இணைய சொந்தங்களே வருக வருக !!!!!!!

Pages

May 30, 2009

ஆற்காட்டாரிடம் வெத்து வேட்டு வெள்ளச்சாமியின் நகைச்சுவை பேட்டி

(இது முற்றிலும் நகைச்சுவைக்காக மட்டுமே)
நமது தமிழ் ஊடக சிறப்பு நிருபர் வெத்து வேட்டு வெள்ளச்சாமி -ஒளிவிளக்கு துறை (மின்வெட்டு ) வீராசாமியுடன் நகைச்சுவை நேர்காணல்.

(நமது நிருபர் அவரின் நேர்காணலுக்கு காத்து கொண்டு இருக்கிறார் அப்பா பார்த்து மின்சாரம் கட் ஆகிடுச்சு ,என்னடா இப்படி ஆகிபோச்சே அப்பிடீனு நமது நிருபர் நொந்து கொண்டு இருக்கும் வேலையில் திடீர் என்று ஒரு வெளிச்சம் தென்படுகிறது என்ன வென்று பார்த்தல் நமது வணகத்துகூரிய ஒளிவிளக்கு துறை அமைச்சர் வீராசாமி கையில் விளக்கு ஏந்திய படி நடந்து வருகிறார்.வந்ததும் மேசை மேல் வெளக்கை வைத்து விட்டு உங்கள் பேட்டியை ஆரம்பியுங்கள் என்றார் )

நிருபர்:வணக்கம் சார்.

(சீக்கிரம் பேட்டிய ஆரம்பி பாஸு பீசு கட்டய புடுங்கறதுக்கு நேரமாச்சு என்று நினைத்த படியே )
ஒளிவிளக்கு :வணக்கம் வணக்கம் பேட்டியை ஆரம்பிங்க?

நிருபர் :சார் நடந்து முடுஞ்ச பாராளுமன்ற தேர்தலில் உங்கள் கட்சி அதிக இடங்களில் தமிழகத்தில் வெற்றி பெற்றுள்ளதை பற்றி என்ன நினைகிறீர்கள் ?

(எங்க ஆத்தா மேல சத்தியமா நா இத எதிர்பாக்கவே இல்ல என்று நினைத்து கொண்டு )
ஒளிவிளக்கு:இந்த வெற்றி நாங்க ஏற்கனவே எதிர் பார்த்துதான் ஆனா ?

நிருபர்:என்ன ஆனா சார் ?

(சுதாரித்து கொண்டு )
ஒளிவிளக்கு :ஆனாவும் இல்ல ஆவன்னாவும் இல்ல அடுத்த கேள்விய கேளுங்க

நிருபர்:நீங்க ஒரு பொது கூட்டத்தில தேர்தலில் எனது கட்சி தோல்வியை தழுவினால் அதற்க்கு நாந்தான் காரணம் என்று கூறினீர்களே அதை பத்தி இப்பொழுது உங்கள் கருத்து என்ன ?

(எதுக்கு இதய எல்லாத்தையும் கொடஞ்சு கொடஞ்சு கேக்குறான்)
ஒளிவிளக்கு: அது ஊடங்களில் திரித்து வெளியிடப்பட்ட செய்தி

நிருபர்:சார் உங்களால சிறு தொழில் செய்யறவுங்க எல்லாம் கடுமைய பாதிப்பு அடங்சுருக்காங்க


(ஏன்டா கரண்டு இருந்த குடுக்க மாட்டமா என்று நினைத்த படி )
ஒளிவிளக்கு: இது எதிர் கட்சிகள் திட்டமிட்டே பரப்புற பொய் ஏன் என்றால் நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு மெழுகுவத்தி தொழில்,ராந்தல் விளக்கு உற்பத்தி ,ஜெனரேட்டர் உற்பத்தி பன் மடங்கு வழங்துள்ளதே இதில் இருந்தே நீங்கள் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும் எங்கள் ஆட்சியில் சிறுதொழில்கள் பாதிக்க படவில்லை என்று

நிருபர்:சார் தேர்தலுக்கு முன்ன கொஞ்ச நாள் கரண்டே கட்டு ஆகறதில்ல தேர்தல் முடுஞ்சப்பரம் மறுபடியும் மின்வெட்டு இருக்கிறதா பொதுமக்கள் புலம்ப ஆரம்பிச்சுட்டாங்களே

ஒளிவிளக்கு:அதுக்கு காரணம் டேம்ம்ள(அனை) தண்ணி வத்தி போச்சு அப்புறம் பொள்ளாச்சி பக்கத்துல்ல கற்றாளை உற்பத்தி செய்ற பேன் விசிறி நாள் ஒடஞ்சு போச்சு அத கூடிய சீக்கிரம் ரெடி பண்நீருவோம்.

நிருபர்:உங்கள பதிவர்கள் நிறைய பேர் ஒட்டி ஒட்டி எழுதி கிண்டல் பண்றாங்களாம் உங்களுக்கு அதபத்தி எதாவது (சொல்லி முடிகரதுக்குலேயே முந்திக்கொண்டு)

ஒளிவிளக்கு ;ம்ம் அத பத்தி நா கேள்வி பட்டேன் யார் யார் ஒட்டி எழுதுறாங்கன்னு ஒரு லிஸ்ட் ரெடி பண்ணிட்டு இருக்கிறோம் கூடிய சீக்கிரம் -

நிருபர்:கூடிய சீக்கிரம் ?

ஒளிவிளக்கு :கூடிய விரைவில் நானும் ஒரு ப்ளாக் ஆரம்பிச்சு அவங்கள ஒட்டி ஒட்டி எழுதலாம்டு இருக்கேன் .

நிருபர் :(கொஞ்சம் மெதுவாக) சார் எதிரொலி அப்படீன்னு ஒரு நாளிதழ் வருது அதனுடைய சர்குலேசன் எப்படி போகுது ?

(அத நானே படிக்கறதில்ல)
ஒளிவிளக்கு :டீ கடக்காரன் போண்டா மடிக்கரதுக்கு சும்மா குடுத்தாலும் கூட வாங்க மாட்டீங்கறான்

நிருபர்:(தலைவரு தினம் அதுல்ல கவிதை எழுதுவாரோ என்னவோ என்று நினைத்த படி)இந்த மின்வெட்டு எப்ப குறையும்

(அது நா இருக்கிற வரைக்கும் நடக்காது)
ஒளிவிளக்கு:வருகிற சட்டமன்ற இடை தேர்தலை ஒட்டி கம்பம்,தொண்டாமுத்தூர் உட்பட நான்கு தொகுதிகளிலும் விரைவில்(தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும்)மின்வெட்டு அங்கு ரத்து செய்ய படும் அதை விடுத்து மற்ற பகுதிகள் தொடர்ந்து என் கண்காணிப்பிலேயே இருக்கும் .

நிருபர்:சார் மக்கள் உங்க மேல வெறுப்ப இருக்காங்க ஒரு அமைச்சர அத பத்தி உங்கள் கருத்து

ஒளிவிளக்கு:அந்த கோபத்தை இந்தியா ஜனநாயகத்தின்(பணநாயகத்தின்) அடிப்படையில் தேர்தலின் பொது மரகடிக்கப்படும்

நிருபர் :கடைசி கேள்வி சார் நீங்க (2011) தேர்தல்ல உங்க வெற்றி வைப்பு எப்படி இருக்கும்னு நினைகிறீங்க

(அதே ஏன்டா நியாபகபடுதுறீங்க)
ஒளிவிளக்கு :தமிழின தலைவர் தற்பொழுது மக்களை (தன்)குடும்பம் போல் கருதி சேவை செய்து வருகிறார் அதன் மூலம் அடுத்த தேர்தலிலும் நான் வெற்றி பெறுவது உரிதி.

முற்றும் .
(நல்ல இருந்த நல்ல இருக்குன்னு கமெண்ட் போடுங்க நல்ல இல்லேன்னா மொக்கைனு சொல்லுங்க அடுத்த முறை இன்னும் சிறப்ப பன்றதக்கு)




வருக வருக ராஜபக்க்ஷே அவர்களே ?

இலங்கை அதிபர் ராஜப்பக்ஷே இந்தியா வருகை தருவார் என்று எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார் என்று நாளேடுகள் தெரிவிக்கின்றன.

இலங்கை மண்ணில் என் இன மக்களை கொன்று குவித்து ,என் இன பெண்களின் கற்பை பறித்து ,இளைஞர்களை தூக்கில் தொங்கவிடப்பட்டு ,ஏன் கருவிலிருக்கும் சிசுவைகூட விட்டுவைக்காமல் துப்பாக்கி தோட்டவிர்க்கு இரையாக்கி ரத்தம் குடித்த சிங்கள பேரினவாத அதிபர் வருக! வருக! என்று வரவேர்க்கபடுவீர்கள் எங்களை ஆளும் ஆட்சிகாரர்களால் .

நாங்கள் ஒன்றும் சீக்கியர்கள் ஆல்ல தன் இனம் அவமானபட்டால் ,அடிமைபடுதப்பட்டால் செருப்பால் அடிப்பதற்கும் ,அந்நிய நாட்டில் தன் இனத்தான் ஒருவன் கொல்லப்பட்டால் கலவரம் செய்து பொது(7000கோடி) சொத்தை சேத படுத்துவதற்கும்.

நாங்கள் தமிழர்கள் தன்மானம் அற்ற தமிழர்கள் காசுக்காக ஓட்டை விற்று கள்ள ஒட்டு போடும் வீர தமிழர்கள் .தமிழன் தமிழன் என்று கூறிக்கொண்டே காசுக்காக தன் இனத்தை கொன்று குவிக்க உதவி புரிந்த கயவர்களுக்கே ஓட்டளிப்போம் .எத்தனை அவமானப்படாலும் அதை பொறுத்துக்கொண்டு (காசுக்காக ) அதை எல்லாம் மறந்து விடுவோம்,மன்னித்து விடுவோம் .

அதனால் நீங்கள் நிம்மதியாக இந்தியாவிற்கு வரலாம் ,எந்த பயமும் இன்றி ஏன் என்றால் நாங்கள் உங்களை ஒன்றும் செய்து விடமாடோம் ,ரத்தின கம்பள வரவேற்பளிப்போம் ,ஐந்து நட்சத்திர விடுதியில் தங்க வைப்போம் ,இன்னும் மீதமுள்ள என் இன மக்களை அளிப்பதற்கு தேவையான உதவிகளை செய்வோம் அல்லது தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு மறு சீரமைப்பு என்று நாங்கள் செலுத்திய வரி பணத்தை எங்கள் ஆட்சியாளர்கள் மூலம் தருவோம் நிம்மதியாக பெற்று செல்லுங்கள் .அங்கு சென்று மிச்சம் மீதி இருக்கும் என் இனமான தமிழர்களை அழிபீர்களோ அல்லது அடிமைபடுதுவீர்களோ நாங்கள் ஒன்றும் செய்யபோவது இல்லை .வெறும் கூச்சல் மட்டுமே போடுவோம் அல்லது பேரணி நடத்துவோம் அவ்வளவுதான் .

எங்களுக்கு தேவை ஈழ தமிழர்கள் வாழ்வுரிமை அல்ல ஆட்சி அதிகாரத்தை பிடிக்க வேண்டும் அதற்காக நாங்கள் என்ன வேணாலும் செய்வோம் அவ்வளவுதான் !.

May 27, 2009

இப்ப நாளும் புத்தி வரட்டும் -பசங்க உணர்வுகள்


முதலில் இந்த பதிவை எழுத காரணமே இயக்குனர் எம்.சசிகுமாரும் ,இயக்குனர் பண்டிராஜ் ஆகியோர் தான் காரணம் .தரமான படைப்பை சினிமா உலகத்திற்கு வழங்கிய பசங்க திரை பட இயக்குனர் பண்டிராஜ் மற்றும் இந்த கதையை துணிந்து இயக்கிய இயக்குனர் எம்.சசிகுமார் ஆகியோருக்கு என் நன்றி கலந்த பாராட்டுக்கள் .

பசங்க படத்தை பார்க்கும் பொழுது நம்ம சின்ன வயசு சேட்டைகள் ,நினைவுகளை கண்முன்னே கொண்டு வருது, இப்ப இந்த மாதிரி வித்யாசமான படங்கள் ஏன் தமிழ் சினிமா காரங்க எடுப்பதில்லை . ஒரே குட்டைல ஊர்ன மட்டையை போல ஒரே விஷத்தை திரும்ப திரும்ப செஞ்சுட்டு இருகாங்க. .ஏன்பா இப்படி படம் எடுகறீங்கன்னு கெட்ட , இந்த சமூகத்துல நடகறததான் படமா எடுகுரோம்னு சொல்லறாங்க.காதல் இல்லேன்னா பழிக்கு பழி வாங்கற கதைகள் இத விட்ட இந்த உலகத்துல வேற ஒண்ணுமே கிடையாத. சினிமாங்கறது ஒரு களம் அதை இந்த காதல், கத்தி குத்துக்கு மட்டுமே பயனபடுத்துறது சரி அல்ல .வெறும் தொப்புளையும் தோலையும் காட்டி பணம் சம்பாரிகறதை விட வித்யாசமான முயற்சிகளில் ஈடுபடலாம் .ஒரு படம் என்றால் ஒரு ஒபணிங்கு சாங்கு மூணு சண்டை காட்சி நாலு செண்டிமண்டு வெளிநாட்ல ரெண்டு பாட்டு இது மட்டும் போதுமா .

தொழில் நுட்பத்தில் பிரமாண்டமாக வளர்ந்து நிற்கும் தமிழ் சினிமா உலகம் கதை களத்தில் பின்தங்கியே உள்ளது .கதைக்காக தான் நாயகன் ஆனால் இங்கே நாயகனுக்கு உகந்தமாதிரி தான் கதை எழுத படுகிறது .கோடிகளில் புரளும் நடிகர்களுக்கு தெருகோடிகளில் வாழும் ரசிகன் புது பட போஸ்டருக்கு பால் ஊத்தும் நிலைமை இங்கே நிலவுகிறது.முதலில் நாம் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும் அவர்கள் வீரமல்லாம் சினிமாவில் மட்டுமே நிஜத்தில் அவர்கள் அப்படி அல்ல .நம் உணர்ச்சியை தூண்டி காசு சம்பாதிபவர்கள் .

சினிமா என்பது ஒரு சக்தி வாய்ந்த களம் அதை நல்ல வழியில் உபயோகித்தால் மிக பெரிய மாற்றத்தை இந்த சாமூகத்தில் கொண்டு வரலாம். விதயாசமான அதே சமயம் எதார்த்தமான சினிமா எப்பவும் வெற்றி பெரும் அதற்க்கு பெரிய கதாநாயகர்கள் தேவை இல்லை நல்ல கதை மட்டுமே இருந்தால் போதும் .நல்ல படைப்பை மக்கள் புறகணிக்க மாட்டார்கள் என்பதை சமீபத்தில் வெளிவந்த படங்களான வெண்ணிலா கபடி குழு ,சுப்ரமணியபுரம் போன்ற படங்களே சிறந்த உதாரணம் .

பிரம்மாண்டம் என்ற பேர்ல எது எதுக்கோ செலவு செய்ற நம்ம ஆளுங்க படத்திற்கு தேவையான கதையை கவனிப்பது இல்லை.
காலிவுட் தரத்திற்கான படம் என்று சொல்வார்கள் பொய் பார்த்தல் நாம சாப்டற காளிபிளோவேர் தரத்திற்கு கூட இருக்காது .காலிவுட் என்பது வெளிநாடிற்கான சினிமா தளம் அவ்வளவு தான் ,அப்பாவும் அங்கே கதைதான் ஹீரோ ,அந்த படத்தில் கதாநாயகன் கதாநாயகி யார்வேணாலும் சாகர மாதிரி கதை அமைத்து இருப்பார்கள் இல்லாமலும் போலாம் அங்கு பெரிய நடிக நட்சத்திரங்களே அதற்க்கு ஒப்புக்கொண்டு நடிப்பார்கள் .ஆனால் இங்கு நேத்து வந்த துண்டு துக்டா முரட்டு தளபதி ,தங்க தமிழன்னு பேர் போட்டுக்கிட்டு பண்ற அலம்பல் தாங்களை ,அதே நேரம் தயாரிப்பாளர்கள் ஒன்றை உணரனும் கடந்த வருடத்தில் ப்ரமாண்டம்னு சொல்லிடு வந்த படங்கள் அவ்வளவாக ஓடவில்லை .ஆனா கதையை மட்டுமே நம்பி வெளிவந்த குறைந்த செலவில் உருவான படங்கள் பெரிய அளவில் வெற்றி கண்டது .

அதே மாதிரி நாமளும் இந்த நடிகர்களை தூக்கி தலைல வச்சுட்டு ஆடறதை நாம நிறுத்திக்கணும்.பாராட்டுகள் இருக்கலாம் ஆனால் அவர்களையே தூக்கி வைத்து கொண்டாடுவது தவறு.அவர்களுக்காக நாமதான் அடுச்சுக்கிட்டு பாகயாளிய திரியிறோம் ,ஆனா அவுங்க இன்னிக்கு அடுச்சுகுவாங்க அப்புறம் நாளைக்கு போட்டோவுக்கு ஒன்னு சேர்ந்து போஸ் கொடுப்பாங்க .
அதனால தரமான படைப்புக்களை அரவணைத்து வெட்டி முழக்கம் போடும் அரைவேக்காடு தமிழ் படங்களை புறகணிப்போம் அப்பொழுதாவது அவர்களுக்கு புத்தி வரட்டும் நல்ல சினிமாவை கொடுக்க வேண்டும் என்று!

May 25, 2009

செயற்கையை நோக்கி ஒரு வாழ்க்கை
















மனித இனம் எதற்கு படைக்க பட்டது ,ஏன் படைக்க பட்டது என்று தெரியவில்லை .ஆனால் நாம் இயற்கையால் தான் படைக்க பட்டோம் இயற்கையால் தான் வளர்க்க பட்டோம் .அனால் இன்று இந்த உலகில் எதையோ ஒன்றை அடைய ஆசைப்பட்டு இருக்கிற சுகங்களையும் இழந்துவிட்டோம் .பிற உயிர்களை போல நாமும் இயற்கை யோடு ஒன்றி வாழ்திருந்தால் இந்த முன்னேற்றங்கள் இருந்திருக்காது என்பது உண்மை .ஆனால் இன்று நம் கண்முன்னே எவ்வளவு கொடூர நிகழ்வுகள் ,ஆனாலும் நம் அந்த நிகழ்வுகளை ஒரு செய்தியாகவே பார்க்கிறோம் ஏன் நமது மனம் மரத்து விட்டதா ?இல்லை மரத்துவைக்க பட்டதா? தொலைக்காட்சி நாடகங்களை பார்த்து அழும் நாம் ஏன் ஒருவன் வழித்தடத்தில் துடித்து கொண்டிருக்கும் பொழுது கண்டும் காணாமல் செல்கிறோம் .நாம் வாழவில்லை வாழ்வது போல நடித்து கொண்டு இருக்கிறோம் .செயற்கையான சிரிப்புகள் ,செயற்கையான நடை ,செயற்கையான பேச்சு என்று நாமும் இயற்கையை பிறந்து செயற்கையை மாறிவிட்டோம் .பசுமையாய் இருக்க வேண்டிய நம் உள்ளம் வறண்டு கிடக்கிறது,சுதந்திரம் பற்றி பேசும் நாம் ஒரு சிறு பறவையின் சுதந்திரம் நமிடையே இருக்கிறதா என்று யோசித்தால் இல்லை ,எல்லை கோட்டை கடக்க கூட நமக்கு கடவு சீட்டு தேவை படுகிறது ,இவ்வளவு பெரிய மனிதன் அந்த சிறிய அட்டைக்குள் அடக்க பட்டுவிட்டான் கடவு சீட்டாக.ஆகா மனிதன் மீது இருந்த நம்பிக்கை போய் ஒரு கடவு சீட்டை நம்பவேண்டயுள்ளது.

சுதந்திரம் என்று சொல்லி நம் மீது கட்டுப்பாடு விதித்து கொண்டோம் .நவீன கலாச்சாரம் என்று சொல்லி நம்மையே அளித்து கொண்டோம் .ஏன் நாம் வாழும் ஒவ்வொரு நிமிடமும் ஒரு எல்லைகோட்டை ஓடியே சிந்தித்து கொண்டு இருக்கிறோம் .அதை மீறினால் தவறு என்று .

குடும்பத்துக்காக உழைக்கிறோம் என்று சொல்லி அந்த குடும்பத்தையே பிரிந்து நிற்கிறோம் .செயற்கையான பொருட்களை சேர்க்க இயற்கையான நம் உறுவுகளை பிரிந்து நிற்கிறோம் .

இன்று தினமும் கொலை கொள்ளை ,தீவிரவாதம் ,இன அழிப்பு என்று செய்திகள் கேள்விபடுகிறோம். கொலை செய்பவன் வஞ்சத்தை மறந்து ஒரு நிமிடம் யோசித்தால் அந்த கொலை நிகழாது ஆனால் அந்த ஒரு நிமிடம் இந்த மனம் யோசிக்க விடுவது இல்லை.இன அழிப்பு என்று சொல்லி நம் மானிட இனத்தையே அளித்து கொண்டு இருக்கிறோம் .பாதுகாகத்தான் ஆயுதம் என்று போய் உயிர்களை வித விதமாக கொன்று அளிக்கும் ஆயுதங்களைதான் உற்பத்தி செய்கிறோம் .ஏன் என்ற காரணத்தை பார்த்தல் பணம் என்ற ஒன்று .
அது உணர்வுகளை பிரிகிறது உணர்ச்சிகளை உடைக்கிறது.

அறிவுக்காக படிப்பது என்று போய் மதிபென்னுகாக படித்துக்கொண்டு இருக்கிறோம் .விளைவு அந்த புத்தகங்களில் உள்ள எழுத்துகள் நமக்கு வெறும் எழுத்தாகவே தெரிகிறது ,அதிலுள்ள கருத்தை நமது மனம் ஏற்று கொள்ள மறுக்கிறது .எதனால் என்று பார்த்தல் கல்வி மாயம் படித்தால் தான் வேலை கிடைக்கும் என்று ஒரு நிலை இன்று

இன்று நம் கையில் செல்போன் என்ற சாதனம் இருக்கிறது தகவல் தொடர்புக்கே அந்த சாதனம் ஒழிய வேரஎதிர்க்கும் இல்லை .ஆனால் நம் அந்த சாதனத்தை பேசுவதற்காக வாங்கி பேசும் மனபூர்வமான நேரத்தை குறைத்து கொண்டோம் .எப்படி என்று பார்த்தல் பணம் வந்து நிற்கிறது முன்னால் .பேசுவதற்காக வாங்கி பயன்படுத்திய அந்த சாதனம் தொழில்நுட்ப முன்னேற்றத்தால் பிற வசதிகளை புகுத்தி ,காசை பறித்து ,மனிதனிடமிருந்து பிரித்து விடுகிறது .

தொலைக்காட்சி என்ற கண்டுபிடிக்க பட்டு இன்று நம் இல்லத்தில் தவறாமல் குடிகொண்டு விட்டது .உலக நிகவுகளை அறிய பயன்படுத்திய இந்த சாதனம் இன்று கால மாற்றத்தால் மிக பெரிய சக்தியாக உருவெடுத்து நிற்கிறது நம் கண்முன்னால் .நம் எதை எதை வேண்டாமென்று நினைகிறோமோ உதாரணமாக விரோதம்,ஆக்ரோஷம் ,பகை ,ஆபாசம் போன்றவற்றை இலவசமாக நம் வீட்டிலேயே பார்த்து கொல்ல்கிறோம் .மேலும் ஆபாசம்,பழிதீர்த்தல் போன்ற வற்றை காட்டி அவர்களும் பணம் சம்பாதித்து பின்பு நம் உள்ளங்களையும் சீரழிகின்றனர் .வீட்டிலிருந்து கொண்டே இன்று நாம் நம் உறுவுகளுடன் பேசி கொள்வதில்லை .தொலைக்காட்சியே கதி என்று கிடக்கிறோம். விளைவு இன்று உருகளுள் சரியான புரிந்து கொள்ளுதல் இல்லை ,அதனால் விவாகரத்து ,தற்கொலை போன்ற சோகங்களில் முடிந்து விடுகிறது .

இந்த மனித இனம் ஏன் இப்படி அகிவிட்டது என்று தெரியவில்லை? .பணம் ஒரு தேவைதான் ஆனால் பணமே லட்சியமாக இருந்தால் வாழ்ந்து என்ன பயன் இந்த உலகில்.எதையோ தேடி தொலைந்து கொண்டு இருக்கும் நம் மனதினை நமக்காக காத்து கொண்டு இருக்கும் நம் உயிர்களை தேடி ,அவர்களின் உணர்வுகளை தேடி புறப்படுவோம் .எல்லை கடந்த அன்பை பெறுவோம் .

May 23, 2009

மெகா சீரியல் எடுக்க -பத்து டிப்ஸ்(நகைச்சுவை )


இப்ப எல்லாம் மெகா சீரியல் தான் பெண்களுக்கு முக்கியமான பொழுது போக்கு .உங்கவீட்லயும் ஒரு குழந்தை பிறந்திருக்கும் ,உங்கவீடம்மா பாக்குற நாடகத்துலேயும் குழந்தை பிறந்திருக்கும் ,உங்க வீட்டு குழந்தை வளந்து பெரியவனாகி கல்யாணமே பண்ணி வச்சுருபீங்க.ஆனா உங்க வீட்டு அம்மா பாக்குற நாடகத்துல வர்ற குழந்தை இப்பதான் எல்.கே.ஜி முடிச்சு யு.கே .ஜி போயிருக்கும் .அதனால நீங்களே ஒரு மெகா சீரியல் எடுக்கவோ அல்லது இயக்கவோ எனக்கு தெரிஞ்ச சில ஐடியா தரேன் .
மெகா சீரியல் தயாரிக்க சில டிப்ஸ்.

  1. முதல்ல நீங்க உங்க சீரியலுக்கு ஒரு நல்ல தலைப்பு வச்சுக்கணும் எடுத்துகாட்ட-அவள் ஒரு மங்கை ,மூதேவி ஸாரி ஸ்ரீதேவி ,அமிக்கல்லு ஆடாங்கள்ளு,இப்படி ஏதாவது ஒரு பெயர வச்சுக்கணும்(குறிப்பு ஏற்கனவே இருக்கிற தமிழ்நாட்டு பெண்கள் பெயர எல்ல நாடகத்துக்கு வச்சதால இனி வெளிநாட்டு பெண்கள் பெயர வச்சுக்கறது இன்னும் உத்தமம் )இல்லேன்னா நாலு புள்ளி கோலம் ,அஞ்சு புள்ளி கோலம் பத்து புள்ளி கோலம்னு பெற வச்சுக்கலாம் (அலங்கோலமுனு வச்சுட்ட இன்னும் சிறப்ப இருக்கும்) .
  2. ஏதாவது ஒரு பெரிய பங்களாவ குத்தக கணக்கா பேசி வாடகைக்கு புடுச்சுகணும் .காசு மிச்சம் பண்ணும்னு நினச்சா அதே பங்களா மேல் போர்சன ஆபிஸ்னு போடு மாடி நாலு பெஞ்சு சேறு போட்டு வச்சுக்கணும் .
  3. அப்புறம் நாலு சோபா வாங்கி வாடகைக்கு புடுச்ச ஊட்டு நடுவுல போட்டுவச்சுகனும்.நடுவுல ஒரு டீபாய் வச்சு ஒரு பழைய செய்திதாள நாலா மடிச்சு வச்சுக்கணும் .அப்புறம் ஒரு டெலிபோன் அந்த டீபைமேல வச்சரனும் .(நான் குறிபிடுவது குறைந்தபச்ச பொருட்கள் விருப்பமிருந்தால் இன்னும் அதிகமாக பொருட்களை வாங்கி வைக்கலாம் இல்லேன்னா விட்டுடலாம்)
  4. அப்புறமா நடிகருக்கு ஆள் புடிக்கணுமில்ல கவலையே படாதீங்க வருஷம் (1995)சமயத்துல கதாநாயகிக்கு மாமனா,அக்காவா, நடிச்சவங்க நெறைய பேரு இப்ப சும்மா இருப்பாங்க அதுல உங்க கதைக்கு? தேவயானவங்கள தேர்வு செஞ்சுக்குங்க வயசான கதபாதரத்துல நடிகறதுக்கு.அப்புறம் தமிழ் சினிமால மார்கெட் போன நடிகைகள் இருப்பாங்க அவங்கள கூப்ட உடனே வந்துடுவாங்க கதையின் நாயகி யாக .அப்புறமா வாட்ட சாட்டமான ஒரு ஆள புடுச்சுகங்க அந்த சீரியல் நாயகியின் கணவனா நடிகறதுக்கு(குறிப்பு இன்னும் நடிகர்கள் தேவை பட்டால் சட்ட சபைக்கு போங்கள் டிவி ல நடிகரவிங்கள விட இவுங்க சூப்ற நடிப்பாங்க )
  5. கிளிசரின் கம்பெனிக்கு போன போட்டு ஒரு பத்து லிட்டர் மொத்தமா வாங்கிக்குங்க .அப்புறமா ஆடை வேணுமில்ல ஏதாவது ஒரு லாண்டரிக்கு போய் தொவைக்காத துனியா தேவையான அளவு வாங்கிட்டு வந்து அந்த அந்த கதா பாத்திரங்களுக்கு குடுங்க .

  6. அப்புறம் முக்கியமா தேவ கதை அதபத்தி கவலை படாதீங்க .ஸ்கிரிப்ட் ரெடி பண்றதுக்கு முன்னாடி இப்ப கரண்டா ஓடிட்டு இருக்கிற சீரியல் நாலு அஞ்சு அசராமல் பாருங்க ஒவ்வோவ்று சீரியல் இருந்தும் ஒரு சீன வெட்டி போடுங்க ஒரு நாளைக்கான கதை ரெடி !இதே மாதிரி தினமும் நாடகம் பார்த்தே கதை ரெடி பண்ணீடலாம் ).
  7. அதே மாதிரி கதைல நடிக்கிற ஆண்களாகட்டும் பெண்களாகட்டும் பேசிகொண்டிருக்கும் போதே எதற்கென்று தெரியமாலே பொங்கி பொங்கி அழ வேண்டும் .அப்பா தான் அதை பார்க்கும் தாய்குலங்களின் கண்ணிலும் கண்நீற்குலம் உண்டாகும் .அதுக்குதான் லிட்டர் கனக்க கிளிசரின் வாங்கி வச்சுருபீங்க.
  8. அதே மாதிரி நடிகர் நடிகைகள் வேகமாக நடக்கும் காட்சிகளை எடிட்டிங் செய்யும் பொழுது ஸ்லோ மோசன்ள நடக்ரமாதிரி காண்பிக்க வேண்டும் .அப்பதான் அந்த காட்சிய நாலு வாரத்துக்கு ஓட்ட முடியும் .
  9. பினனணி இசை இது ரொம்ப முக்கியம் ஆனால் வேலை ரொம்ப ஈசி புதுசா யாராச்சும் மியூசிக் கத்துகிட்டு இருந்த ஒரே அமுக்க அமுக்கிட்டு வந்து அவங்களுக்கு என்ன தெரியுமோ அத வாசிக்க சொன்னால் போதும் .முக்கியமா கதாநாயகி வேகமாக நடக்கும் பொழுது பித்தாள கொடத்த படிகட்டுல இருந்து உருட்டி விடறமாதிரி சத்தம் வரணும் .
  10. அப்புறமா உங்க மெகா சீரியல உட்காந்து பார்க்கும் பெண்களை கவர்ற மாதிரிஏதாவது சின்ன சின்ன பரிசு பொருட்கள் இலவசமா அள்ளி வீசுங்க.
ஒன்னு சொல்ல மறந்துட்டேன் மெகா சீரியலுக்கு முக்கியமானதே ஓபனிங் பாட்டுதான்.ஏதாவது ஒரு டான்ஸ் மாஸ்டர் ர புடுச்சு யாருக்கும் புரிஞ்சும் புரியாத மாதிரி பத்து நிமிஷம் பல்ல கடுச்சுட்டு ஆடுற மாதிரி இருக்கனும் (குறிப்பு இந்த மாதிரி ஓபனிங் சாங்கை வைத்தே உங்களுக்கு ஒதுகின நேரத்துல பாதி நேரத்தை முடுச்சரலாம் .

என்ன பேச்சையே காணோம் இப்படி தான் பல பேரு மெகா சீரியலு எடுத்துதான் மெகா கோடீஸ்வரன் ஆகி இருக்கான்.