்த இயங்கு தளம் உருவாக்கப்படும் என்று தெரிகிறது. இந்த இயங்குதளத்தின் முக்கிய குறிக்கோள் வேகம்,பாதுகாப்பு,எளிமை. அதாவது இந்த புதிய (os) இயக்குவதற்கு வேகமாகவும் ,வைரஸ் போன்ற பிரச்சினைகளில் இருந்து பாதுகாப்பாவும் ,பயன்படுத்துவதற்கு மிக எளிமையாகவும் இருக்கும்.இந்த இயங்கு தளம் இணையத்தை அடிபடையாக கொண்டு இயங்கும் என்றும் அதனால் ஏற்கனவே உள்ள இணையம் தொடர்பான (web based applications)மென் பொருட்கள் எந்த மாற்றமும் செய்யாமல் இதில் இயங்கும் என்றும் தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு நடுவில் (netbooks)இக்கு கூகிள் கிரோம் (0s)வெளியிடப்படும் பின்பு ஆல்பா பதிப்பு வெளியிட்டு பல்வேறு விதமான சோதனைகள் மேற்கொள்ள படும் என்று கூறியுள்ளது .

கூகுளின் இந்த அதிரடி அறிவிப்பால் மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கும் கூகுளுக்கும் கடும் போட்டி நிலவும்.கூகுளின் சவாலை மைக்ரோசாப்ட் சமாளிக்குமா ? என்பதை பொறுத்து இருந்து பார்போம் .

மேலும் தகவல்களுக்கு கூகுளின் ப்ளாக் சென்று பார்க்கவும்.
-http://googleblog.blogspot.com/2009/07/introducing-google-chrome-os.html

Jul 7, 2009

யூத் புல் விகடனில் எனது பதிவு -நன்றி விகடன்

பதிவுலக சொந்தங்களே எனது பதிவு இன்று யூத் புல் விகடன் இணைய தளத்தில் வெளியாகி உள்ளது .ரொம்பவும் மகிழ்ச்சியாக உள்ளது எனது பதிவை வெளியிட்ட விகடனுக்கு மனமார்ந்த நன்றி.

மாட்டு வண்டி -நினைவுகள்




மேலும் தமிழ் திரட்டிகள் மூலம் அதரவு அளித்த சொந்தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் .

மாட்டு வண்டி -நினைவுகள்

படம் உதவி நன்றி மதிமாறன்

மாட்டு வண்டி என்று சொன்னால் கிராமங்கள் தான் நினைவுக்கு வரும் முதலில் .இன்று கிராமங்களில் மாட்டு வண்டிகள் குறைந்து டிராக்டர் வாகனம் வந்து விட்டது .ஆனாலும் விடாப்பிடியாக இன்னும் சில பேர் மாட்டு வண்டி வைத்து கொண்டு விவசாயம் பார்த்து கொண்டுதான் இருகிறார்கள் .மாட்டு வண்டி ஓட்டுவது ஒரு கலை மாட்டின் சுபாவத்திற்கு ஏற்ப அதை அதட்டி ஓட்டுவார்கள்.

நான் சின்ன வயதில் என் அப்பிச்சி வீட்டில் இருந்துதான் பள்ளிக்கூடம் போவேன்.அப்பொழுது எங்கள் அப்பிச்சி வீட்டில் மாட்டு வண்டி இருக்கும் அப்பா எல்லாம் தேங்காய் எடுப்பது ,குப்பை அள்ளுவதற்கு மாட்டு வண்டியை தான் பெரிதும் பயன்படுத்துவார்கள் .அதனால அடிக்கடி மாட்டு வண்டிக்கு வேலை இருந்துகொண்டே இருக்கும் .தோப்பில் தேங்காய் எடுக்க போகும் பொழுது வெறும் மாட்டு வண்டியாதான் போகும் அதனால நானும் எங்க சின்ன மாமனும் வண்டியில் ஏறி கொள்வோம் .எங்க அப்பிச்சி தான் மாட்டை பூட்டி வண்டியை கிளப்புவாரு .அப்படி போகும் பொது என்ன சந்தோஷம் ஆய் ஊய் என்று சத்தம் போட்டு கொண்டே போவோம்.மாட்டு வண்டி தேங்காய் எடுக்குற பக்கம் போயிடுச்சா அப்படியே எட்டி குதுசுட்டு ஆளுக்கு ஒரு தேங்காய் எடுத்து வண்டிக்குள்ள போடுவோம்.

தேங்காய் வண்டில தேங்காய் நரம்பிடுசுன மறுபடியும் கெளம்பும் வீட்டுக்கு நானும் எங்க சின்ன மாமனும் தேங்காய் மேல ஏறி உட்காந்துகுவோம்.அப்புறம் மாட்டு வண்டி வெறுமனே போயிட்டு இருக்கும் பொழுது ரெண்டு கையையும் பலகையிலிருந்து எடுத்து விட்டு எதையும் புடிக்காம நிக்கணும்னு போட்டி வைப்போம் .அப்படியே மெதுவா எந்துருச்சு நின்னு ரெண்டுகையும் எதையும் புடிக்காம நின்ன வரும்பாருங்க ஒரு பயம் அப்பா ஒரே சத்தம் வண்டிக்குள்ள . எங்க அப்பிச்சி திரும்பி பார்த்துட்டு கம்முனு உட்காரமாடீங்கள அப்படீன்னு சொல்லிட்டு மாடுகளை விரட்டும் .

அப்பிடி இல்லையா இப்ப பூங்கவுல குழந்தைகள் விளையாடுமே (see saw) அது போல முன்னடியிருகுற நொகம் அப்படீனு சொல்லுவாங்க அதுல உட்கார்ந்துட்டு விளையாடுவோம் .அதுக்கும் நீமுந்தி நா முந்தினு ஒரே ரகளையா இருக்கும்.

அப்பெல்லாம் ஒரு ஊருக்கு போரதுன கூட மாட்டு வண்டிதான் .கோயிலுக்கு போகனுமா மாட்டு வண்டி தான் அதுவும் கோயிலுக்கு போயிட்டு வரப்ப பொறி கடலை வாங்கி கலந்து ஆளுக்கு ஒரு வாய் அள்ளி போட்டுட்டு பேசி கொண்டே வருவோம் .அப்பா எல்லாம் கோயில்விழா என்றால் மாட்டு வண்டிதான் பிரதான வாகனம் குடும்பமாய் போவார்கள் வண்டி பூட்டிட்டு.

அந்த கனத்தை நினைத்து பார்த்தல் எவ்வளவு சந்தோஷம் .நான் பள்ளி மேல் வகுப்பு செல்ல செல்ல மாட்டு வண்டியும் என்னை விட்டு விலகிக்கொண்டே சென்றது .அதன் அருமை அப்பொழுது தெரிய இப்பொழுது தெரிகிறது அதன் அன்யோன்யம் .டிராக்டர் வந்து மாட்டு வண்டியின் உபயோகத்தை பெருமளவு குறைத்து விட்டது. இன்னும் சொல்ல போனால் நமது நாட்டு மாடுகளே குறைந்து விட்டன எல்லாம் கலப்பின மாடுகள் தான் .எங்கள் வீட்டில் கூட தாத்தா இருந்த வரைக்கும் நாட்டு மாடுகள் தான் அதிகமா வளர்ப்பார் .பின் அவர் இறந்து விட நாட்டு மாடுகள் வளர்க்கும் பழக்கம் போய் உழுவதற்கு எல்லாம் இப்பொழுது எங்கள் வீட்டில் டிராக்டர் தான்.

மீண்டும் வருமா மாட்டுவண்டி என் நினைவுகளை சுமக்க.

என்னமோ போங்க




என்ன பண்றாங்க ஏது பண்றாங்க ஒரு மண்ணும் புரிய மாட்டிங்குது.மெத்த படிச்சா மேதாவிகள் வருசத்திற்கு ஒரு முறை பட்ஜெட் தாக்கல் பண்றாங்க நம்ம பாராளுமன்றத்தில.கோட்டு,சூட்டு போட்டு கிட்டு கைல ஒரு தோல் பையா வச்சுகிட்ட டிவி காரங்க காமெராவுக்கு முன்னாடி பொட்டிய தொக்கி காட்டு உள்ளார போறாங்க.போய் அந்த பட்ஜெட் தாக்கல் பண்ணிட்டு ,இது ஏழைகளுக்கான பட்ஜெட் ,விவசாய மக்களுக்கு ஆனா பட்ஜெட் ,மக்களுக்கு ஆனா பட்ஜெட் அப்படீனு வெளில வந்து சொல்லறாங்க.பெரிய பெரிய டிவி காரங்களும் நாலஞ்சு மேதாவிகளை கூட்டிட்டு வந்து உட்கார வச்சு ஒரு வாரத்துக்கு பட்ஜெட் பத்தி பேசறாங்க .

அப்புறம் ஆளுங்கட்சி அரசியல் வாதிகள் இது நான் பார்த்ததிலே மிக சிறந்த பட்ஜெட் ,மக்களுக்கான பட்ஜெட் என்று சொல்லுவாங்க.எதிர்க்கட்சி காரங்க என்ன சொல்லுவாங்க இது மக்களுக்கு மேலும் சுமை அளிக்க கூடிய பட்ஜெட் ,தொலைநோக்கு திட்டங்கள் எதுவும் இல்ல என்று சொல்லுவாங்க.சரி விடுங்க

இப்ப என்னுடைய கேள்வி என்னன்னா இத்தன வருசமா பட்ஜெட் போடுறீங்களே ஏன் ஏழை இன்னும் ஏழையாகவே இருக்கிறான்?விவசாய் துறைக்கு இவ்வளவு நிதி அப்படீனு சொல்வீங்க அப்புறம் ஏன் விவசாய் தற்கொலை செஞ்சுகுறாங்க? ஏழை களுக்கான பட்ஜெட் சொல்லறீங்க ஆனா பணக்கறாங்க மேலும் பணக்காரங்க ஆகிகிட்டு இருகாங்க ஏழை மென்மேலும் ஏழை ஆகிட்டு இருகாங்க? ஏன் இந்த பொருளாதார இடைவெளி?அதுல வரி குறைப்பு இதுல வரிகுறைப்பு அப்படீனு சொல்றீங்க ஆனா இங்க விலை வாசி விர்ருனு ஏறிட்டு இருக்கு அது எப்படி சாமி?

இதுக்கு விடை தெரிஞ்ச யாரவது எனக்கு புரியிற மாதிரி சொல்லுங்கோ.

Jul 4, 2009

கூகிள் இணையதளத்தால் பூமியின் சுற்று சூழலுக்கு பாதிப்பா?


இணைய உலகத்தில் முடிசூட ராஜாவான கூகிள் இணையதளத்தை பற்றி இணையம் உபயோகிக்கும் அனைவரும் தெரிந்து இருப்போம்.நாம் தேடும் தகவல்களை வினாடிக்கும் குறைவான நேரத்தில் நமது கண்முன்னே தகவல்களை கொண்டு வந்து கொட்டுகிறது .மற்றும் அதன் பல்வேறு விதமான சேவைகளால் பெரும்பாலான இனணயம் உலவும் மக்களை தன் பக்கம் ஈர்த்து வருகிறது .பிரமாண்ட தொழில் நுட்பத்தில் மிக எளிய நடையில் அனைவரும் பயன் படுத்துமாறு அதன் ஒவ்வொரு சேவையும் இருக்கிறது .இப்படி பல்வேறு புகழுக்கும் ராஜாவான கூகிள் தனது சர்ச் என்ஜின் சேவையால் பூமியின் சுற்று சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது எப்படி ?

அதாவது நமக்கு ஏதேனும் தகவல் தேவை பட்டால் நாம் உடனே செல்வது கூகிள் தேடுபொறியை தான் .உதாரணத்திற்கு ஒரு மென்பொருளை பற்றி தேடுகிறோம்" மென்பொருள் " என்று அடித்தவுடன் கூகிள் தனது ஒரு சர்வருக்கும் மட்டும் சென்று தேடாது பல்லாயிரம் மயில்களுக்கு அப்பால் உள்ள மற்ற சர்வேர்களிலும் மென்பொருள் குறித்த தகவல் இருக்கிறதா என்று தேடும் .அப்படி தேடும் வேகம் நொடிக்கும் குறைவானதே அந்த அளவிற்கு கூகிள் உள்கட்டமைப்பு வசதிகளை நவீன தொழிநுட்பத்தில் வைத்துள்ளது.அப்படி நாம் தேடும் தகவலை நம்மிடம் அதிவேகத்தில் கொண்டு வந்து சேர்ப்பதற்கு கூகிள் அதிக அளவு மின்சாரத்தை எடுத்துகொள்கிர்றது. இந்த ஒரு நிகழ்வால் மட்டும் அதாவது நாம் தேடும் ஒரு தகவல்களுக்கு (7g)அளவுக்கு கரிமில வாயுவை வெளியிடுகிறது (co2).

அதாவது ஒவ்வொரு ரெண்டு தேடலுக்கும் கூகிள் வெளியிடும் கரிமில வாயுவின் அளவு எவ்வளவு தெரியுமா? ஒரு கப் தேநீர் தயாரிக்க எவ்வளவு எரிபொருள் வேண்டுமோ அந்த அளவிற்கு .ஒரு கப் தேநீர் தயாரிக்கும் பொழுது
(15g)கரிமில வாயு (co2).

கூகிள் தந்து அதிவேக தேடலுக்கு உலகத்தில் பல இடங்களில் தனது சர்வர்களை(data centres) நிறுவியுள்ளது.இதன் மூலம் ஒரு நாளில் இணயத்தில் தேடப்படும் தேடல்களில் நாற்பது சதவிகிதம் கூகிள் தேடுபொறி மூலம் மட்டும் மேற்கொள்ள பட்டு வருகிறது .இதன் மூலம் எவ்வளவு மின்சக்தி செலவிடப்படும் என்று கணக்கிட்டு கொள்ளுங்கள் .பூமியின் சுற்று சூழல் இதன் மூலம் மேலும் வெப்பமடையும் .மேலும் தகவல்களுக்கு
(http://enews.toxicslink.org/news-view.php?id=52)(Issue 9
January , 2009
)
(http://www.financialexpress.com/news/Google-searches-affect-environment/409508/)

அனால் கூகுளின் அங்கீகரிக்கப்பட்ட வலைப்பூவில் அவர்கள் சொல்வதோ -நாங்கள் எங்களது பொறியாளர்களின் கடின உழைப்பில் மேம்படுத்தப்பட்ட குறைந்த அளவே மின்சக்தி உபயோகிக்கும் (data centres)சர்வர்களை அமைத்துள்ளதாக அறிவித்துள்ளனர் .இந்த மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்தால் முன்பை விட ஐம்பது சதவிகிதம் குறைவாக மின்சக்தி உபயோகிக்கப்படும் என்று கூறியுள்ளனர்.மேலும் மின்சக்தி உபயோகத்தை குறைக்க பல்வேறு விதமான முறைகளை கையாண்டு வருகிறோம் என்று கூறியுள்ளனர்.http://googleblog.blogspot.com/
http://www.google.com/corporate/green/clean-energy.html

நாம் பயன் படுத்தும் கணினி கூட அதிக அளவு வெப்பத்தை ஏற்படுத்து கின்றது .அதனால் தேவை இல்லாத நேரத்தில் கணினியின் இயக்கத்தை நிறுத்தி வைப்பது நல்லது .

(blackle.com) என்ற இணயதளம் ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த ஹீப் மீடியா என்ற நிறுவனம் நிறுவி உள்ளது .இது ஒரு தேடுபொறிக்கான தளம் அடிப்படையில் கூகிள் இணையதளத்தின் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது.இணயதளத்தில் நாம் தேடல் மேற்கொள்ள படுவது மூலம் குறிப்பிட்ட அளவு மின்சக்தியை நாம் சேமிக்க முடியும் என்று அந்த இணயதளம் கூறுகின்றது .

எது எப்படியோ நாமும் நம்முடிய சார்பில் வெப்ப மாயம் ஆவதை தடுக்க சிறு சிறு முயற்சிகளை மேற்கொள்வோம்.

Jul 2, 2009

அட படிச்ச முட்டாள்களே


நம்ம மத்திய அரசாங்கம் கொஞ்சா நாளைக்கு முன்னாடி ஒரு சட்டம் கொண்டு வந்தங்கல்ல அது உங்களுக்கு நியாபகம் இருக்க இல்லையா .அதாவது பொது இடத்தில் யாரும் புகை பிடிக்க கூடாது,மீறினால் அபராதம் என்று முன்னாள் மத்திய சுகதாரத்துறை அமைச்சர் அன்புமணி ஒரு சட்டம் கொண்டு வந்தாருங்க நிறைய பேருக்கு அந்த சட்டம் மறந்து போயிருக்கும்.அந்த சட்டத்தை பத்தி வாய்கிழிய ஊரெல்லாம் ரெண்டு நாள் பேசுனாங்க மூணாவது நாள் பழைய குருடி கதவை திறடி என்ற கதையாய் அவ அவன் பொது எடத்துல நின்னு புகை பிடிச்சுட்டு இருக்கான்.

இப்ப எதுக்குடா நீ படிச்சவங்களை வம்புக்கு இழுக்குறே அப்படீனு கேக்குறீங்களா? படிச்சவங்க எப்ப பார்த்தாலும் படிக்காதவனை கண்டால் ஒரு இளக்காரமா ஒரு பார்வை பார்பான் என்ன அவன் அறிவு கம்மி எத சொன்னாலும் புரிசுக்க மாடீங்கறான் .சரி நாம படிச்சவுங்க தானே நம்மக்கு எது சொன்னாலும் புரியும் தானே.அப்புறம் ஏன் இன்னும் பொது இடத்துல புகை பிடிக்கறீங்க.

நாலு எழுது படிச்ச நாம அரங்சாங்கமோ அல்லது வேறு ஏதாவது ஒரு சமுதாய அமைப்போ தப்பு செஞ்சுட்ட வாய்கிழிய அவுங்கள பத்தி குறை சொல்ல்றோம் அல்லது திட்டுகிறோம்.ஆனா அரசாங்கம் இந்த பொது இடத்தில் புகை பிடிக்க தடை என்ற சட்டம் எதுக்கு போட்டாங்க.

1)பொது இடத்துல புகை பிடித்தால் உன்னை மட்டும் பாதிக்காது உன்ன சுத்தி இருகரவங்களையும் பாதிக்கும் அதனால் அந்த சட்டம் போட்டாங்க.
2)இதனால் என்ன நன்மை சுற்றுசூழல் மாசு அடைவது சிறிதளவேனும் குறிக்கிறது.
3)இந்த சட்டதினால பொது இடத்தில் முக்கியமா ,கடைகள் ,பேருந்து நிறுத்தங்கள்,பூங்காக்கள் போன்ற இடங்களில் குழந்தைகள், பெரியவர்கள்,மற்றும் நோயுற்றவர்கள் போன்றவர்களும் இருப்பார்கள் அந்த கெட்ட நாற்றத்தில் இருந்து அவர்கள் இதனால் பெரிதும் பயன் அடைவார்கள்.

மொத்தத்தில் புகை பிடிகிறதை சுத்தமா நிறுத்தி விட்டால் உடலுக்கு இன்னும் நன்மை
இப்படி இன்னும் ஏராளமான நன்மைகள் சொல்லிடே போகலாம் .

இப்ப சென்னை பெரு நகரத்தில நெறைய இடங்களில் பார்த்து இருக்கிறேன் முக்கியமா மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்பவர்கள் இன்னும் பிற அலுவகங்களில் வேலை பார்பவர்கள் அலுவலங்களுக்கு பக்கத்தில் இருக்கும் கடைகளில் போய் சிகரெட் போன்றவற்றை வாங்கி சாலை ஓரங்களில் நின்று புகைத்து கொண்டு இருகிறார்கள் .என் படிக்கும் கல்லூரி மாணவர்கள் கூட பொது இடத்தில் தான் இன்னும் புகைத்து கொண்டு இருகிறார்கள் .இன்னும் சொல்ல போன சட்டத்தை காவல் காக்க வேண்டிய காவலர்களே அந்த தப்ப பண்ணிட்டு இருக்காங்க .

இவங்க எல்லாம் மெத்த படிச்சவங்க தானே அரசாங்கம் புதுசா வரி போட சட்டம் கொண்டு வந்த ஆய் ஊய் கூச்சல் போடறவுங்க தானே.இந்த பொது இடத்தில புகைக்க தடை என்ற சட்டத்தை ஏன் பின்பற்ற தெரியல .அப்படி செஞ்சா அவுங்க உடம்புக்கும் நல்லதுதானே.அதுமட்டுமா புகையால் ஏற்படும் தீமைகளையும் நீங்க மத்தவங்களுக்கு சொல்லி புரிய வைக்க முடியும்.

கிராமத்துல சொல்லுவாங்க படிக்காதவனை விட படிச்சவங்க தான் இப்ப அதிகமா தப்பு பண்றாங்கன்னு.

தெரிந்ததே தப்பு செய்கிறவர்கள் படித்த முட்டாள்கள் தானே ?

Jun 29, 2009

தமிழ் சினிமாவும் -சசிகுமார் என்ற கலைஞனும்



தமிழ் சினிமாவின் முகம் மெல்ல மெல்ல மாறிக்கொண்டு இருக்கிறது ,அந்த முகத்தை மாற்றுவது யார் பல புதுமுக இயக்குனர்களும் ,சினிமா ரசிகர்களும் தான் .முன்னெல்லாம் சினிமா என்றால் கதாநாயகனை மட்டும் முன்னிறுத்தி படத்தை எடுத்து கொண்டு இருந்தார்கள் (இன்றும் சில திருந்தாத ஜென்மங்கள் அப்படிதான் எடுத்து கொண்டு இருகிறார்கள் ).நடிகர்களுக்கு ஏற்ற கதைகள் போய் கதைக்கு ஏற்ற நடிகர்கள் தான் தேவை என்ற நிலைக்கு தமிழ் சினிமாவுலகம் வந்துள்ளது என்று சொல்லலாம்.பிரம்மாண்டம் என்பது கதயே தவிர அதில் நடிக்கும் நடிக,நடிகர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தற்பொழுது வந்த சில வெற்றி படங்களே உதாரணம் .

தொழில் நுட்பத்தில் எவ்வளவோ முன்னேறிவிட்ட தமிழ் திரை உலகம் அதை வைத்து கொண்டு படத்தை ஒட்டி விடலாம் என்று நினைத்து கதையே இல்லாமல் காலை தேய்த்து நடுக்கும் பொழுது தீபொறி வருமாறு செய்வதும் ,மூச்சுக்கு முன்னூறு தடவை பொறி பறக்கும் வசனங்கள் பேசுவதும் இப்பொழுது எடுபடுவதில்லை.எதார்த்தமான கதை,ஒரு பகுதியின் கலாச்சாரம்,மொழி ,ஆகியவற்றை பிரதிபலிக்கும் படங்களே வெற்றிநடை போடுகின்றன.ஓவரான பில்ல்டப்புகளை ஓட ஓட விரட்டு கின்றனர்.இந்த மற்றம் தான் தமிழ் சினிமா விற்கு நல்லது.

இப்ப சசிகுமாரை பற்றி பாப்போம் கடந்த ஆண்டு எவரும் எதிர்பார்கவன்னம் சுப்ரமணியபுரம் என்ற படம் தமிழ் திரை உலகத்தில் மிக பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. புதுமுக நடிகர்கள்,புதுமுக இசை அமைப்பாளர் என்று பெரும்பாலும் புதுமுகங்கள் நடித்த இந்த படம் சக்கை போடு போட்டது .அதை தயாரித்து இயக்கி,ஒரு நடிகராகவும் அந்த படத்தில் நடித்து வெற்றி பெற்றுள்ளார்.யாரும் இந்த படத்தின் கதையை தயாரிக்க முன்வராத காரணத்தினால் தானே தயாரித்தார்.இந்த படம் சினிமாவில் ஒரு மலர்ச்சியை ஏற்படுத்தியது .

இந்த வருடம் வெளியான பசங்க படத்தை எடுத்து மறுபடியும் தான் ஒரு சிறந்த தயாரிப்பாளர் என்று நிருபித்து விட்டார்.இவர் தயாரித்த பசங்க படம் வேறு சில தயாரிப்பாளர்களால் நிராகரிக்கப்பட்டு கடைசியில் இவரிடம் வந்து சேர்ந்தது.அதை அப்படியே தயாரித்து நல்ல கதை அம்சம் கொண்ட படங்களின் தயரிப்பாளர் என்ற நற் பெயரையும் வாங்கியுள்ளார் .அதோடு நின்றார நாடோடிகள் படத்தில் மறுபடியும் நடித்து அந்த படமும் வெற்றி கரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது .ஒரு தயாரிப்பாளராகவும் ,ஒரு இயக்குனராகவும் ,ஒரு நடிகர்ரகவும் வெற்றி பெற்றுள்ள சசிகுமாரை எவ்வளவு பாராட்டினாலும் தகும் .சசிகுமாரின் இந்த வெற்றி தொடர என் வாழ்த்துக்கள் .

Jun 26, 2009

கூகிள் தளத்தை முடக்கிய மைக்கேல் ஜாக்சன்














அமெரிக்கா
பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணத்தை பற்றி செய்தி அறிய இணயத்தில் அதிக அளவு கூகிள் தளத்தை பயன்படுத்தியதால் கூகிள் செய்தி தளத்திற்கான சர்வர்கள் அறை மணி நேரம் ஸ்தம்பித்து விட்டது .இதனால் கூகிள் சர்வர் சிறிது நேரம் செய்திகளை அளிப்பதில் சிறிது தடங்கல் ஏற்பட்டது.

இதே போல் தற்பொழுது அதிக அளவில் பிரபலமாகி வரும் (twitter) இணையதளமும் ஸ்தம்பித்து விட்டது . இங்கிலாந்து நாட்டை சேர்ந்த (B.B.C) இணையத்தளம் இன்று நாற்பத்தி ஆறு சதவிகிதம் வரை டிராபிக் உயர்ந்துள்ளது என்று அறிவித்துள்ளது . செய்திக்காக உலக அளவில் பிரபலாமான இணையதளங்களிலும் இதே நிலைமை தான்.

அந்த நபரின் இறந்த செய்தியை முதலில் அறிவித்தது (www.tmz.com)என்ற இணையத்தளம் .இந்த செய்தி படி படியாக சோசியல் நெட்வொர்க் தளங்களில் பரவி பின்பு வலைத்தளங்கள் மூலமாக உலகம் முழுதும் அதிக அளவில் சென்றடைந்தது .

இன்று கூகிள் (Trends) அதிக் அளவு தேடப்பட்ட தகவலும் மறைந்த பாப் பாடகரை பற்றியதே.இன்று முழுவதும் இணையம் மூலம் விவாதிக்கப்படும் பத்து முக்கியமான தலைப்புகளும் மைக்கேல் ஜாக்சன் பற்றியதே.

Jun 25, 2009

ஐ .நா சபையும்- நம்ம ஊரு போலீசும்

(யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதவில்லை)










ஐ.நா சபை -நம்ம ஊரு போலீஸ் ஓர் ஒப்பீடு

  • .நா. சபை உலக பிரச்னைக்கு பஞ்சாயத் பண்றதுக்கு ஆரம்பிச்ச ஒரு அமைப்பு.
நம்ம போலீஸ் உள்ளூரு பஞ்சாயத்து பண்றதுக்கு ஆரம்பிச்ச அமைப்பு.

  • .நா. சபைய பார்க்க போகனும்னா பிளைட் புடுச்சு அமெரிக்காவுக்கு போகணும்
நம்ம போலீச பார்க்க போகனும்னா அஞ்சு குயர் பேப்பர் வாங்கிட்டு போகணும் பார்த்த பிறகு குளிர் காலமா இருந்த டி காபி வாங்கி கொடுக்கணும் ,வெயில் காலமா இருந்த ஆப்பிள் ஜூஸ் ,ஆரஞ்சு ஜூஸ் வாங்கிகொடுக்கணும் (அவ்வளவுதான்)

  • .நா. சபை ஆரம்பிக்க பட்டது உலக நாடுகள் பிரச்சனை முக்கியமா போர் பிரச்சனை தீர்பதற்கு ஆனா இப்பவும் போர் நடந்து தான் இருக்கு.
நம்ம போலீஸ் வேலைக்கு போட்டது கொலை கொள்ளை போன்றவற்றை தடுக்க ஆனா இப்பவும் நடந்துட்டு தான் இருக்கு.

  • .நா. சபை போர் நடந்து முடுஞ்ச பிறகு பிளைட்ல உணவு பாக்கெட் போடுவாங்க. (இருக்கிறவன் எல்லாம் செத்த பொறவு யாருக்கு போடரான்குனு தெரியல)
நம்ம போலீஸ் கொலை ,கொள்ளை நடந்த பிறகு தான் அந்த இடத்துக்கே வருவாங்க .

  • .நா. சபைல போர் நடக்கற பொழுது போர்டுக்கும் நாட்டின் மீது கண்டனம் தெரிவிச்சு தீர்மானம் மட்டும் நிறைவேதுவாங்க(அவ்வளவுதான் ).
நம்ம போலீஸ் கேஸ் கொடுக்க போனம்னா புகாரை மட்டும் வாங்கிக்குவாங்க விசாரணை எல்லாம் பண்ண மாட்டாங்க. (சில சமையம் புகாரை எழுதி ஏன் பேப்பர் ர வெட்டியா தீகனும்னு விட்ருவாங்க)

  • .நா. சபை எப்பவும் கென்யா ,காங்கோ போன்ற குட்டி குட்டி நாட்ல தப்பு நடந்த உடனே பொய் பேசி தீர்த்துட்டு உலக அமைதிக்கு நாங்க என்றும் பாடுபடுவோம் அப்படீனு சொல்லிடு திரிவாங்க .(குட்டி நாடுகளின் பட்டியலில் இலங்கை வராது)*
நம்ம போலீஸ் எப்பவும் கொலை செய்றவனை ஜீப்ல ஏத்தி உட்டுட்டு பிக் பாக்கெட் அடிக்கறவன்,குழந்தை களிடம் முட்டைய புடுங்கி திங்கறவன் போன்றவர்களை புடுச்சு உள்ள போட்டுட்டு சட்டம் தன் கடமையை சரியா செய்யும் என்று நியூஸ் பேப்பர் காரங்களுக்கு பேட்டி கொடுக்கறது.
  • .நா. சபைல அவுங்க ஆதரவு வேணும்னா ஒட்டு வேணும்.
நம்ம ஊரு போலீஸ் ஆதரவு வேணும்னா நோட்டு வேணும் .(அதாங்க பணம் வேணும் )

  • .நா. சபைகிட்டேயும் படை இருக்கு அமைதி படைன்னு இருக்குனுதான் பேரு அதனால எப்பவும் அமைதியாத்தான் இருக்கும்.
நம்ம போலீஸ் கிட்டயும் படை இருக்கு நீங்க தமிழ் வரமாதிரி எப்பவும் சம்பவம் முடுஞ்ச பிறகுதான் வரும் வந்து ஒரு வாரத்துக்கு அங்கேயே இருக்கும்.

  • .நா. உரிமையாளர்கள் ,அமெரிக்கா ,இங்கிலாந்து ,சீனா ,ரஷ்ய ,பிரான்ஸ் போன்ற நாடுகள். (அப்பப்ப நீயா நான்னு பிரச்சனை வரும் )
நம்ம ஊரு போலீஸ் உரிமையாளர்கள் ஆளும் கட்சிகள் மற்றும் அவர்கள் உறவினர்கள் .

  • .நா.சபை செயல்பாடுகளின் சாமீபத்திய உதாரணம் இலங்கையில் நடந்த இன அழிப்பு போர்.
நம்ம போலீஸ் செயல்பாடுகளின் சமீபத்திய உதாரணம் சட்ட கல்லூரி வாசலில் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தது.

இன்னும் சொல்லிடே போகலாம் எழுதுறதுக்கு தான் பிளாக்கர் அக்கௌன்ட் பத்தாது.


75ecx2ky8v

Jun 24, 2009

பன் டிவியும் -குப்பை லாரியும்

யாரையும் புண்படுத்துவது என்னுடைய நோக்கம் அல்ல(ஏற்கனவே அவர்கள் புண்படுத்தியதால் )


பன் டிவி -குப்பை லாரி என்ன ஒற்றுமை சிறு விளக்கம் .

குப்பை லாரி பற்றி முதலில் பார்போம்.
தெருவுல கிடக்கிற குப்பய கூட்டி கூடைல போட்டு அந்த கூடைல இருக்கிற குப்பைய கொண்டுபோய் குப்பை அல்ல வர்ற லாரில போட்ட அந்த குப்பை லாரி போகிற பக்கமெல்லாம் ரோட்ல ரெண்டுபக்கமும் கொட்டிட்டே போயிடும் .குத்துமதிப்பா பார்தமன்னா நூறுகிலோ குப்பை லாரில இருந்துதுனா அது கடைசியா பொய் சேர்றப்ப அம்பது கிலோ குப்பை தான் இருக்கும் .குப்பை லாரி குப்பய அல்லுதோ இல்லையோ அது தன்னையும் நாரடுச்சு ஊரையும் நாரடுச்சுடும்.

பன் டிவி
அதே மாதிரி யாரும் வாங்கதா குப்பை படங்களை குத்தகை கணக்கா பேசி வாங்கிட்டு வந்தறாங்க.சரி குப்பை படங்களை வெச்சு அவுங்க என்ன பொங்கலுக்கும் தீபவளிக்குமா போடமுடியும் லாபம் பார்கனும்ள அதனால் ஒவ்வொரு ஊர்ல இருக்கிற திரை அரங்குகளை புடுச்சு அந்த குப்பை படங்களை வெளியிடறாங்க.குப்பய யாராச்சும் போய் பார்பாங்களா இல்லைல அதனால தன் கிட்ட இருக்கிற டிவி பலத்தால அந்த குப்பய கலர் ஜிகினாவ காட்டி வீட்ல இருக்கிற எல்லாத்தையும் தியேட்டருக்கு ஒடவைக்குறாங்க .அங்கே போன பிறகு தான் தெரியும் அது ஜிகினா இல்லை குப்பை கிடங்கு என்று . என்ன ஆச்சு -குப்பை படம் வீட்டையும் குப்பை ஆக்கிடுச்சு தியேட்டரையும் குப்பை ஆகிடுச்சு.

அதனால இப்ப பன் டிவி பார்கிறதுக்கே நிறைய பேருக்கு வெறுப்பாய் இருக்குது .எப்ப பாத்தாலும் ஒரே கூச்சல் கும்மாளம்னு .எப்படி பார்பாங்க அதன் தரம் தான் தாழ்ந்து விட்டதே .ஆத்துல விழுந்தேன் படத்தை வெளியிட்டது முதல் அதன் போக்கே மாறிவிட்டது .கதையே இல்லாத திரை காவியங்களுக்கு திரைவிமர்சனம் அரைமணி நேரம் வேறு. பட வரிசையில் பத்து வாரத்திற்கு முதலிடம் என்னத்த சொல்லறது .அவர்கள் வெளியிடும் அண்ட புளுகை மக்கள் இப்பொழுது வெகுவாக புரிந்து கொண்டு இருகிறார்கள் என்பது நிஜம் .

இப்பவும் ஒன்னும் கெட்டு போகலை நல்ல தரமான படங்களை வெளியிட்டால் மக்களுக்கு ஜிகினா கூட காட்ட தேவை இல்லை அவர்களே எடுத்து பூசிகொல்ல்வார்கள் உங்கள் ஜிகினவை பிறரிடம் காட்ட.

Jun 23, 2009

நகைச்சுவை -சட்டசபைக்கு போகாமல் சத்தம் போட புதிய வழி

(யாரையும் புண்படுத்த நோக்கில் எழுதப்பட்டது அல்ல )




சட்டசபை கூட்டமோ பாராளுமன்ற கூட்டமோ எப்ப நடந்தாலும் அமளி துமளி ஆகறது சகஜமா போச்சு.வெளிநடப்பு செய்யறதும்,கைநீட்டி பேசறதும் இப்படி ஒரே பொழப்ப போச்சு.அப்புறம் என்ன சபை ஒத்தி வைக்கபடுகிறது என்று சபாநாயகர் தொண்டைவரள கத்துவார்.

மக்கள் வரிப்பணத்துல தேர்தல் நடத்தி ஒட்டு போட்டு பாராளுமன்றத்துக்கும் சட்டசபைக்கும் போங்க ராசா அப்படீனு அனுப்பி வச்சறோம்.அதுல பெரும்பாலானோர் சட்ட சபைக்கு போய் மக்கள் பிரச்சனையை பேசறாங்களோ இல்லையோ சத்தம்போட்டு வெளினடப்பவது செய்து டிவி சானலுக்கு பேட்டி கொடுக்குறாங்க.அதுல இன்னும் சில சட்டசபை உறுப்பினர்கள் அதுக்கும் வரமாட்டாங்க கேட்ட நேத்து வாசப்படில வழுக்கி உளுந்துடேன் போன்ற உன்னதமான காரணங்கள் சொல்வார்கள்.அதிலும் பாரளுமன்ற உறுப்பினர்கள் டெல்லிக்கு விமானத்துல(வரி பணத்துல)டாட்டா காடீட்டு போவாங்க ஆனா அங்க போய் பாராளுமன்றத்துக்கு போகமாட்டாங்க குளிர்கால கூட்ட தொடர் குளிர் அடிக்குது அதான் போகமுடியல அப்படீனு சொல்வாங்க.

என்னடா எப்ப சட்ட சபை கூடுனாலும் அஞ்சாவது படிக்கிற பள்ளிகொட பசங்க மாதிரி ஒரே சத்தம் போட்டு அடுச்சு புடுச்சு ஓடி திரியரார்களே நாம கட்டற வரி பணம் எல்லாம் இப்படி இவுங்க கூச்சல் போடறதுக்கே போயிடுதே இதுக்கு எதாவது வேற வழியும் இருக்க பணம் மிச்சம் ஆகணும் அதே சமயம் சட்டசபையும் நடக்கணும் என்ன பன்னால்னு குப்புற படுத்து யோசிசப்ப குபிர்னு ஒரு ஐடியா வந்துச்சு அது என்ன அப்பிடீனா ?

இந்த ஐடியா -யாவை முதல்ல நம்ம சட்ட சபை உறுப்பினர்களுக்கு பரிசோதித்து பார்க்கலாம் அப்புறமா டெல்லிக்கு போகலாம.

முதல்ல நம்ம தமிழ்நாட்ல இருக்கிற (234)சட்டசபை தொகுதி உறுப்பினர்களுக்கும் ஒவ்வொரு கம்ப்யூட்டர் ,வெப்காம் ,ஹெட் போன் அப்புறம் ஒரு பி.எஸ்.என். எல் இன்டர்நெட் இணைப்பு (லிமிடெட் download) ஒன்று அவர்கள் வசிக்கும் வீட்டிற்க்கே கொடுத்துவிட வேண்டியது .அப்புறம் ஆளுக்கு ஒரு ஜிமெயில் அல்லது யாஹூ இலவச (இலவசம்தான் ரொம்ப புடிக்குமே )அக்கௌன்ட் ஓபன் செய்து கொடுதர்றது .அப்புறமென்ன கூட்டம் கூடி சத்தம் போடணுமோ அப்பெல்லாம் (234)உறுபினர்களுக்கும் ஒரு மெயில் அனுபிடனும் .எல்லோரையும் ஒரே நேரத்தில் ஆன்லைன் -நில் வரச்சொல்லி என்ன பேசனும்னு தோணுதோ அத பேசிட்டு இல்ல அவங்க திருவுருவத்தை பார்கனும்ன வெப்காம்-ல பார்த்துட்டு சத்தம் போடலாம்.முக்கியமான கோப்புகள் அனுப்ப வேணும்னா ஜிமெயில் அல்லது யாஹூ மெசெஞ்சர் மூலமா அனுப்பிவிடலாம.

உறுப்பினர்கள் யாராவது ரொம்ப சத்தமா பேசினாங்கன்னா நம்ம மின்துறை அமைச்சர் கிட்ட சொல்லி அந்த தொகுதி முழுக்க கரண்ட் கட்டு பண்ணீடலாம் .அப்புறம் அடுத்தநாள் வரைக்கும் அவற்றை சாட்டிங் குழுமத்தில் சேர்த்துக்க கூடாது போன்ற அவசர சட்டம் கொண்டு வரலாம் .ஆளுங்கட்சிக்கு ஒரு குழுமமும் எதிர்கட்சிக்கு ஒரு குழுமமும் அதை கட்டு படுத்தறது சபாநாயகர் தான் (admin)அல்லது (moderator).இதன் மூலம் நம்ம வரிப்பணம் ரொம்ப மிச்ச படுத்தலாம்.

எப்படி எல்லாம் மிச்சம் ஆகுதுன்னு கேகுறீங்களா

1)நம்ம உறுப்பினர்கள் யாரும் சென்னைல இருக்கிற சட்டசபைக்கு வர வேண்டியதில்லை .இதன் மூலம் நம்ம உறுப்பினர்களுக்கு தருகிற பயணப்படி மிச்சம்.(உறுபினர்களுக்கும் அவர்கள் பள்ளி ,கல்லூரி போன்ற தொழில் பாதிப்பு அடையாது )
2)உறுப்பினர்கள் யாரும் வராததுனால சென்னைல இருக்கிற சட்டமன்ற உறுப்பினர் விடுதியை வாடகைக்கு விடலாம் .இதன் மூலம் அரசுக்கு கணிசமான வருமானம் கிடைக்கும் .
3)அதே போல சட்டமன்ற வளாகத்தில் இருக்கும் கான்டீனை நேராக அண்ணா நினைவிடம் அல்லது எம்.ஜி.ஆர் நினைவிடம் பக்கத்தில் இடமாற்றலாம் எதிர்காலத்தில் உன்னா விரதம் இருக்கும் சமயத்தில் மிகவும் உபயோகமாக இருக்கும்.
4)அதே போல உறுப்பினர்கள் ஆளுக்கு ஒரு காரில பவனி வருவதால் சென்னையில் கடும் போக்குவரத்து ஏற்படும் ஆனால் இந்த ஆன்லைன் முறையால் உறுப்பினர்கள் யாரும் வரவேண்டிய கட்டாயம் இல்லாத காரணத்தால் பொது மக்கள் பெரிதும் பயன் அடைவர்.

உறுப்பினர் நிபந்தனை .
.கண்டிப்பாக யாரும் மற்ற சாட்டிங் குழுமத்துக்குள் செல்ல கூடாது
.பாதியில் யாரும் சயின் அவுட் செய்ய கூடாது அப்படி செய்தால் ஒரு வாரத்திற்கு அவர்கள் வீட்டில் மின்சாரம் துண்டிக்க படும்
.மின்சாரம் தரவும் தராமல் போவதும் அந்த அந்த சமயம் பொருத்தது அதை பற்றி யாரும் புகார் மனு வாசிக்க கூடாது .


என்ன எப்படி இருக்குங்க நல்லா இருந்த நல்லா இருக்குனு சொல்லுங்க இல்லேன்னா நல்லா இல்லைன்னு சொல்லுங்க

Jun 20, 2009

உங்கள் வலைத்தளத்தை விளம்பரப்படுத்த ஒரு இலவச இணையத்தளம்

நமது வலைத்தளங்களை விளம்பரப்படுத்த பலரும் பல்வேறு விதமாக முயற்சிப்போம். இன்னும் சில பேர் அதிக பச்சமாக கூகிள் அட்வோர்ட்ஸ் மூலம் கூட பணம் கட்டி விளம்பர படுத்துவார்கள் .

(அட்க்ரிட்வோர்க்) என்ற இந்த இணைய தளம்- இணையதளங்கள்,பதிவு தளங்கள் போன்றவற்றை இலவசமாக விளம்பரப்படுத்தும் வசதியை கொண்டுள்ளது .

நமது பதிவு தளங்களை விளமப்ரபடுத்த முதலில் அதில் உறுப்பினர் ஆகவேண்டும் .பின்பு நமது தளத்தின் முகவரியை அங்கு பதித்து பின்பு அவர்கள் தரும் (html code) ஐ நமது தளத்தில் ஏற்றி கொள்ள வேண்டும் அவ்வளவுதான் .

எப்படி நமது தளங்கள் விளம்பரம் ஆகும் என்று கேட்குறீர்களா?.அட்க்ரிட்வோர்க் தளத்தில் பல்லாயிரம் இணைதளங்கள் உறுப்பினராக உள்ளன . அதன் மூலம் நமது தளங்கள் அவர்களுடைய தளத்தில் விளம்பரபடுத்தப்படும்.அதற்க்கு பதிலாக மற்ற தளங்களின் விளம்பரம் நமது தளத்தில் வெளியிடப்படும்.
நமது தளத்தை பற்றிய விளம்பரம் எத்தனை முறை மற்ற தளத்தில் வெளியிட பட்டுள்ளது என்றும் விரிவாக இந்த அட்க்ரிட்வோர்க் இணையதளத்தில் பார்த்துக்கொள்ளலாம் .மேலும் எவ்வளவு பேர் நமது தளத்தின் முகவரியை கிளிக் செய்து உள்ளனர் என்றும் பார்த்து கொள்ளலாம்.


மேலும் கூகிள் அட்வோர்ட்ஸ் உள்ளதை போலவே நமது தளத்திற்கான விளம்பர வரிகளை சொந்தமாக அமைத்து கொள்ளலாம்.நமது இணையத்தளத்தில் வரும் அட்க்ரிட்வோர்க் விளம்பர பலகை அளவையும் நம் மாற்றி கொள்ளலாம் .
இணையதளத்திற்கு செல்ல இங்கே அழுத்தவும்

Jun 18, 2009

முகம் மாறும் மக்கள் தொலைக்காட்சி!


அரசியல் கட்சிகள் தங்களுக்கு என்று ஒரு தனிப்பட்ட தொலைக்காட்சி சானல்களை வைத்துள்ளன என்பதை யாவரும் அறிந்ததே.தமிழ் தமிழ் என்று தமிழை கொன்று சினிமா அதை சார்ந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி கொண்டிருக்கும் தொலைக்காட்சிகளுக்கு மத்தியில்,மக்கள் தொலைக்காட்சி தனது வித்யாசமான அணுகுமுறையால் தனக்கென தனி இடத்தை பெற்றது.

பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அவர்களால் தொடங்கப்பட்ட இந்த மக்கள் தொலைக்காட்சி .மண் பயனுற வேண்டும் என்ற கூறிய நோக்கத்திற்கு தொடங்கப்பட்ட இந்த தொலைக்காட்சி மற்ற தொலைக்காட்சிகளை காட்டிலும் வித்யாசப்பட்டது .அரசியலில் ஆயிரம் பல்டி அடித்தாலும் மக்கள் தொலைக்காட்சி எந்த வித சமரசமும் செய்து கொள்ளவில்லை தனது நிகழ்ச்சிகளில் .

சுதந்திரதினம், பொங்கல், தீபாவளி நடிகைகள் பேட்டி எடுக்கும் தொலைகாட்சிகளுக்கு மத்தியில் மக்கள் சார்ந்த கிராமிய மனம் கமழும் நிகழ்ச்சிகளை வழங்கி தமிழ் மக்கள் இடத்தே ஒரு நற்பெயரை பெற்று இருந்தது .
கோட்டு,சூட்டு போட்டு கொண்டு செய்திவாசிபவர்கள் மத்தியில் சட்டை ,வேட்டி,வெள்ளை துண்டு அணிந்து செய்திவாசிபதிலும் வித்யாசம் காட்டியது ,அதிலும் முடிந்தவரை தமிழ் பெயரையே பயன்படுத்தி வந்தார்கள் .நிகழ்ச்சிகளில் ஒரு தரம் முகம் சுளிக்க வைக்காத காட்சி அமைப்பு என்று பலதரப்பிலும் பாராடப்ப்டது.

விளம்பரத்திலும் உடலுக்கு கேடு விளைவிக்கும் குளிர்பானங்கள் போன்றவற்றை ஏற்று கொள்ளவதில்லை என்ற கட்டுப்பாடு .மக்களை ஆட்டுவிக்கும் மெகா சீரியல் நாடகங்களுக்கு மத்தியில் சந்தன காடு ,ஈழம் நேற்றும் இன்றும் ,நேதாஜியின் வரலாறு போன்ற தொடர்களை ஒளிபரப்பி தமிழ் தொலைக்காட்சி நேயர்களை தன் பக்கம் கவர்தது .

இப்படி அனைத்திலும் வித்யாசம் காட்டிய இந்த மக்கள் தொலைகாட்சியில் டெலி
ஷாப்பிங் விளம்பரங்கள் அண்மைக்காலமாக ஒளிபரப்ப படுகிறது .வித்யாசமான நிகழ்ச்சிகளை கொடுக்க முடியாத மற்ற தொலைக்காட்சிகள் தான் இப்படி டெலி ஷாப்பிங் விளம்பரங்களை காட்டி காலம் கடத்தி கொண்டு இருகிறார்கள் .ஏன் இந்த மாற்றம் மக்களுக்காக ஒரு தொலைக்காட்சி என்ற பெயர் பெற்ற இந்த தொலைக்காட்சி எப்படி தனது நிகழ்ச்சிகளை சமரசம் செய்து கொண்டது .
விரைவில் இயேசு அழைக்கிறார் போன்ற நிகழ்ச்சிகளும் ஒளிபரப்ப படும் என்று வார ஏடுகளில் படித்தேன் .

மக்கள் தொலைக்காட்சி ஏன் இப்படி ஆகிவிட்டது?. மாற்றத்தை கொண்டுவந்து உலகு வாழ் தமிழர்களிடையே ஊடக புரட்சி செய்த இந்த தொலைக்காட்சி மீண்டும் தனது பழைய முகத்திற்கு மாற வேண்டும் .மாறுமா ?

Jun 6, 2009

தீவிரவாதம் ஏன் ?

இன்று உலகத்தை அச்சமுற செய்து கொண்டு இருக்கும் விஷயம் தீவிரவாதம்.உலகத்தில் ஏதாவது ஒரு இடத்தில் தீவிரவாத தாக்குதல் நடந்து கொண்டு இருக்கிறது.அதில் பலியாவது பெரும்பாலும் அப்பாவி மக்கள் மட்டுமே.தீவிரவாதத்திற்கு நாடுகள் கிடையாது,மடங்கள் கிடையாது,மொழிகள் கிடையாது,அதற்க்கு தேவையானது உயிர்கள் மட்டுமே.

நமது இந்தியாதேசம் மிகப்பெரிய சாவல்களை சந்தித்து கொண்டு இருக்கிறது.நமது அண்டை நாடான பாகிஸ்தானும் இதற்க்கு விதிவிலக்கல்ல தினம் தினம் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது.வருட வருடம் நமது பாதுகாப்பு துறைக்கு ஒதுக்கும் நிதி அதிகரித்து கொண்டே வருகிறது.தீவிர வாதிகள் மிரட்டல் விட்டால் சில நாட்களுக்கு முக்கிய இடங்களில் பாதுகாப்பை அதிகபடுதுவதும் பின்பு ஒன்றும் நிகழாத பொது அந்த பாதுகாப்பை விளக்கி கொள்வதும் அன்றாட வேலையாய் போனது.அதிலும் தீவிரவாத மிரட்டல் காரணமாக அரசியல் வாதிகளுக்கும் ,பெரிய பெரிய தொழில் அதிபருக்கும் பல அடுக்கு பாதுகாப்பு அளிக்க பட்டு வருகிறது .மக்களின் வரிப்பணம் இப்படி தீவிரவாத தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கையில் செலவு செய்தால் ,ஏழைகள் அதிகம் வாழும் நம் தேசம் எப்படி முன்னேறும்.

வந்த பின் காப்பதற்கு பதிலாக வருமுன் காத்தால் இன்னும் நன்றாக இருக்கும் அல்லவா !.நம் நாட்டில் வறுமை இன்னும் கோர தாண்டவம் ஆடிக்கொண்டு இருக்கிறது,ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை நம் நாட்டில் அப்படி இருக்க
மக்கள் செலுத்தும் வரிபணத்தை முழுமையாக மக்களுக்காக செலவிட முடியவில்லை.நமது வரிப்பணம் இராணுவம் ,உளவு அமைப்புகளுக்கு செலவிடபடுகின்றன இருந்தும் என்ன பயன் ?தீவிர வாதம் இன்னும் வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது .

முதலில் நமது ஆளும் அரசுகள் தீவிரவாதத்தை பற்றி முறையாக ஆராயவேண்டும் .தீவிரவாதிற்கான அடிப்படைக்காரணம் வறுமை,போதிய கல்வி அறிவு இல்லாமை,வேலை இன்மை போன்றவைதான்.முதலில் நமது அரசு இந்த குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.
தீவிரவாதிகளில் பெரும்பாலும் இளைஞர்கள் தான் அதிகம் இருகிறார்கள்.எப்படி இந்த தீவிரவாத அல்லது தடை செய்ய பட்ட அமைப்புகளில் சேருகிறார்கள் அல்லது சேர்க்க படுகிறார்கள் ?.இந்த தீவிரவாத அமைப்புகளின் முதல் குறி வேலை இல்லாத இளைஞர்கள் மற்றும் வறுமையின் பிடியில் இருப்பவர்கள் தான் .வறுமை காரணமாக இந்த இளம் சமூகம் தீவிரவாதத்தை நோக்கி செல்கிறது .மனதளவில் உடைந்து கிடக்கும் இத்தகைய இளைஞர்களை சுலபமாக மூளை சலவை செய்ய பட்டு தீவிரவாதிகளாக மாற்றபடுகிறார்கள்.உனக்கு தேவையானதை நீ பெற்றுகொள்ள துப்பாக்கியை பிடிப்பது தப்பே இல்லை என்ற நிலைக்கு அவர்கள் கொண்டு வரபடுகின்றனர் .விளைவு அரசாங்கத்தை தன் பக்கம் திருப்ப
பொது இடங்களில் குண்டு வைப்பு இல்லை அரசு அமைப்புகள் மீது தாக்குதல் நடத்துதல் போன்றவற்றை செய்கின்றனர்.ஆனாலும் பெரும்பாலும் உயிரிழப்பதோ அப்பாவி மக்கள் மட்டுமே .

தீவிரவாதத்தை குறைக்க முதலில் தவிக்கும் மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதுதான் .இலவசமாக தருகிறேன் பேர்வழி என்று மக்களை முடக்காமல் இளைய சமுதாயத்தை முன்னேற்ற உறுதுணையாக இருக்க வேண்டும்.பாதுகாப்பாக செலவிடப்படும் பணத்தில் சிறிது ஏழைமக்களின் அடிப்படை தேவைகளுக்காக செலவு செய்தால் வறுமை ஒளியும்.வேலைவைபை பெறுகிறேன் என்று கூறிக்கொண்டு கணினி வேலையை மட்டுமே உருவாகாமல் மற்ற துறைகளிலும் வேலைவைபை உருவாக்க வேண்டும் .தடம் புரளும் இளைய சமுதாயத்தை நேர்வழியில் செல்ல அரசாங்கம் முன்வரவேண்டும். அப்பொழுது தான் இளைஞர்கள் இந்த நாட்டிற்க்கு தூணாக இருப்பார்கள் இல்லையேல் அவர்கள் மனம் துருவேறி துப்பாகியை தூக்கும். அது நம் நாட்டுக்கு தேவையா ?









May 30, 2009

ஆற்காட்டாரிடம் வெத்து வேட்டு வெள்ளச்சாமியின் நகைச்சுவை பேட்டி

(இது முற்றிலும் நகைச்சுவைக்காக மட்டுமே)
நமது தமிழ் ஊடக சிறப்பு நிருபர் வெத்து வேட்டு வெள்ளச்சாமி -ஒளிவிளக்கு துறை (மின்வெட்டு ) வீராசாமியுடன் நகைச்சுவை நேர்காணல்.

(நமது நிருபர் அவரின் நேர்காணலுக்கு காத்து கொண்டு இருக்கிறார் அப்பா பார்த்து மின்சாரம் கட் ஆகிடுச்சு ,என்னடா இப்படி ஆகிபோச்சே அப்பிடீனு நமது நிருபர் நொந்து கொண்டு இருக்கும் வேலையில் திடீர் என்று ஒரு வெளிச்சம் தென்படுகிறது என்ன வென்று பார்த்தல் நமது வணகத்துகூரிய ஒளிவிளக்கு துறை அமைச்சர் வீராசாமி கையில் விளக்கு ஏந்திய படி நடந்து வருகிறார்.வந்ததும் மேசை மேல் வெளக்கை வைத்து விட்டு உங்கள் பேட்டியை ஆரம்பியுங்கள் என்றார் )

நிருபர்:வணக்கம் சார்.

(சீக்கிரம் பேட்டிய ஆரம்பி பாஸு பீசு கட்டய புடுங்கறதுக்கு நேரமாச்சு என்று நினைத்த படியே )
ஒளிவிளக்கு :வணக்கம் வணக்கம் பேட்டியை ஆரம்பிங்க?

நிருபர் :சார் நடந்து முடுஞ்ச பாராளுமன்ற தேர்தலில் உங்கள் கட்சி அதிக இடங்களில் தமிழகத்தில் வெற்றி பெற்றுள்ளதை பற்றி என்ன நினைகிறீர்கள் ?

(எங்க ஆத்தா மேல சத்தியமா நா இத எதிர்பாக்கவே இல்ல என்று நினைத்து கொண்டு )
ஒளிவிளக்கு:இந்த வெற்றி நாங்க ஏற்கனவே எதிர் பார்த்துதான் ஆனா ?

நிருபர்:என்ன ஆனா சார் ?

(சுதாரித்து கொண்டு )
ஒளிவிளக்கு :ஆனாவும் இல்ல ஆவன்னாவும் இல்ல அடுத்த கேள்விய கேளுங்க

நிருபர்:நீங்க ஒரு பொது கூட்டத்தில தேர்தலில் எனது கட்சி தோல்வியை தழுவினால் அதற்க்கு நாந்தான் காரணம் என்று கூறினீர்களே அதை பத்தி இப்பொழுது உங்கள் கருத்து என்ன ?

(எதுக்கு இதய எல்லாத்தையும் கொடஞ்சு கொடஞ்சு கேக்குறான்)
ஒளிவிளக்கு: அது ஊடங்களில் திரித்து வெளியிடப்பட்ட செய்தி

நிருபர்:சார் உங்களால சிறு தொழில் செய்யறவுங்க எல்லாம் கடுமைய பாதிப்பு அடங்சுருக்காங்க


(ஏன்டா கரண்டு இருந்த குடுக்க மாட்டமா என்று நினைத்த படி )
ஒளிவிளக்கு: இது எதிர் கட்சிகள் திட்டமிட்டே பரப்புற பொய் ஏன் என்றால் நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு மெழுகுவத்தி தொழில்,ராந்தல் விளக்கு உற்பத்தி ,ஜெனரேட்டர் உற்பத்தி பன் மடங்கு வழங்துள்ளதே இதில் இருந்தே நீங்கள் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும் எங்கள் ஆட்சியில் சிறுதொழில்கள் பாதிக்க படவில்லை என்று

நிருபர்:சார் தேர்தலுக்கு முன்ன கொஞ்ச நாள் கரண்டே கட்டு ஆகறதில்ல தேர்தல் முடுஞ்சப்பரம் மறுபடியும் மின்வெட்டு இருக்கிறதா பொதுமக்கள் புலம்ப ஆரம்பிச்சுட்டாங்களே

ஒளிவிளக்கு:அதுக்கு காரணம் டேம்ம்ள(அனை) தண்ணி வத்தி போச்சு அப்புறம் பொள்ளாச்சி பக்கத்துல்ல கற்றாளை உற்பத்தி செய்ற பேன் விசிறி நாள் ஒடஞ்சு போச்சு அத கூடிய சீக்கிரம் ரெடி பண்நீருவோம்.

நிருபர்:உங்கள பதிவர்கள் நிறைய பேர் ஒட்டி ஒட்டி எழுதி கிண்டல் பண்றாங்களாம் உங்களுக்கு அதபத்தி எதாவது (சொல்லி முடிகரதுக்குலேயே முந்திக்கொண்டு)

ஒளிவிளக்கு ;ம்ம் அத பத்தி நா கேள்வி பட்டேன் யார் யார் ஒட்டி எழுதுறாங்கன்னு ஒரு லிஸ்ட் ரெடி பண்ணிட்டு இருக்கிறோம் கூடிய சீக்கிரம் -

நிருபர்:கூடிய சீக்கிரம் ?

ஒளிவிளக்கு :கூடிய விரைவில் நானும் ஒரு ப்ளாக் ஆரம்பிச்சு அவங்கள ஒட்டி ஒட்டி எழுதலாம்டு இருக்கேன் .

நிருபர் :(கொஞ்சம் மெதுவாக) சார் எதிரொலி அப்படீன்னு ஒரு நாளிதழ் வருது அதனுடைய சர்குலேசன் எப்படி போகுது ?

(அத நானே படிக்கறதில்ல)
ஒளிவிளக்கு :டீ கடக்காரன் போண்டா மடிக்கரதுக்கு சும்மா குடுத்தாலும் கூட வாங்க மாட்டீங்கறான்

நிருபர்:(தலைவரு தினம் அதுல்ல கவிதை எழுதுவாரோ என்னவோ என்று நினைத்த படி)இந்த மின்வெட்டு எப்ப குறையும்

(அது நா இருக்கிற வரைக்கும் நடக்காது)
ஒளிவிளக்கு:வருகிற சட்டமன்ற இடை தேர்தலை ஒட்டி கம்பம்,தொண்டாமுத்தூர் உட்பட நான்கு தொகுதிகளிலும் விரைவில்(தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும்)மின்வெட்டு அங்கு ரத்து செய்ய படும் அதை விடுத்து மற்ற பகுதிகள் தொடர்ந்து என் கண்காணிப்பிலேயே இருக்கும் .

நிருபர்:சார் மக்கள் உங்க மேல வெறுப்ப இருக்காங்க ஒரு அமைச்சர அத பத்தி உங்கள் கருத்து

ஒளிவிளக்கு:அந்த கோபத்தை இந்தியா ஜனநாயகத்தின்(பணநாயகத்தின்) அடிப்படையில் தேர்தலின் பொது மரகடிக்கப்படும்

நிருபர் :கடைசி கேள்வி சார் நீங்க (2011) தேர்தல்ல உங்க வெற்றி வைப்பு எப்படி இருக்கும்னு நினைகிறீங்க

(அதே ஏன்டா நியாபகபடுதுறீங்க)
ஒளிவிளக்கு :தமிழின தலைவர் தற்பொழுது மக்களை (தன்)குடும்பம் போல் கருதி சேவை செய்து வருகிறார் அதன் மூலம் அடுத்த தேர்தலிலும் நான் வெற்றி பெறுவது உரிதி.

முற்றும் .
(நல்ல இருந்த நல்ல இருக்குன்னு கமெண்ட் போடுங்க நல்ல இல்லேன்னா மொக்கைனு சொல்லுங்க அடுத்த முறை இன்னும் சிறப்ப பன்றதக்கு)