இணைய சொந்தங்களே வருக வருக !!!!!!!

Pages

Jul 2, 2009

அட படிச்ச முட்டாள்களே


நம்ம மத்திய அரசாங்கம் கொஞ்சா நாளைக்கு முன்னாடி ஒரு சட்டம் கொண்டு வந்தங்கல்ல அது உங்களுக்கு நியாபகம் இருக்க இல்லையா .அதாவது பொது இடத்தில் யாரும் புகை பிடிக்க கூடாது,மீறினால் அபராதம் என்று முன்னாள் மத்திய சுகதாரத்துறை அமைச்சர் அன்புமணி ஒரு சட்டம் கொண்டு வந்தாருங்க நிறைய பேருக்கு அந்த சட்டம் மறந்து போயிருக்கும்.அந்த சட்டத்தை பத்தி வாய்கிழிய ஊரெல்லாம் ரெண்டு நாள் பேசுனாங்க மூணாவது நாள் பழைய குருடி கதவை திறடி என்ற கதையாய் அவ அவன் பொது எடத்துல நின்னு புகை பிடிச்சுட்டு இருக்கான்.

இப்ப எதுக்குடா நீ படிச்சவங்களை வம்புக்கு இழுக்குறே அப்படீனு கேக்குறீங்களா? படிச்சவங்க எப்ப பார்த்தாலும் படிக்காதவனை கண்டால் ஒரு இளக்காரமா ஒரு பார்வை பார்பான் என்ன அவன் அறிவு கம்மி எத சொன்னாலும் புரிசுக்க மாடீங்கறான் .சரி நாம படிச்சவுங்க தானே நம்மக்கு எது சொன்னாலும் புரியும் தானே.அப்புறம் ஏன் இன்னும் பொது இடத்துல புகை பிடிக்கறீங்க.

நாலு எழுது படிச்ச நாம அரங்சாங்கமோ அல்லது வேறு ஏதாவது ஒரு சமுதாய அமைப்போ தப்பு செஞ்சுட்ட வாய்கிழிய அவுங்கள பத்தி குறை சொல்ல்றோம் அல்லது திட்டுகிறோம்.ஆனா அரசாங்கம் இந்த பொது இடத்தில் புகை பிடிக்க தடை என்ற சட்டம் எதுக்கு போட்டாங்க.

1)பொது இடத்துல புகை பிடித்தால் உன்னை மட்டும் பாதிக்காது உன்ன சுத்தி இருகரவங்களையும் பாதிக்கும் அதனால் அந்த சட்டம் போட்டாங்க.
2)இதனால் என்ன நன்மை சுற்றுசூழல் மாசு அடைவது சிறிதளவேனும் குறிக்கிறது.
3)இந்த சட்டதினால பொது இடத்தில் முக்கியமா ,கடைகள் ,பேருந்து நிறுத்தங்கள்,பூங்காக்கள் போன்ற இடங்களில் குழந்தைகள், பெரியவர்கள்,மற்றும் நோயுற்றவர்கள் போன்றவர்களும் இருப்பார்கள் அந்த கெட்ட நாற்றத்தில் இருந்து அவர்கள் இதனால் பெரிதும் பயன் அடைவார்கள்.

மொத்தத்தில் புகை பிடிகிறதை சுத்தமா நிறுத்தி விட்டால் உடலுக்கு இன்னும் நன்மை
இப்படி இன்னும் ஏராளமான நன்மைகள் சொல்லிடே போகலாம் .

இப்ப சென்னை பெரு நகரத்தில நெறைய இடங்களில் பார்த்து இருக்கிறேன் முக்கியமா மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்பவர்கள் இன்னும் பிற அலுவகங்களில் வேலை பார்பவர்கள் அலுவலங்களுக்கு பக்கத்தில் இருக்கும் கடைகளில் போய் சிகரெட் போன்றவற்றை வாங்கி சாலை ஓரங்களில் நின்று புகைத்து கொண்டு இருகிறார்கள் .என் படிக்கும் கல்லூரி மாணவர்கள் கூட பொது இடத்தில் தான் இன்னும் புகைத்து கொண்டு இருகிறார்கள் .இன்னும் சொல்ல போன சட்டத்தை காவல் காக்க வேண்டிய காவலர்களே அந்த தப்ப பண்ணிட்டு இருக்காங்க .

இவங்க எல்லாம் மெத்த படிச்சவங்க தானே அரசாங்கம் புதுசா வரி போட சட்டம் கொண்டு வந்த ஆய் ஊய் கூச்சல் போடறவுங்க தானே.இந்த பொது இடத்தில புகைக்க தடை என்ற சட்டத்தை ஏன் பின்பற்ற தெரியல .அப்படி செஞ்சா அவுங்க உடம்புக்கும் நல்லதுதானே.அதுமட்டுமா புகையால் ஏற்படும் தீமைகளையும் நீங்க மத்தவங்களுக்கு சொல்லி புரிய வைக்க முடியும்.

கிராமத்துல சொல்லுவாங்க படிக்காதவனை விட படிச்சவங்க தான் இப்ப அதிகமா தப்பு பண்றாங்கன்னு.

தெரிந்ததே தப்பு செய்கிறவர்கள் படித்த முட்டாள்கள் தானே ?

3 comments:

 1. //இப்ப சென்னை பெரு நகரத்தில நெறைய இடங்களில் பார்த்து இருக்கிறேன் முக்கியமா மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்பவர்கள் இன்னும் பிற அலுவகங்களில் வேலை பார்பவர்கள் அலுவலங்களுக்கு பக்கத்தில் இருக்கும் கடைகளில் போய் சிகரெட் போன்றவற்றை வாங்கி சாலை ஓரங்களில் நின்று புகைத்து கொண்டு இருகிறார்கள் .//

  பாஸ் சாலை ஓரத்தில் நின்று தம் அடிக்க அனுமதி உண்டு. பொது இடங்கல் ஆனா மருத்துவமனை கட்டிடங்கள் பேருந்து ரயில் நிலையங்களில் தான் அனுமதி இல்லை ..

  ReplyDelete
 2. http://jameskutty.info/non_smoking%20rules.pdf

  இதை படிச்சு பாருங்க சூரியன்

  ReplyDelete
 3. பாஸ் சாலை ஓரத்தில் நின்று தம் அடிக்க அனுமதி உண்டு. பொது இடங்கல் ஆனா மருத்துவமனை கட்டிடங்கள் பேருந்து ரயில் நிலையங்களில் தான் அனுமதி இல்லை ..///
  உண்மையா?

  ReplyDelete