இணைய சொந்தங்களே வருக வருக !!!!!!!

Pages

Jun 29, 2009

தமிழ் சினிமாவும் -சசிகுமார் என்ற கலைஞனும்தமிழ் சினிமாவின் முகம் மெல்ல மெல்ல மாறிக்கொண்டு இருக்கிறது ,அந்த முகத்தை மாற்றுவது யார் பல புதுமுக இயக்குனர்களும் ,சினிமா ரசிகர்களும் தான் .முன்னெல்லாம் சினிமா என்றால் கதாநாயகனை மட்டும் முன்னிறுத்தி படத்தை எடுத்து கொண்டு இருந்தார்கள் (இன்றும் சில திருந்தாத ஜென்மங்கள் அப்படிதான் எடுத்து கொண்டு இருகிறார்கள் ).நடிகர்களுக்கு ஏற்ற கதைகள் போய் கதைக்கு ஏற்ற நடிகர்கள் தான் தேவை என்ற நிலைக்கு தமிழ் சினிமாவுலகம் வந்துள்ளது என்று சொல்லலாம்.பிரம்மாண்டம் என்பது கதயே தவிர அதில் நடிக்கும் நடிக,நடிகர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தற்பொழுது வந்த சில வெற்றி படங்களே உதாரணம் .

தொழில் நுட்பத்தில் எவ்வளவோ முன்னேறிவிட்ட தமிழ் திரை உலகம் அதை வைத்து கொண்டு படத்தை ஒட்டி விடலாம் என்று நினைத்து கதையே இல்லாமல் காலை தேய்த்து நடுக்கும் பொழுது தீபொறி வருமாறு செய்வதும் ,மூச்சுக்கு முன்னூறு தடவை பொறி பறக்கும் வசனங்கள் பேசுவதும் இப்பொழுது எடுபடுவதில்லை.எதார்த்தமான கதை,ஒரு பகுதியின் கலாச்சாரம்,மொழி ,ஆகியவற்றை பிரதிபலிக்கும் படங்களே வெற்றிநடை போடுகின்றன.ஓவரான பில்ல்டப்புகளை ஓட ஓட விரட்டு கின்றனர்.இந்த மற்றம் தான் தமிழ் சினிமா விற்கு நல்லது.

இப்ப சசிகுமாரை பற்றி பாப்போம் கடந்த ஆண்டு எவரும் எதிர்பார்கவன்னம் சுப்ரமணியபுரம் என்ற படம் தமிழ் திரை உலகத்தில் மிக பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. புதுமுக நடிகர்கள்,புதுமுக இசை அமைப்பாளர் என்று பெரும்பாலும் புதுமுகங்கள் நடித்த இந்த படம் சக்கை போடு போட்டது .அதை தயாரித்து இயக்கி,ஒரு நடிகராகவும் அந்த படத்தில் நடித்து வெற்றி பெற்றுள்ளார்.யாரும் இந்த படத்தின் கதையை தயாரிக்க முன்வராத காரணத்தினால் தானே தயாரித்தார்.இந்த படம் சினிமாவில் ஒரு மலர்ச்சியை ஏற்படுத்தியது .

இந்த வருடம் வெளியான பசங்க படத்தை எடுத்து மறுபடியும் தான் ஒரு சிறந்த தயாரிப்பாளர் என்று நிருபித்து விட்டார்.இவர் தயாரித்த பசங்க படம் வேறு சில தயாரிப்பாளர்களால் நிராகரிக்கப்பட்டு கடைசியில் இவரிடம் வந்து சேர்ந்தது.அதை அப்படியே தயாரித்து நல்ல கதை அம்சம் கொண்ட படங்களின் தயரிப்பாளர் என்ற நற் பெயரையும் வாங்கியுள்ளார் .அதோடு நின்றார நாடோடிகள் படத்தில் மறுபடியும் நடித்து அந்த படமும் வெற்றி கரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது .ஒரு தயாரிப்பாளராகவும் ,ஒரு இயக்குனராகவும் ,ஒரு நடிகர்ரகவும் வெற்றி பெற்றுள்ள சசிகுமாரை எவ்வளவு பாராட்டினாலும் தகும் .சசிகுமாரின் இந்த வெற்றி தொடர என் வாழ்த்துக்கள் .

2 comments:

  1. எனக்கு நீங்கள் எல்லோரும் கொண்டாடும் அளவிற்கு படம் பிடிக்கவில்லை. இருப்பினும் வாழ்த்துகள். சசி அன் கோ விற்கு.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete