இணைய சொந்தங்களே வருக வருக !!!!!!!

Pages

Apr 1, 2009

ஊர்திருவிழாவும் மஞ்சள் நீர் ஆடுவிழாவும்

கிராமங்கள் என்று நினைவுக்கு வந்தாலே கண்டீப்பாக கிராமத்தில் நடைபெறும் கோயில் திருவிழாவும் பெரும்பாலானோர்க்கு நினைவு வரும் இந்த பதிவும் கிராமத்து திருவிழாவை பற்றியதுதான் .


இன்று பெருநகரத்தில் ஜன நெருகடியிலும் அயல் நாடுகளிலும் வாழ்பவர்களில் பெரும்பாலோனோர் கிராமத்திலிருந்து பிழைப்பு தேடி வந்தவர்கள் தான்.
கால மாற்றத்தில் இவர்களில் பெரும்பலவனர்கள் தங்கள் மண்ணை மறந்து மண் வாசனையும் மறந்து வாழ்ந்து கொன்டிறுபவர்களுக்கு இந்த பதிவை சமர்பிக்கிறேன் .

ஊர்த்திருவிழா
கிராமங்கள் என்று எடுத்து கொண்டால் கோயில்கள் இருக்கும் .கோயில்கள் என்று எடுத்து கொண்டால் வருடத்திற்கு ஒரு முறை திருவிழா (நோம்பி என்றும் அழைப்பார்கள் கொங்கு நாட்டில் )நடைபெறும் .பங்குனி சித்திரை,வைகாசி போன்ற மாதங்களில் மாரியம்மன் கோயில் கலை கட்டிவிடும் .கம்பம் போட்டு ,தொரனும் கட்டி ,மின்விளக்குகளால் அலங்க்கரும் செய்து ஊரே விளகொளும் பூண்டுவிடும் .கம்பம் நட்ட அந்த ஒரு வாரத்தில் ஒரே அமர்கள படும் .உறவினர்கள் ஒவ்வொன்றாக வரதொடங்குவார்கள்,வீடுகள் எல்லாம் சுண்ணாம்பு பூசப்பட்டு வெள்ளை வெளேர் என்று காட்சி அளிக்கும் .இரவு நேரம் வந்தால் ஊர் பெரியவர்கள் எல்லாம் ஒன்று கூடி பழங்கதைகளை பேசிக்கொண்டும்,சின்னம் சிறுசுகள் கோயில் சுற்றியும் விளயாடி கொண்டும் இருப்பார்கள் .பின்பு மத்தாளம்அடிக்க \ மத்தாலகாரர்கள் வந்து சேர்வார்கள்.மத்தாளம் அடிக்க தொடகியதும் ஊர்காரர்கள் ஒவ்வ்வோருவராக வந்து ஆடவார்கள் .ஆடுபவர்களில் வயதானோர் ஒரு பக்கம் இளைஞர்கள் ஒரு பக்கம் ,சிறுவரகள் ஒரு பக்கம் கூடி ஆடுவார்கள் .ஆட்டத்தில் பல வகை உண்டு குறிப்பாக நான் பிறந்த பகுதியில் சலங்கை ஆட்டம் ,வரிசை ஆட்டம் ,கும்மி ஆட்டம் போன்ற பலவித மான ஆட்டங்கள் ஆடுவார்கள் .


(இங்கு பதிவேர்றபட்டிருக்கும் வீடியோ வரிசை ஆடம் ஆடும் இளைஞர்கள்
எப்படி ஆடுகிறார்கள் என்று பாருங்கள் .வீடியோ ஓடத்தொடங்கி ஒரு நிமடவாக்கில் அவர்களின் ஆட்டத்தை காணலாம் . இந்த வீடியோ காசுகாரன்பாளையும் என்ற ஊரில் படமெடுக்க பட்டது .நன்றி கொங்கு மீடியா பதிவு )





ஆடும்போது இடையில் நிறுத்தி நிறுத்தி சில வாக்குவாரம் சொல்ல்வார்கள் .அந்த ஊர்காரகள் மட்டுமல்ல அருகிலிருக்கும் கிராமதார்களும் வருவார்கள் ஆடுவதற்கு. அதிலும் திருவிழா ஆறுநாட்கள் நடைபெறும் என்றுவைத்து கொண்டால் கடைசி இரண்டு நாட்கள் கோயிலில் ஆடுவதற்கு கூடும் நிரம்பி வழியும் குறிப்பாக இளவட்டம் எதற்கு என்று கேட்குறீங்கள? அப்பதான் உறவுகாரப் பெண்கள் ,ஊர்கார பெண்கள் ஆட்டத்தை காண வருவார்கள் ? !.அதற்காகவே இளவட்ட ஆண்கள் (தப்பாக எண்ணாதீர்கள் எல்லாம் ஒரு மகிழ்ச்சிக்கு தானே ) கால்வலிதாலும் கண்சிமிட்டி ஓரகண்ணால் பார்த்துக்கொண்டே ஆடுவார்கள் .எங்கள் ஊரில் வியாழக்கிழமை தான் விழாவின் முக்கியனால் அன்று அதிகாலையிலேயே பெண்கள் புத்தாடை அணிந்து மாவிலக்கை எடுத்து கொண்டு கோயிலுக்கு வருவார்கள் அந்த நேரத்தில் வெடிவெடித்து மத்தள வாத்தியங்களுடன் வருவார்கள் .பிங்கு பொங்கல் இட்டு சாமிக்கு நேர்த்தி கடன் சில்திய பின்பு(கிடா ,கோழி ).மாவிளக்கை கோயிலில் இருந்து அவரவர் வீட்டிற்கு எடுத்து செல்வார்கள் ,
சிறு சிறு கடைகள் விழா நேரத்திற்கு வந்து இருக்கும் சிறுவர்கள் அம்மாவை நட்சத்ரித்து விளையாட்டு பொருள்களை வாங்குவார்கள் .பெட்டி ஐஸ் காரன் கூ கூ என்று கூவுவான் .அன்று மாலையே மக்கள் கோயிலில் கூடுவார்கள் .
அன்று நேரத்திலேயே மத்தளம் கட்டி ஆட தொடங்கி விடுவார்கள்.பின்பு நட்ட கம்பத்தை பிடுங்கி அதற்கென்றே உள்ள கிணற்றில் எரிந்து விடுவார்கள் .

அப்புறமென்ன திரைகட்டி பழைய சினிமா ஒன்றும் புட்சிய சினிமா ஒன்றும் போடுவார்கள்.

மஞ்சள் நீராட்டு விழா


திருவிழா முடிந்த மறுநாள் மஞ்சள் நீராடு விழா நடை பெரும் மஞ்சளை கரைத்து அனாவில் வைத்து விடுவார்கள் யார் வேண்டுமானாலும் மஞ்சள் நீரை எடுத்து தன் பிரிய பட்டவர்களின் மேல் ஊற்றி விடலாம்,(சிலர் இதுதான் சமயம் என்று தான் விருப்பப்பட்ட பெண்கள் மேல் ஊற்றி வில்யடுவார்கள்).


சரி இவ்வளுவு எழுதுறேனே எதற்காக என்று கேக்குறீங்களா ?

திருவிழாவில்தான் ஊறவுகள் ஒன்றுகூடும் ,வருடம் முழுதும் உழைத்து உழைத்து கலைத்து போனவர்களுக்கு திருவிலாகள் தான் அவர்களின் உற்சாகம் தரும் உரைவிடுமாகும். நீங்கள் பார்த்து இருப்பீர்கள் பெருநகரங்களில் பெரும் வேளைகளில் இருப்பவர்கள் தங்கள் சொந்த ஊர் திருவிழா என்று செய்தி அறிந்தால் அடித்து பிடித்தாவது ஊருக்கு போவதை

ஏன்? தன் சொந்தங்களை காணவும், பந்தங்களை பார்க்கவும் தான் சிலர்க்கு என்னதான் வசதி வாய்புகள் இருந்தாலும் தன் சொந்த ஊரில் இருப்பதுதான் மரியாதை கவுரவும் என்று நினைப்பார்கள் அதை எள்ளவும் மீறி அவர்கள் தன் மண்ணின் மேல் வைத்துள்ள பாசம் பின்னைப்பு ஆகியவைதான் .

திருவிழாவில் எதற்கு ஆடம் பாடம் என்று என்னுகுறீர்களா

ஆட்டம் பாட்டம் என்பது ஒரு சடங்கு என்றாலும் அது பின்னால்லுள்ள காரணத்தை பார்த்தல்
வருடம் முழுதும் வேலை செய்து களைத்தவர்களுக்கு உற்சாகம் ஏற்றும் ஆட்டம் .சினிமா காரர்கள் எல்லாம் இவர்களை போல் தொடர்ந்து ஆடுவார்களா என்றால் இல்லை என்றுதான் கூறுவேன் .கிராமதினர்க்கு இந்த ஆட்டத்தின் மேல் மதிப்பும் மரியாதையும் அதிகம் .சண்டை சச்சரவு மறந்து ஒன்று கூடி நடத்தும் திருவிழாக்கள் இன்னும் கிராமத்தின் அடையாளமாக திகள் கின்றன .








Mar 27, 2009

மறைந்து போகும் கிராமத்து விளையாட்டுகள்


நான் என் சிறுவயது காலத்தில் பள்ளியை விட்டு வந்ததும் பக்கத்து வீட்டு நண்பர்களுடன் பொழுது இருட்டும் வரை விளையாடுவோம் .என் காலத்தில் பலவிதமான விளையாட்டுகள் மிகுதியாக விளையாடுவோம் ,தட்டு கரையான்,கண்ணாம்பூச்சி,நொங்கு வண்டி ,ஐஸ் நம்பர் , நொண்டி விளையாட்டு,கபடி,அஞ்சான் கல் ,பாண்டியன் குழி, உயிர் கொடுத்து விளையாடுதல் போன்ற விளையாட்டுகள் இப்பொழுது உள்ள கிராமத்து சிறுவர்கள் கூட இவ்வித விளையாட்டை விளையாடுவது கிடையாது .
மெல்ல மெல்ல நம் மண் வாசனையுடன் கூடிய இந்த விளையாட்டுகள் நம் காலத்திலேயே நம் கண் முன்னே சிறுக சிறுக மறைந்து கொண்டு இருக்கிறது .

இப்பொழுதுள்ள சிறுவர்கள் கூட கையில் கிரிக்கெட் மட்டையை பிடித்து கொண்டும், கூடை பந்தை அடித்து கொண்டும் திரிகிறார்கள் .நான் இதை தவறு என்று சொல்ல வரவில்லை எங்கோ அந்நிய மண்ணில் இருந்து வந்த விளையாட்டை நாம் பெரிதும் விருப்பும் பொழுது நம் மன்னனின் விளையாட்டுகள் என் மறக்கடிக்க படுகின்றன .
நான் மேலே குர்ரிப்பிட்டுல்குத்து விளையாட்டு,கண்ணாம் poochi விளையாட்டுகள் எல்லாம் மனதிற்கும்,நம் உடம்பிற்கும்,மிகுந்த உற்சாகத்தையும்,நண்பர்களுகுடனான பின்னைப்பு, ஒற்றுமை போன்றவை சிறுவர்களின் மனதில் ஏற்படுத்து கின்றன .மேலும் இது போன்ற விளையாட்டுகளுக்கு எந்த விதமான பொருட் செல்லவும் இல்லை,உடம்பு இருந்தால் போதும் .
பின்பு என் இந்த விளையாட்டுகள் நம் கண்முன்ன மறைந்து கொண்டு இருகின்றன ?

காரணம் முன்பெல்லாம் தொலைக்காட்சி வசதி அதிகமாக இருக்காது அப்படியே இருந்தாலும் தூர்தர்ஷன் ஒன்று தான் பிரதான வீடுகளில் தெரியும் .
அதனால் சிறுவர்களுக்கு வேறு பொழுது போக்கு இல்லை அதனால் நன்றாக விளையாடினார்கள் .ஆனால் இப்பொழுது அப்படியா நூற்று கணக்கான தனியார் தொலைக்காட்சிகள் பணம் பண்ணும் ஒரே ஒரு குறி கொள்ளுக்காக
சிறுவர்களின் மனதை சிதைக்கும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றன .சிறு பருவதினர்க்காகவே சில பன்னாட்டு சேனல்கள் ஒலிபரப்பு ஆகின்றன .பள்ளியை விட்டு வரும் சிறுவர்களும் தொலைக்காட்சியே கதி என்று கிடக்கின்றனர் .அவர்கள் பொய்யான ஒரு மாயா பிம்பதினையே தன் நிஜம் என்று அவர்கள் மனதில் ஊன்றிவிடுகிறது .இன்னும் சில சிறுவர்கள் விளையாடுவார்கள் என்னவென்று பார்த்தல்,கிரிக்கெட்,டென்னிஸ் போன்றவையாகும் .

ஊடகங்களின் தொடர் பிரச்சாரத்தால் அவர்கள் டென்னிஸ்,கிரிக்கெட்,குத்து சண்டை போன்றவையே விளையாட்டுகள் என்று ஒரு எண்ணம் பலருக்கு வந்து விடுகிறது .இதில் இன்னு பிற விளையாட்டுகளையும் சேர்த்து கொள்ளலாம் .அனைத்தும் எப்படி நம் நாட்டிற்க்கு வந்தது என்று பார்த்தீர்கள் என்றால் தொலைக்காட்சி வாயிலாகத்தான் பெரும்பாலும் நம் மனதில் இடம் பெற்றன .
இவை அன்னதும் மேற்கத்திய விளையாட்டுகள் என்றாலும் அதில் ஒரு குறிப்பிடா அளவினர்தான் விளையாட முடியும். ஆனால் நம் கிராமத்து விளையாட்டுகள் அப்படி அல்ல எதனை பேர் வேண்டு மானாலும் பங்கேற்று விளையாடலாம் .

இப்போதுள்ள பெரும்பான்மையான பெற்றோர்கள் தங்கள் குழந்தை விளையாடுவதற்கு அனுமதிப்பதில்லை .பள்ளியில் உள்ள விளையாட்டு நேரம் தவிர சிறுவர்களும் விளையாடுவது இல்லை குழந்தைகள் வந்தவுடன் அவர்களை டியூஷன் க்கு அனுப்பி விடுகின்றனர் ,இன்னும் சிலரோ டான்ஸ் கிளாஸ் ,மியூசிக் கிளாஸ் போன்றவற்றுக்கு அனுப்பி தங்கள் குழந்தைகளை
"கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிபோலாமா" ,வேர் ஈஸ் தா பார்ட்டிக்கும் ஆடவிட்டு சந்தோஷ படுகின்றனர்.

இப்பொழுது உள்ள குழந்தைகள் அவர்களின் சிறுவயதின் அருமை தெரியாமல் வளர்கின்றனர் .இதற்க்கு காரணம் பெற்றோர்களும் ஊடங்களும் தான் என்று சொன்னால் அது மிகயாகாது .

இதுக்கு தீர்வு என்று பார்த்தால் சிறுவர்களை அதிகமாக தொலைக்காட்சி முன் அமர அனுமதிக்ககூடாது .மாலை பொழுதில் அவர்களை வித விதமான விளையாட்டுகளை விளையாட சொல்லி ஊக்கப்படுத்த வேண்டும் . அவர்கள் இருக்கும் பொழுது அதிகமாக தொலைக்காட்சி பெட்டியை பார்க்ககூடாது,
தொலை காட்சிகளும் சிறுவர்களின் நலன் கருதி சினிமா தொடர்பு இல்லாது அறிவு சார் நிகழ்ச்சியை தயாரிக்க வேண்டும் .

இன்று சில கிராமங்களில் நீங்கள் "வெண்ணிலா கபடி குழு" வில் பார்த்து இருப்பீர்கள் அது போல திரு விழா நாட்களில் மட்டும் தான் நம் விளையாட்டுகளை பார்க்க முடிகிறது.
மீண்டும் எழுமா நம் மண்ணின் விளையாட்டுகள் .
அல்லது நமூர் கோலி சோடாவை அடித்து நொறுக்கிய அந்நிய குளிர் பானும் போல் நம் மண்ணின் விளையாட்டுகளை பணம் கொழிக்கும் அந்நிய விளையாட்டுகளும் ,முதலாளித்துவ ஊடகங்குளும் நம் கண்ணில் இருந்து
மறைத்து விடுமோ?
சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது

புதிய மொபைல் சேவை அறிமுகம்


சென்னையில் புதிய மொபைல் சேவை அறிமுகப்படுத்த பட்டுள்ளது .அந்நிறுவனத்தின் பெயர் எம் டி எஸ் ஆகும்,ரஸ்யாவின் பொது துறை நிறுவனமான சிஸ்டெமா
மற்றும் இந்தியாயவின் ஷ்யாம் குழுமமும் இணைந்து தமிழ் நாட்டில் புதிய மொபைல் சேவையை தொடங்கியுள்ளன .கடந்த சில நாட்களாக அதன் முட்டை வடிவ விளம்பரத்தை கண்டு இருப்பீர்கள் (எல்லாமே மாறும் விரைவில் என்று எல்லாம் மாறுமா என்று பொறுத்து இருந்து பார்போம் ).
எம் டி எஸ் நிறுவனம் தமிழகத்தில் முதலில் "பிரிபெய்டு' சேவையை அறிமுக படுத்தியுள்ளது .
499 ரூபாய் செலுத்தி முதலில் செலுத்தி எம் கார்டு திட்டத்தில் இணைப்பு பெறுபவர்கள் வாழ்நாள் முளுவதுள் பத்து லட்சம் இலவச நிமிடங்கள் லோக்கல் கால்களை இலவசமாக பேசி கொள்ளலாம் .இதன் படி எம் டி எஸ் மொபைல் இணைப்பிலிருந்து மற்றொரு எம் டி எஸ் மொபைல் இன்னைபிற்கு தினமும் 150கால்கள் இலவசமாக பேசி கொள்ளலாம் .மற்றும் நாள் ஒன்றிற்கு அனைத்து மொபைல் நிறுவன மொபைல் சேவைக்கும் 10 எஸ்.எம்.எஸ் இலவசமாக அனுப்பி கொள்ளலாம் .

எம் எஸ் பல்வேறு விதமான டரிப் கார்டுகளை வெளியிட்டு உள்ளது
எம் சேவர் 45 மதிபுள்ள ரேட் கார்டு பயன்படுத்தி எம்டிஎஸ் டு எம்டிஎஸ் அனைத்து லோக்கல் கால்களும் இலவசமாக பேசி கொள்ளலாம்
மேலே இருக்கும் ரேட் கார்டு
படி நாற்பத்தைந்து செலுத்தி எம்டிஎஸ் டு எம்டிஎஸ்-25/மின்
மற்ற மொபைல்களுக்கு 49p/மின்
தேசிய கால்களுக்கு 1/min பேசி கொள்ளலாம்

எம் சேவர் ருபாய் முப்பது மதிப்புள்ள ரேட் கார்டை பயன் படுத்தி முதல் இரண்டு எஸ் எம் எஸ் தவிர அனைத்து லோக்கல் மற்றும் தேசிய எஸ் எம் எஸ் கள் இலவசம் .

எம் சாவேர் ருபாய் இருபத்தியைந்து மதிப்புள்ள ரேட் கார்டை பயன் படுத்தி
அனைத்து லோக்கல் கால்களும் 49p/மின் பேசி கொள்ளலாம் .

புதிதாக வந்துள்ள இந்த மொபைல் சேவை எப்படி செயல் படும் என்று பொறுத்திருந்து பார்போம்



Jan 3, 2009

என்ன செய்கிறது நமது பாது காப்புத்துறை

நூறு கோடி மக்களும் உன்னை நம்பி உறங்குகின்றனர் நீ உறங்காமல் இருப்பதான்னால்.

மும்பை தாக்குதலை அடுத்து நமது நாட்டிற்கு புதிய உளவுத்துறை அமைப்பை ஏற்படுத்தியது மதிய அரசு .ஆனாலும் இன்னும் குண்டு வெடிப்புகள் தொடர்ந்து கொண்டுருக்கிறது என்பது வருந்தபட்தக்க ஒன்றாகும்.அஸ்ஸாம் மாநிலத்தில் ஏற்பட்ட தொடர் குண்டு வெடிப்பு என்பது இன்னும் நமது பதுகாப்பு துரையின் குறைபாட்டை வெளிச்ச மிட்டு காட்டுகிறது .

நமது நாட்டிற்கென்று புகழ் பெற்ற உளவுத்துறைகள் இருகின்றன இருந்தும் என்ன பயன் இஸ்ரேலின் மொசாத் மற்றும் அமெரிக்காவின் பெடெரல் புலனாய்வு துறை போல் நடக்க போவதை முன்கூடியே உறுதிப்படுத்த வேண்டாமா .மதிப்ற மனித உயிர்கள் மடிந்த பின்பு பாதுகாப்பை சில நாட்களுக்கு பலபடுதுவதும் பின்பு எப்பொழுதும் போல் அசட்டையாக இருபதும் வாடிக்கையாகிவிட்டது .

உளவு அமைப்புகள் நாட்டிற்காக வேலை பார்பதை விட்டு விட்டு அரசியல் வாதிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் உளவு பார்ப்பது தொடர்ந்தாள் இன்னும் பல இழப்புகளை நாம் சந்திக நேரிடும் .

நான் நமது பாதுக்கப்பு துறையை குறைத்து சொல்ல வரவில்லை அதில்லுல குறைகளை கலய சொல்லிகிறேன்.


Jan 2, 2009

மதுவால் கெட்டது நம் தமிழ்நாடு


ஒருவன் மது அருந்தினால் அவனுக்கு மட்டும் கேடு அல்ல அவன் குடும்பத்துக்கே கேடு .மக்களை காக வேண்டிய அரசே மக்களை மயக்குகிறது மதுவால் .
தமிழக அரசே ஆளும் அரசே நீங்கள் செய்த சாதனை பட்டியலை ஒவ்வொரு மாநாட்டிலும் வாசிபீர்களே இதையும் சேர்ந்து வாசியுங்கள் .

நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு இவ்வளவு மதுகடைகளை துறந்தோம் அதனால் நம் குடிமகன்கள் இவ்வளவ்வு பேர் போதிக்கப்பட்டு இருகிறார்கள் மன்னிக்கவும் பாதிக்கப்பட்டு இருகிறார்கள் .பொங்கல் ,தீபாவளி ,புத்தாண்டு போன்ற திருநாட்களில் நாங்கள் அரசுக்கு ஒரே நாளில் நூற்றி ஐம்பது கோடி வருமானம் ஈட்டி தந்தோம் . எங்கள் ஆட்சியில் மதுவை அருந்தி வாகனம் ஓடியதில் இவ்வளவு ? பேர் மரணம் .எவ்வளுவு குடும்பங்கள் நடு தெருவுக்கு வந்துள்ளன போன்ற அரும் பெரும் சாதனை பட்டியல்.

வருங்கால சமுதாயம் இளைஞர்கள் கையில் என்று கூவுகிறீர்கள் ,ஆனால் அவர்கள் கையில் மது கூபி தானே இருக்கிறது .பின் எப்படி ஒரு அருமையான சமுதாயம் உருவாகும் .

மது கடைகளை துறப்பதிர்ருக்கு பதிலாக அரசு மருத்துவ மனையை துவக்குங்கள் .ஏழை உங்களை வாழ்த்துவான் .இருக்கும் அரசு மருத்துவமனைகளை மேன்படுதுங்கள்.

இன்னும் குறிப்பாக தமிழ் நாட்டுல மது உற்பத்தி ஆலைகளை இழுத்து மூடுங்கள்.

தங்கள் சுய விளம்பரத்தை மறந்து மதுவால் ஏற்படும் தீமையை மக்களிடத்தே ஊடகங்கள் மூலமாக விளக்குங்கள்.

இன்னும் பெறு நகரங்களில் மேல் தட்டு வர்க்கத்தினர் குறிப்பாக இளைஞர்கள் பெண்கள் எல்லாம் கூட மேற்கத்திய மோகத்திற்கு அடிமையாகி மதுவை அருந்துவதில் பெருமை கொள்கின்றனர். நமது நாட்டிற்க்கும் நமது பண்பாட்டிற்கும் நல்லதலே.

Jan 1, 2009

தாயே என்ன பிழை செய்தோமடித் தாயே

மக்கள் தொலைகாட்சியில் ஒளிபரப்பு ஆகிவரும் ஈழம் தொடர் மிகபெரிய அதிர்வை தமிழ் மக்களிடையே ஏற்படுத்திய அந்த தொடர் . நம் இனம் ஒரு பகுதி நம் கண் எதிரிலேயே அழிகிறது .இலங்கை அரசின் ராணுவ தாக்குதலால் ஈழ மக்கள் தினமும் வாழ்வா சாவா நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் .இலங்கையை தன் உழைப்பால் செளிப்பாகிய இனம் இப்பொழுது நாதியற்று கிடக்கிறது .

பொழுதுபோக்கு தொலைகாட்சிகளுக்கு நாடுவே மக்கள் தொலைக்காட்சி ஈழ நிலையை ஒளிபரப்பி தன் சமுஉக பொறுப்பை நிலை நாட்டியதுக்கு நன்றி.

(ஈழ தொடரின் கோப்புக் காட்சி தொடர்பு இன்னைய தளம் தெரிந்தால் என்னக்கு தெரிவியுங்கள்.)