இணைய சொந்தங்களே வருக வருக !!!!!!!

Pages

Jun 20, 2009

உங்கள் வலைத்தளத்தை விளம்பரப்படுத்த ஒரு இலவச இணையத்தளம்

நமது வலைத்தளங்களை விளம்பரப்படுத்த பலரும் பல்வேறு விதமாக முயற்சிப்போம். இன்னும் சில பேர் அதிக பச்சமாக கூகிள் அட்வோர்ட்ஸ் மூலம் கூட பணம் கட்டி விளம்பர படுத்துவார்கள் .

(அட்க்ரிட்வோர்க்) என்ற இந்த இணைய தளம்- இணையதளங்கள்,பதிவு தளங்கள் போன்றவற்றை இலவசமாக விளம்பரப்படுத்தும் வசதியை கொண்டுள்ளது .

நமது பதிவு தளங்களை விளமப்ரபடுத்த முதலில் அதில் உறுப்பினர் ஆகவேண்டும் .பின்பு நமது தளத்தின் முகவரியை அங்கு பதித்து பின்பு அவர்கள் தரும் (html code) ஐ நமது தளத்தில் ஏற்றி கொள்ள வேண்டும் அவ்வளவுதான் .

எப்படி நமது தளங்கள் விளம்பரம் ஆகும் என்று கேட்குறீர்களா?.அட்க்ரிட்வோர்க் தளத்தில் பல்லாயிரம் இணைதளங்கள் உறுப்பினராக உள்ளன . அதன் மூலம் நமது தளங்கள் அவர்களுடைய தளத்தில் விளம்பரபடுத்தப்படும்.அதற்க்கு பதிலாக மற்ற தளங்களின் விளம்பரம் நமது தளத்தில் வெளியிடப்படும்.
நமது தளத்தை பற்றிய விளம்பரம் எத்தனை முறை மற்ற தளத்தில் வெளியிட பட்டுள்ளது என்றும் விரிவாக இந்த அட்க்ரிட்வோர்க் இணையதளத்தில் பார்த்துக்கொள்ளலாம் .மேலும் எவ்வளவு பேர் நமது தளத்தின் முகவரியை கிளிக் செய்து உள்ளனர் என்றும் பார்த்து கொள்ளலாம்.


மேலும் கூகிள் அட்வோர்ட்ஸ் உள்ளதை போலவே நமது தளத்திற்கான விளம்பர வரிகளை சொந்தமாக அமைத்து கொள்ளலாம்.நமது இணையத்தளத்தில் வரும் அட்க்ரிட்வோர்க் விளம்பர பலகை அளவையும் நம் மாற்றி கொள்ளலாம் .
இணையதளத்திற்கு செல்ல இங்கே அழுத்தவும்

Jun 18, 2009

முகம் மாறும் மக்கள் தொலைக்காட்சி!


அரசியல் கட்சிகள் தங்களுக்கு என்று ஒரு தனிப்பட்ட தொலைக்காட்சி சானல்களை வைத்துள்ளன என்பதை யாவரும் அறிந்ததே.தமிழ் தமிழ் என்று தமிழை கொன்று சினிமா அதை சார்ந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி கொண்டிருக்கும் தொலைக்காட்சிகளுக்கு மத்தியில்,மக்கள் தொலைக்காட்சி தனது வித்யாசமான அணுகுமுறையால் தனக்கென தனி இடத்தை பெற்றது.

பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அவர்களால் தொடங்கப்பட்ட இந்த மக்கள் தொலைக்காட்சி .மண் பயனுற வேண்டும் என்ற கூறிய நோக்கத்திற்கு தொடங்கப்பட்ட இந்த தொலைக்காட்சி மற்ற தொலைக்காட்சிகளை காட்டிலும் வித்யாசப்பட்டது .அரசியலில் ஆயிரம் பல்டி அடித்தாலும் மக்கள் தொலைக்காட்சி எந்த வித சமரசமும் செய்து கொள்ளவில்லை தனது நிகழ்ச்சிகளில் .

சுதந்திரதினம், பொங்கல், தீபாவளி நடிகைகள் பேட்டி எடுக்கும் தொலைகாட்சிகளுக்கு மத்தியில் மக்கள் சார்ந்த கிராமிய மனம் கமழும் நிகழ்ச்சிகளை வழங்கி தமிழ் மக்கள் இடத்தே ஒரு நற்பெயரை பெற்று இருந்தது .
கோட்டு,சூட்டு போட்டு கொண்டு செய்திவாசிபவர்கள் மத்தியில் சட்டை ,வேட்டி,வெள்ளை துண்டு அணிந்து செய்திவாசிபதிலும் வித்யாசம் காட்டியது ,அதிலும் முடிந்தவரை தமிழ் பெயரையே பயன்படுத்தி வந்தார்கள் .நிகழ்ச்சிகளில் ஒரு தரம் முகம் சுளிக்க வைக்காத காட்சி அமைப்பு என்று பலதரப்பிலும் பாராடப்ப்டது.

விளம்பரத்திலும் உடலுக்கு கேடு விளைவிக்கும் குளிர்பானங்கள் போன்றவற்றை ஏற்று கொள்ளவதில்லை என்ற கட்டுப்பாடு .மக்களை ஆட்டுவிக்கும் மெகா சீரியல் நாடகங்களுக்கு மத்தியில் சந்தன காடு ,ஈழம் நேற்றும் இன்றும் ,நேதாஜியின் வரலாறு போன்ற தொடர்களை ஒளிபரப்பி தமிழ் தொலைக்காட்சி நேயர்களை தன் பக்கம் கவர்தது .

இப்படி அனைத்திலும் வித்யாசம் காட்டிய இந்த மக்கள் தொலைகாட்சியில் டெலி
ஷாப்பிங் விளம்பரங்கள் அண்மைக்காலமாக ஒளிபரப்ப படுகிறது .வித்யாசமான நிகழ்ச்சிகளை கொடுக்க முடியாத மற்ற தொலைக்காட்சிகள் தான் இப்படி டெலி ஷாப்பிங் விளம்பரங்களை காட்டி காலம் கடத்தி கொண்டு இருகிறார்கள் .ஏன் இந்த மாற்றம் மக்களுக்காக ஒரு தொலைக்காட்சி என்ற பெயர் பெற்ற இந்த தொலைக்காட்சி எப்படி தனது நிகழ்ச்சிகளை சமரசம் செய்து கொண்டது .
விரைவில் இயேசு அழைக்கிறார் போன்ற நிகழ்ச்சிகளும் ஒளிபரப்ப படும் என்று வார ஏடுகளில் படித்தேன் .

மக்கள் தொலைக்காட்சி ஏன் இப்படி ஆகிவிட்டது?. மாற்றத்தை கொண்டுவந்து உலகு வாழ் தமிழர்களிடையே ஊடக புரட்சி செய்த இந்த தொலைக்காட்சி மீண்டும் தனது பழைய முகத்திற்கு மாற வேண்டும் .மாறுமா ?

Jun 6, 2009

தீவிரவாதம் ஏன் ?

இன்று உலகத்தை அச்சமுற செய்து கொண்டு இருக்கும் விஷயம் தீவிரவாதம்.உலகத்தில் ஏதாவது ஒரு இடத்தில் தீவிரவாத தாக்குதல் நடந்து கொண்டு இருக்கிறது.அதில் பலியாவது பெரும்பாலும் அப்பாவி மக்கள் மட்டுமே.தீவிரவாதத்திற்கு நாடுகள் கிடையாது,மடங்கள் கிடையாது,மொழிகள் கிடையாது,அதற்க்கு தேவையானது உயிர்கள் மட்டுமே.

நமது இந்தியாதேசம் மிகப்பெரிய சாவல்களை சந்தித்து கொண்டு இருக்கிறது.நமது அண்டை நாடான பாகிஸ்தானும் இதற்க்கு விதிவிலக்கல்ல தினம் தினம் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது.வருட வருடம் நமது பாதுகாப்பு துறைக்கு ஒதுக்கும் நிதி அதிகரித்து கொண்டே வருகிறது.தீவிர வாதிகள் மிரட்டல் விட்டால் சில நாட்களுக்கு முக்கிய இடங்களில் பாதுகாப்பை அதிகபடுதுவதும் பின்பு ஒன்றும் நிகழாத பொது அந்த பாதுகாப்பை விளக்கி கொள்வதும் அன்றாட வேலையாய் போனது.அதிலும் தீவிரவாத மிரட்டல் காரணமாக அரசியல் வாதிகளுக்கும் ,பெரிய பெரிய தொழில் அதிபருக்கும் பல அடுக்கு பாதுகாப்பு அளிக்க பட்டு வருகிறது .மக்களின் வரிப்பணம் இப்படி தீவிரவாத தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கையில் செலவு செய்தால் ,ஏழைகள் அதிகம் வாழும் நம் தேசம் எப்படி முன்னேறும்.

வந்த பின் காப்பதற்கு பதிலாக வருமுன் காத்தால் இன்னும் நன்றாக இருக்கும் அல்லவா !.நம் நாட்டில் வறுமை இன்னும் கோர தாண்டவம் ஆடிக்கொண்டு இருக்கிறது,ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை நம் நாட்டில் அப்படி இருக்க
மக்கள் செலுத்தும் வரிபணத்தை முழுமையாக மக்களுக்காக செலவிட முடியவில்லை.நமது வரிப்பணம் இராணுவம் ,உளவு அமைப்புகளுக்கு செலவிடபடுகின்றன இருந்தும் என்ன பயன் ?தீவிர வாதம் இன்னும் வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது .

முதலில் நமது ஆளும் அரசுகள் தீவிரவாதத்தை பற்றி முறையாக ஆராயவேண்டும் .தீவிரவாதிற்கான அடிப்படைக்காரணம் வறுமை,போதிய கல்வி அறிவு இல்லாமை,வேலை இன்மை போன்றவைதான்.முதலில் நமது அரசு இந்த குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.
தீவிரவாதிகளில் பெரும்பாலும் இளைஞர்கள் தான் அதிகம் இருகிறார்கள்.எப்படி இந்த தீவிரவாத அல்லது தடை செய்ய பட்ட அமைப்புகளில் சேருகிறார்கள் அல்லது சேர்க்க படுகிறார்கள் ?.இந்த தீவிரவாத அமைப்புகளின் முதல் குறி வேலை இல்லாத இளைஞர்கள் மற்றும் வறுமையின் பிடியில் இருப்பவர்கள் தான் .வறுமை காரணமாக இந்த இளம் சமூகம் தீவிரவாதத்தை நோக்கி செல்கிறது .மனதளவில் உடைந்து கிடக்கும் இத்தகைய இளைஞர்களை சுலபமாக மூளை சலவை செய்ய பட்டு தீவிரவாதிகளாக மாற்றபடுகிறார்கள்.உனக்கு தேவையானதை நீ பெற்றுகொள்ள துப்பாக்கியை பிடிப்பது தப்பே இல்லை என்ற நிலைக்கு அவர்கள் கொண்டு வரபடுகின்றனர் .விளைவு அரசாங்கத்தை தன் பக்கம் திருப்ப
பொது இடங்களில் குண்டு வைப்பு இல்லை அரசு அமைப்புகள் மீது தாக்குதல் நடத்துதல் போன்றவற்றை செய்கின்றனர்.ஆனாலும் பெரும்பாலும் உயிரிழப்பதோ அப்பாவி மக்கள் மட்டுமே .

தீவிரவாதத்தை குறைக்க முதலில் தவிக்கும் மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதுதான் .இலவசமாக தருகிறேன் பேர்வழி என்று மக்களை முடக்காமல் இளைய சமுதாயத்தை முன்னேற்ற உறுதுணையாக இருக்க வேண்டும்.பாதுகாப்பாக செலவிடப்படும் பணத்தில் சிறிது ஏழைமக்களின் அடிப்படை தேவைகளுக்காக செலவு செய்தால் வறுமை ஒளியும்.வேலைவைபை பெறுகிறேன் என்று கூறிக்கொண்டு கணினி வேலையை மட்டுமே உருவாகாமல் மற்ற துறைகளிலும் வேலைவைபை உருவாக்க வேண்டும் .தடம் புரளும் இளைய சமுதாயத்தை நேர்வழியில் செல்ல அரசாங்கம் முன்வரவேண்டும். அப்பொழுது தான் இளைஞர்கள் இந்த நாட்டிற்க்கு தூணாக இருப்பார்கள் இல்லையேல் அவர்கள் மனம் துருவேறி துப்பாகியை தூக்கும். அது நம் நாட்டுக்கு தேவையா ?









May 30, 2009

ஆற்காட்டாரிடம் வெத்து வேட்டு வெள்ளச்சாமியின் நகைச்சுவை பேட்டி

(இது முற்றிலும் நகைச்சுவைக்காக மட்டுமே)
நமது தமிழ் ஊடக சிறப்பு நிருபர் வெத்து வேட்டு வெள்ளச்சாமி -ஒளிவிளக்கு துறை (மின்வெட்டு ) வீராசாமியுடன் நகைச்சுவை நேர்காணல்.

(நமது நிருபர் அவரின் நேர்காணலுக்கு காத்து கொண்டு இருக்கிறார் அப்பா பார்த்து மின்சாரம் கட் ஆகிடுச்சு ,என்னடா இப்படி ஆகிபோச்சே அப்பிடீனு நமது நிருபர் நொந்து கொண்டு இருக்கும் வேலையில் திடீர் என்று ஒரு வெளிச்சம் தென்படுகிறது என்ன வென்று பார்த்தல் நமது வணகத்துகூரிய ஒளிவிளக்கு துறை அமைச்சர் வீராசாமி கையில் விளக்கு ஏந்திய படி நடந்து வருகிறார்.வந்ததும் மேசை மேல் வெளக்கை வைத்து விட்டு உங்கள் பேட்டியை ஆரம்பியுங்கள் என்றார் )

நிருபர்:வணக்கம் சார்.

(சீக்கிரம் பேட்டிய ஆரம்பி பாஸு பீசு கட்டய புடுங்கறதுக்கு நேரமாச்சு என்று நினைத்த படியே )
ஒளிவிளக்கு :வணக்கம் வணக்கம் பேட்டியை ஆரம்பிங்க?

நிருபர் :சார் நடந்து முடுஞ்ச பாராளுமன்ற தேர்தலில் உங்கள் கட்சி அதிக இடங்களில் தமிழகத்தில் வெற்றி பெற்றுள்ளதை பற்றி என்ன நினைகிறீர்கள் ?

(எங்க ஆத்தா மேல சத்தியமா நா இத எதிர்பாக்கவே இல்ல என்று நினைத்து கொண்டு )
ஒளிவிளக்கு:இந்த வெற்றி நாங்க ஏற்கனவே எதிர் பார்த்துதான் ஆனா ?

நிருபர்:என்ன ஆனா சார் ?

(சுதாரித்து கொண்டு )
ஒளிவிளக்கு :ஆனாவும் இல்ல ஆவன்னாவும் இல்ல அடுத்த கேள்விய கேளுங்க

நிருபர்:நீங்க ஒரு பொது கூட்டத்தில தேர்தலில் எனது கட்சி தோல்வியை தழுவினால் அதற்க்கு நாந்தான் காரணம் என்று கூறினீர்களே அதை பத்தி இப்பொழுது உங்கள் கருத்து என்ன ?

(எதுக்கு இதய எல்லாத்தையும் கொடஞ்சு கொடஞ்சு கேக்குறான்)
ஒளிவிளக்கு: அது ஊடங்களில் திரித்து வெளியிடப்பட்ட செய்தி

நிருபர்:சார் உங்களால சிறு தொழில் செய்யறவுங்க எல்லாம் கடுமைய பாதிப்பு அடங்சுருக்காங்க


(ஏன்டா கரண்டு இருந்த குடுக்க மாட்டமா என்று நினைத்த படி )
ஒளிவிளக்கு: இது எதிர் கட்சிகள் திட்டமிட்டே பரப்புற பொய் ஏன் என்றால் நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு மெழுகுவத்தி தொழில்,ராந்தல் விளக்கு உற்பத்தி ,ஜெனரேட்டர் உற்பத்தி பன் மடங்கு வழங்துள்ளதே இதில் இருந்தே நீங்கள் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும் எங்கள் ஆட்சியில் சிறுதொழில்கள் பாதிக்க படவில்லை என்று

நிருபர்:சார் தேர்தலுக்கு முன்ன கொஞ்ச நாள் கரண்டே கட்டு ஆகறதில்ல தேர்தல் முடுஞ்சப்பரம் மறுபடியும் மின்வெட்டு இருக்கிறதா பொதுமக்கள் புலம்ப ஆரம்பிச்சுட்டாங்களே

ஒளிவிளக்கு:அதுக்கு காரணம் டேம்ம்ள(அனை) தண்ணி வத்தி போச்சு அப்புறம் பொள்ளாச்சி பக்கத்துல்ல கற்றாளை உற்பத்தி செய்ற பேன் விசிறி நாள் ஒடஞ்சு போச்சு அத கூடிய சீக்கிரம் ரெடி பண்நீருவோம்.

நிருபர்:உங்கள பதிவர்கள் நிறைய பேர் ஒட்டி ஒட்டி எழுதி கிண்டல் பண்றாங்களாம் உங்களுக்கு அதபத்தி எதாவது (சொல்லி முடிகரதுக்குலேயே முந்திக்கொண்டு)

ஒளிவிளக்கு ;ம்ம் அத பத்தி நா கேள்வி பட்டேன் யார் யார் ஒட்டி எழுதுறாங்கன்னு ஒரு லிஸ்ட் ரெடி பண்ணிட்டு இருக்கிறோம் கூடிய சீக்கிரம் -

நிருபர்:கூடிய சீக்கிரம் ?

ஒளிவிளக்கு :கூடிய விரைவில் நானும் ஒரு ப்ளாக் ஆரம்பிச்சு அவங்கள ஒட்டி ஒட்டி எழுதலாம்டு இருக்கேன் .

நிருபர் :(கொஞ்சம் மெதுவாக) சார் எதிரொலி அப்படீன்னு ஒரு நாளிதழ் வருது அதனுடைய சர்குலேசன் எப்படி போகுது ?

(அத நானே படிக்கறதில்ல)
ஒளிவிளக்கு :டீ கடக்காரன் போண்டா மடிக்கரதுக்கு சும்மா குடுத்தாலும் கூட வாங்க மாட்டீங்கறான்

நிருபர்:(தலைவரு தினம் அதுல்ல கவிதை எழுதுவாரோ என்னவோ என்று நினைத்த படி)இந்த மின்வெட்டு எப்ப குறையும்

(அது நா இருக்கிற வரைக்கும் நடக்காது)
ஒளிவிளக்கு:வருகிற சட்டமன்ற இடை தேர்தலை ஒட்டி கம்பம்,தொண்டாமுத்தூர் உட்பட நான்கு தொகுதிகளிலும் விரைவில்(தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும்)மின்வெட்டு அங்கு ரத்து செய்ய படும் அதை விடுத்து மற்ற பகுதிகள் தொடர்ந்து என் கண்காணிப்பிலேயே இருக்கும் .

நிருபர்:சார் மக்கள் உங்க மேல வெறுப்ப இருக்காங்க ஒரு அமைச்சர அத பத்தி உங்கள் கருத்து

ஒளிவிளக்கு:அந்த கோபத்தை இந்தியா ஜனநாயகத்தின்(பணநாயகத்தின்) அடிப்படையில் தேர்தலின் பொது மரகடிக்கப்படும்

நிருபர் :கடைசி கேள்வி சார் நீங்க (2011) தேர்தல்ல உங்க வெற்றி வைப்பு எப்படி இருக்கும்னு நினைகிறீங்க

(அதே ஏன்டா நியாபகபடுதுறீங்க)
ஒளிவிளக்கு :தமிழின தலைவர் தற்பொழுது மக்களை (தன்)குடும்பம் போல் கருதி சேவை செய்து வருகிறார் அதன் மூலம் அடுத்த தேர்தலிலும் நான் வெற்றி பெறுவது உரிதி.

முற்றும் .
(நல்ல இருந்த நல்ல இருக்குன்னு கமெண்ட் போடுங்க நல்ல இல்லேன்னா மொக்கைனு சொல்லுங்க அடுத்த முறை இன்னும் சிறப்ப பன்றதக்கு)




வருக வருக ராஜபக்க்ஷே அவர்களே ?

இலங்கை அதிபர் ராஜப்பக்ஷே இந்தியா வருகை தருவார் என்று எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார் என்று நாளேடுகள் தெரிவிக்கின்றன.

இலங்கை மண்ணில் என் இன மக்களை கொன்று குவித்து ,என் இன பெண்களின் கற்பை பறித்து ,இளைஞர்களை தூக்கில் தொங்கவிடப்பட்டு ,ஏன் கருவிலிருக்கும் சிசுவைகூட விட்டுவைக்காமல் துப்பாக்கி தோட்டவிர்க்கு இரையாக்கி ரத்தம் குடித்த சிங்கள பேரினவாத அதிபர் வருக! வருக! என்று வரவேர்க்கபடுவீர்கள் எங்களை ஆளும் ஆட்சிகாரர்களால் .

நாங்கள் ஒன்றும் சீக்கியர்கள் ஆல்ல தன் இனம் அவமானபட்டால் ,அடிமைபடுதப்பட்டால் செருப்பால் அடிப்பதற்கும் ,அந்நிய நாட்டில் தன் இனத்தான் ஒருவன் கொல்லப்பட்டால் கலவரம் செய்து பொது(7000கோடி) சொத்தை சேத படுத்துவதற்கும்.

நாங்கள் தமிழர்கள் தன்மானம் அற்ற தமிழர்கள் காசுக்காக ஓட்டை விற்று கள்ள ஒட்டு போடும் வீர தமிழர்கள் .தமிழன் தமிழன் என்று கூறிக்கொண்டே காசுக்காக தன் இனத்தை கொன்று குவிக்க உதவி புரிந்த கயவர்களுக்கே ஓட்டளிப்போம் .எத்தனை அவமானப்படாலும் அதை பொறுத்துக்கொண்டு (காசுக்காக ) அதை எல்லாம் மறந்து விடுவோம்,மன்னித்து விடுவோம் .

அதனால் நீங்கள் நிம்மதியாக இந்தியாவிற்கு வரலாம் ,எந்த பயமும் இன்றி ஏன் என்றால் நாங்கள் உங்களை ஒன்றும் செய்து விடமாடோம் ,ரத்தின கம்பள வரவேற்பளிப்போம் ,ஐந்து நட்சத்திர விடுதியில் தங்க வைப்போம் ,இன்னும் மீதமுள்ள என் இன மக்களை அளிப்பதற்கு தேவையான உதவிகளை செய்வோம் அல்லது தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு மறு சீரமைப்பு என்று நாங்கள் செலுத்திய வரி பணத்தை எங்கள் ஆட்சியாளர்கள் மூலம் தருவோம் நிம்மதியாக பெற்று செல்லுங்கள் .அங்கு சென்று மிச்சம் மீதி இருக்கும் என் இனமான தமிழர்களை அழிபீர்களோ அல்லது அடிமைபடுதுவீர்களோ நாங்கள் ஒன்றும் செய்யபோவது இல்லை .வெறும் கூச்சல் மட்டுமே போடுவோம் அல்லது பேரணி நடத்துவோம் அவ்வளவுதான் .

எங்களுக்கு தேவை ஈழ தமிழர்கள் வாழ்வுரிமை அல்ல ஆட்சி அதிகாரத்தை பிடிக்க வேண்டும் அதற்காக நாங்கள் என்ன வேணாலும் செய்வோம் அவ்வளவுதான் !.

May 27, 2009

இப்ப நாளும் புத்தி வரட்டும் -பசங்க உணர்வுகள்


முதலில் இந்த பதிவை எழுத காரணமே இயக்குனர் எம்.சசிகுமாரும் ,இயக்குனர் பண்டிராஜ் ஆகியோர் தான் காரணம் .தரமான படைப்பை சினிமா உலகத்திற்கு வழங்கிய பசங்க திரை பட இயக்குனர் பண்டிராஜ் மற்றும் இந்த கதையை துணிந்து இயக்கிய இயக்குனர் எம்.சசிகுமார் ஆகியோருக்கு என் நன்றி கலந்த பாராட்டுக்கள் .

பசங்க படத்தை பார்க்கும் பொழுது நம்ம சின்ன வயசு சேட்டைகள் ,நினைவுகளை கண்முன்னே கொண்டு வருது, இப்ப இந்த மாதிரி வித்யாசமான படங்கள் ஏன் தமிழ் சினிமா காரங்க எடுப்பதில்லை . ஒரே குட்டைல ஊர்ன மட்டையை போல ஒரே விஷத்தை திரும்ப திரும்ப செஞ்சுட்டு இருகாங்க. .ஏன்பா இப்படி படம் எடுகறீங்கன்னு கெட்ட , இந்த சமூகத்துல நடகறததான் படமா எடுகுரோம்னு சொல்லறாங்க.காதல் இல்லேன்னா பழிக்கு பழி வாங்கற கதைகள் இத விட்ட இந்த உலகத்துல வேற ஒண்ணுமே கிடையாத. சினிமாங்கறது ஒரு களம் அதை இந்த காதல், கத்தி குத்துக்கு மட்டுமே பயனபடுத்துறது சரி அல்ல .வெறும் தொப்புளையும் தோலையும் காட்டி பணம் சம்பாரிகறதை விட வித்யாசமான முயற்சிகளில் ஈடுபடலாம் .ஒரு படம் என்றால் ஒரு ஒபணிங்கு சாங்கு மூணு சண்டை காட்சி நாலு செண்டிமண்டு வெளிநாட்ல ரெண்டு பாட்டு இது மட்டும் போதுமா .

தொழில் நுட்பத்தில் பிரமாண்டமாக வளர்ந்து நிற்கும் தமிழ் சினிமா உலகம் கதை களத்தில் பின்தங்கியே உள்ளது .கதைக்காக தான் நாயகன் ஆனால் இங்கே நாயகனுக்கு உகந்தமாதிரி தான் கதை எழுத படுகிறது .கோடிகளில் புரளும் நடிகர்களுக்கு தெருகோடிகளில் வாழும் ரசிகன் புது பட போஸ்டருக்கு பால் ஊத்தும் நிலைமை இங்கே நிலவுகிறது.முதலில் நாம் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும் அவர்கள் வீரமல்லாம் சினிமாவில் மட்டுமே நிஜத்தில் அவர்கள் அப்படி அல்ல .நம் உணர்ச்சியை தூண்டி காசு சம்பாதிபவர்கள் .

சினிமா என்பது ஒரு சக்தி வாய்ந்த களம் அதை நல்ல வழியில் உபயோகித்தால் மிக பெரிய மாற்றத்தை இந்த சாமூகத்தில் கொண்டு வரலாம். விதயாசமான அதே சமயம் எதார்த்தமான சினிமா எப்பவும் வெற்றி பெரும் அதற்க்கு பெரிய கதாநாயகர்கள் தேவை இல்லை நல்ல கதை மட்டுமே இருந்தால் போதும் .நல்ல படைப்பை மக்கள் புறகணிக்க மாட்டார்கள் என்பதை சமீபத்தில் வெளிவந்த படங்களான வெண்ணிலா கபடி குழு ,சுப்ரமணியபுரம் போன்ற படங்களே சிறந்த உதாரணம் .

பிரம்மாண்டம் என்ற பேர்ல எது எதுக்கோ செலவு செய்ற நம்ம ஆளுங்க படத்திற்கு தேவையான கதையை கவனிப்பது இல்லை.
காலிவுட் தரத்திற்கான படம் என்று சொல்வார்கள் பொய் பார்த்தல் நாம சாப்டற காளிபிளோவேர் தரத்திற்கு கூட இருக்காது .காலிவுட் என்பது வெளிநாடிற்கான சினிமா தளம் அவ்வளவு தான் ,அப்பாவும் அங்கே கதைதான் ஹீரோ ,அந்த படத்தில் கதாநாயகன் கதாநாயகி யார்வேணாலும் சாகர மாதிரி கதை அமைத்து இருப்பார்கள் இல்லாமலும் போலாம் அங்கு பெரிய நடிக நட்சத்திரங்களே அதற்க்கு ஒப்புக்கொண்டு நடிப்பார்கள் .ஆனால் இங்கு நேத்து வந்த துண்டு துக்டா முரட்டு தளபதி ,தங்க தமிழன்னு பேர் போட்டுக்கிட்டு பண்ற அலம்பல் தாங்களை ,அதே நேரம் தயாரிப்பாளர்கள் ஒன்றை உணரனும் கடந்த வருடத்தில் ப்ரமாண்டம்னு சொல்லிடு வந்த படங்கள் அவ்வளவாக ஓடவில்லை .ஆனா கதையை மட்டுமே நம்பி வெளிவந்த குறைந்த செலவில் உருவான படங்கள் பெரிய அளவில் வெற்றி கண்டது .

அதே மாதிரி நாமளும் இந்த நடிகர்களை தூக்கி தலைல வச்சுட்டு ஆடறதை நாம நிறுத்திக்கணும்.பாராட்டுகள் இருக்கலாம் ஆனால் அவர்களையே தூக்கி வைத்து கொண்டாடுவது தவறு.அவர்களுக்காக நாமதான் அடுச்சுக்கிட்டு பாகயாளிய திரியிறோம் ,ஆனா அவுங்க இன்னிக்கு அடுச்சுகுவாங்க அப்புறம் நாளைக்கு போட்டோவுக்கு ஒன்னு சேர்ந்து போஸ் கொடுப்பாங்க .
அதனால தரமான படைப்புக்களை அரவணைத்து வெட்டி முழக்கம் போடும் அரைவேக்காடு தமிழ் படங்களை புறகணிப்போம் அப்பொழுதாவது அவர்களுக்கு புத்தி வரட்டும் நல்ல சினிமாவை கொடுக்க வேண்டும் என்று!