இணைய சொந்தங்களே வருக வருக !!!!!!!

Pages

Jul 4, 2009

கூகிள் இணையதளத்தால் பூமியின் சுற்று சூழலுக்கு பாதிப்பா?


இணைய உலகத்தில் முடிசூட ராஜாவான கூகிள் இணையதளத்தை பற்றி இணையம் உபயோகிக்கும் அனைவரும் தெரிந்து இருப்போம்.நாம் தேடும் தகவல்களை வினாடிக்கும் குறைவான நேரத்தில் நமது கண்முன்னே தகவல்களை கொண்டு வந்து கொட்டுகிறது .மற்றும் அதன் பல்வேறு விதமான சேவைகளால் பெரும்பாலான இனணயம் உலவும் மக்களை தன் பக்கம் ஈர்த்து வருகிறது .பிரமாண்ட தொழில் நுட்பத்தில் மிக எளிய நடையில் அனைவரும் பயன் படுத்துமாறு அதன் ஒவ்வொரு சேவையும் இருக்கிறது .இப்படி பல்வேறு புகழுக்கும் ராஜாவான கூகிள் தனது சர்ச் என்ஜின் சேவையால் பூமியின் சுற்று சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது எப்படி ?

அதாவது நமக்கு ஏதேனும் தகவல் தேவை பட்டால் நாம் உடனே செல்வது கூகிள் தேடுபொறியை தான் .உதாரணத்திற்கு ஒரு மென்பொருளை பற்றி தேடுகிறோம்" மென்பொருள் " என்று அடித்தவுடன் கூகிள் தனது ஒரு சர்வருக்கும் மட்டும் சென்று தேடாது பல்லாயிரம் மயில்களுக்கு அப்பால் உள்ள மற்ற சர்வேர்களிலும் மென்பொருள் குறித்த தகவல் இருக்கிறதா என்று தேடும் .அப்படி தேடும் வேகம் நொடிக்கும் குறைவானதே அந்த அளவிற்கு கூகிள் உள்கட்டமைப்பு வசதிகளை நவீன தொழிநுட்பத்தில் வைத்துள்ளது.அப்படி நாம் தேடும் தகவலை நம்மிடம் அதிவேகத்தில் கொண்டு வந்து சேர்ப்பதற்கு கூகிள் அதிக அளவு மின்சாரத்தை எடுத்துகொள்கிர்றது. இந்த ஒரு நிகழ்வால் மட்டும் அதாவது நாம் தேடும் ஒரு தகவல்களுக்கு (7g)அளவுக்கு கரிமில வாயுவை வெளியிடுகிறது (co2).

அதாவது ஒவ்வொரு ரெண்டு தேடலுக்கும் கூகிள் வெளியிடும் கரிமில வாயுவின் அளவு எவ்வளவு தெரியுமா? ஒரு கப் தேநீர் தயாரிக்க எவ்வளவு எரிபொருள் வேண்டுமோ அந்த அளவிற்கு .ஒரு கப் தேநீர் தயாரிக்கும் பொழுது
(15g)கரிமில வாயு (co2).

கூகிள் தந்து அதிவேக தேடலுக்கு உலகத்தில் பல இடங்களில் தனது சர்வர்களை(data centres) நிறுவியுள்ளது.இதன் மூலம் ஒரு நாளில் இணயத்தில் தேடப்படும் தேடல்களில் நாற்பது சதவிகிதம் கூகிள் தேடுபொறி மூலம் மட்டும் மேற்கொள்ள பட்டு வருகிறது .இதன் மூலம் எவ்வளவு மின்சக்தி செலவிடப்படும் என்று கணக்கிட்டு கொள்ளுங்கள் .பூமியின் சுற்று சூழல் இதன் மூலம் மேலும் வெப்பமடையும் .மேலும் தகவல்களுக்கு
(http://enews.toxicslink.org/news-view.php?id=52)(Issue 9
January , 2009
)
(http://www.financialexpress.com/news/Google-searches-affect-environment/409508/)

அனால் கூகுளின் அங்கீகரிக்கப்பட்ட வலைப்பூவில் அவர்கள் சொல்வதோ -நாங்கள் எங்களது பொறியாளர்களின் கடின உழைப்பில் மேம்படுத்தப்பட்ட குறைந்த அளவே மின்சக்தி உபயோகிக்கும் (data centres)சர்வர்களை அமைத்துள்ளதாக அறிவித்துள்ளனர் .இந்த மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்தால் முன்பை விட ஐம்பது சதவிகிதம் குறைவாக மின்சக்தி உபயோகிக்கப்படும் என்று கூறியுள்ளனர்.மேலும் மின்சக்தி உபயோகத்தை குறைக்க பல்வேறு விதமான முறைகளை கையாண்டு வருகிறோம் என்று கூறியுள்ளனர்.http://googleblog.blogspot.com/
http://www.google.com/corporate/green/clean-energy.html

நாம் பயன் படுத்தும் கணினி கூட அதிக அளவு வெப்பத்தை ஏற்படுத்து கின்றது .அதனால் தேவை இல்லாத நேரத்தில் கணினியின் இயக்கத்தை நிறுத்தி வைப்பது நல்லது .

(blackle.com) என்ற இணயதளம் ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த ஹீப் மீடியா என்ற நிறுவனம் நிறுவி உள்ளது .இது ஒரு தேடுபொறிக்கான தளம் அடிப்படையில் கூகிள் இணையதளத்தின் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது.இணயதளத்தில் நாம் தேடல் மேற்கொள்ள படுவது மூலம் குறிப்பிட்ட அளவு மின்சக்தியை நாம் சேமிக்க முடியும் என்று அந்த இணயதளம் கூறுகின்றது .

எது எப்படியோ நாமும் நம்முடிய சார்பில் வெப்ப மாயம் ஆவதை தடுக்க சிறு சிறு முயற்சிகளை மேற்கொள்வோம்.

6 comments:

  1. நல்ல செய்தி.. சுற்றுப்புறச்சூழல் பற்றிய விழிப்புணர்வு அதிகரிப்பது மிகவும் தேவை!!

    இதற்குத் தொடர்புடைய எனது பதிவையும் படித்துப் பாருங்கள்!

    ReplyDelete
  2. //எது எப்படியோ நாமும் நம்முடிய சார்பில் வெப்ப மாயம் ஆவதை தடுக்க சிறு சிறு முயற்சிகளை மேற்கொள்வோம்//

    உண்மையான பகிர்வு

    ReplyDelete
  3. I dont think this is a big problem. Because, we are getting what ever the information we need right on your screen.

    This could reduce including:
    1. Your travel (to search things)
    2. Printing related environmental pollution
    3. Time working on the computer (more result less time which reduces energy, time, travel)
    4. And so on.

    The cumulative result must be energy saving.

    Is there any study that shows data on how much energy is saved vs lost due to google search? With out that data the data you are present about is invalid or not a good idea to spread.

    ReplyDelete
  4. I did not get enough infromation in the body text. Title is attractive but the body text is not.

    ReplyDelete
  5. தவறான தகவல். Google பல்லாயிரக்கணக்கான சர்வர்களிடமிருந்து சேமித்து வைத்திருக்கும் தகவல்களிலிருந்து தான் search result தருகிறது. ஒவ்வொருமுறை ஒவ்வொருவரும் தேடும்போது google உலகமெங்கும் தேடுவதில்லை. அது practically impossible! Even for Google!
    --anvarsha

    ReplyDelete
  6. அனானி நண்பர்களே உங்கள் கருத்துக்கு நன்றி.நான் எனது சொந்த கருத்தை சொல்ல வில்லை . பல்வேறு இனைய தளங்களில் திரட்டப்பட்டது. மேலும் இடுகைகளில் இருக்கும் தவறு என்ன வென்று கூறுங்கள் மறு முறை திருத்தி கொள்கிறேன்

    ReplyDelete