இணைய சொந்தங்களே வருக வருக !!!!!!!

Pages

Jan 2, 2009

மதுவால் கெட்டது நம் தமிழ்நாடு


ஒருவன் மது அருந்தினால் அவனுக்கு மட்டும் கேடு அல்ல அவன் குடும்பத்துக்கே கேடு .மக்களை காக வேண்டிய அரசே மக்களை மயக்குகிறது மதுவால் .
தமிழக அரசே ஆளும் அரசே நீங்கள் செய்த சாதனை பட்டியலை ஒவ்வொரு மாநாட்டிலும் வாசிபீர்களே இதையும் சேர்ந்து வாசியுங்கள் .

நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு இவ்வளவு மதுகடைகளை துறந்தோம் அதனால் நம் குடிமகன்கள் இவ்வளவ்வு பேர் போதிக்கப்பட்டு இருகிறார்கள் மன்னிக்கவும் பாதிக்கப்பட்டு இருகிறார்கள் .பொங்கல் ,தீபாவளி ,புத்தாண்டு போன்ற திருநாட்களில் நாங்கள் அரசுக்கு ஒரே நாளில் நூற்றி ஐம்பது கோடி வருமானம் ஈட்டி தந்தோம் . எங்கள் ஆட்சியில் மதுவை அருந்தி வாகனம் ஓடியதில் இவ்வளவு ? பேர் மரணம் .எவ்வளுவு குடும்பங்கள் நடு தெருவுக்கு வந்துள்ளன போன்ற அரும் பெரும் சாதனை பட்டியல்.

வருங்கால சமுதாயம் இளைஞர்கள் கையில் என்று கூவுகிறீர்கள் ,ஆனால் அவர்கள் கையில் மது கூபி தானே இருக்கிறது .பின் எப்படி ஒரு அருமையான சமுதாயம் உருவாகும் .

மது கடைகளை துறப்பதிர்ருக்கு பதிலாக அரசு மருத்துவ மனையை துவக்குங்கள் .ஏழை உங்களை வாழ்த்துவான் .இருக்கும் அரசு மருத்துவமனைகளை மேன்படுதுங்கள்.

இன்னும் குறிப்பாக தமிழ் நாட்டுல மது உற்பத்தி ஆலைகளை இழுத்து மூடுங்கள்.

தங்கள் சுய விளம்பரத்தை மறந்து மதுவால் ஏற்படும் தீமையை மக்களிடத்தே ஊடகங்கள் மூலமாக விளக்குங்கள்.

இன்னும் பெறு நகரங்களில் மேல் தட்டு வர்க்கத்தினர் குறிப்பாக இளைஞர்கள் பெண்கள் எல்லாம் கூட மேற்கத்திய மோகத்திற்கு அடிமையாகி மதுவை அருந்துவதில் பெருமை கொள்கின்றனர். நமது நாட்டிற்க்கும் நமது பண்பாட்டிற்கும் நல்லதலே.

No comments:

Post a Comment