இணைய சொந்தங்களே வருக வருக !!!!!!!

Pages

May 23, 2009

மெகா சீரியல் எடுக்க -பத்து டிப்ஸ்(நகைச்சுவை )


இப்ப எல்லாம் மெகா சீரியல் தான் பெண்களுக்கு முக்கியமான பொழுது போக்கு .உங்கவீட்லயும் ஒரு குழந்தை பிறந்திருக்கும் ,உங்கவீடம்மா பாக்குற நாடகத்துலேயும் குழந்தை பிறந்திருக்கும் ,உங்க வீட்டு குழந்தை வளந்து பெரியவனாகி கல்யாணமே பண்ணி வச்சுருபீங்க.ஆனா உங்க வீட்டு அம்மா பாக்குற நாடகத்துல வர்ற குழந்தை இப்பதான் எல்.கே.ஜி முடிச்சு யு.கே .ஜி போயிருக்கும் .அதனால நீங்களே ஒரு மெகா சீரியல் எடுக்கவோ அல்லது இயக்கவோ எனக்கு தெரிஞ்ச சில ஐடியா தரேன் .
மெகா சீரியல் தயாரிக்க சில டிப்ஸ்.

  1. முதல்ல நீங்க உங்க சீரியலுக்கு ஒரு நல்ல தலைப்பு வச்சுக்கணும் எடுத்துகாட்ட-அவள் ஒரு மங்கை ,மூதேவி ஸாரி ஸ்ரீதேவி ,அமிக்கல்லு ஆடாங்கள்ளு,இப்படி ஏதாவது ஒரு பெயர வச்சுக்கணும்(குறிப்பு ஏற்கனவே இருக்கிற தமிழ்நாட்டு பெண்கள் பெயர எல்ல நாடகத்துக்கு வச்சதால இனி வெளிநாட்டு பெண்கள் பெயர வச்சுக்கறது இன்னும் உத்தமம் )இல்லேன்னா நாலு புள்ளி கோலம் ,அஞ்சு புள்ளி கோலம் பத்து புள்ளி கோலம்னு பெற வச்சுக்கலாம் (அலங்கோலமுனு வச்சுட்ட இன்னும் சிறப்ப இருக்கும்) .
  2. ஏதாவது ஒரு பெரிய பங்களாவ குத்தக கணக்கா பேசி வாடகைக்கு புடுச்சுகணும் .காசு மிச்சம் பண்ணும்னு நினச்சா அதே பங்களா மேல் போர்சன ஆபிஸ்னு போடு மாடி நாலு பெஞ்சு சேறு போட்டு வச்சுக்கணும் .
  3. அப்புறம் நாலு சோபா வாங்கி வாடகைக்கு புடுச்ச ஊட்டு நடுவுல போட்டுவச்சுகனும்.நடுவுல ஒரு டீபாய் வச்சு ஒரு பழைய செய்திதாள நாலா மடிச்சு வச்சுக்கணும் .அப்புறம் ஒரு டெலிபோன் அந்த டீபைமேல வச்சரனும் .(நான் குறிபிடுவது குறைந்தபச்ச பொருட்கள் விருப்பமிருந்தால் இன்னும் அதிகமாக பொருட்களை வாங்கி வைக்கலாம் இல்லேன்னா விட்டுடலாம்)
  4. அப்புறமா நடிகருக்கு ஆள் புடிக்கணுமில்ல கவலையே படாதீங்க வருஷம் (1995)சமயத்துல கதாநாயகிக்கு மாமனா,அக்காவா, நடிச்சவங்க நெறைய பேரு இப்ப சும்மா இருப்பாங்க அதுல உங்க கதைக்கு? தேவயானவங்கள தேர்வு செஞ்சுக்குங்க வயசான கதபாதரத்துல நடிகறதுக்கு.அப்புறம் தமிழ் சினிமால மார்கெட் போன நடிகைகள் இருப்பாங்க அவங்கள கூப்ட உடனே வந்துடுவாங்க கதையின் நாயகி யாக .அப்புறமா வாட்ட சாட்டமான ஒரு ஆள புடுச்சுகங்க அந்த சீரியல் நாயகியின் கணவனா நடிகறதுக்கு(குறிப்பு இன்னும் நடிகர்கள் தேவை பட்டால் சட்ட சபைக்கு போங்கள் டிவி ல நடிகரவிங்கள விட இவுங்க சூப்ற நடிப்பாங்க )
  5. கிளிசரின் கம்பெனிக்கு போன போட்டு ஒரு பத்து லிட்டர் மொத்தமா வாங்கிக்குங்க .அப்புறமா ஆடை வேணுமில்ல ஏதாவது ஒரு லாண்டரிக்கு போய் தொவைக்காத துனியா தேவையான அளவு வாங்கிட்டு வந்து அந்த அந்த கதா பாத்திரங்களுக்கு குடுங்க .

  6. அப்புறம் முக்கியமா தேவ கதை அதபத்தி கவலை படாதீங்க .ஸ்கிரிப்ட் ரெடி பண்றதுக்கு முன்னாடி இப்ப கரண்டா ஓடிட்டு இருக்கிற சீரியல் நாலு அஞ்சு அசராமல் பாருங்க ஒவ்வோவ்று சீரியல் இருந்தும் ஒரு சீன வெட்டி போடுங்க ஒரு நாளைக்கான கதை ரெடி !இதே மாதிரி தினமும் நாடகம் பார்த்தே கதை ரெடி பண்ணீடலாம் ).
  7. அதே மாதிரி கதைல நடிக்கிற ஆண்களாகட்டும் பெண்களாகட்டும் பேசிகொண்டிருக்கும் போதே எதற்கென்று தெரியமாலே பொங்கி பொங்கி அழ வேண்டும் .அப்பா தான் அதை பார்க்கும் தாய்குலங்களின் கண்ணிலும் கண்நீற்குலம் உண்டாகும் .அதுக்குதான் லிட்டர் கனக்க கிளிசரின் வாங்கி வச்சுருபீங்க.
  8. அதே மாதிரி நடிகர் நடிகைகள் வேகமாக நடக்கும் காட்சிகளை எடிட்டிங் செய்யும் பொழுது ஸ்லோ மோசன்ள நடக்ரமாதிரி காண்பிக்க வேண்டும் .அப்பதான் அந்த காட்சிய நாலு வாரத்துக்கு ஓட்ட முடியும் .
  9. பினனணி இசை இது ரொம்ப முக்கியம் ஆனால் வேலை ரொம்ப ஈசி புதுசா யாராச்சும் மியூசிக் கத்துகிட்டு இருந்த ஒரே அமுக்க அமுக்கிட்டு வந்து அவங்களுக்கு என்ன தெரியுமோ அத வாசிக்க சொன்னால் போதும் .முக்கியமா கதாநாயகி வேகமாக நடக்கும் பொழுது பித்தாள கொடத்த படிகட்டுல இருந்து உருட்டி விடறமாதிரி சத்தம் வரணும் .
  10. அப்புறமா உங்க மெகா சீரியல உட்காந்து பார்க்கும் பெண்களை கவர்ற மாதிரிஏதாவது சின்ன சின்ன பரிசு பொருட்கள் இலவசமா அள்ளி வீசுங்க.
ஒன்னு சொல்ல மறந்துட்டேன் மெகா சீரியலுக்கு முக்கியமானதே ஓபனிங் பாட்டுதான்.ஏதாவது ஒரு டான்ஸ் மாஸ்டர் ர புடுச்சு யாருக்கும் புரிஞ்சும் புரியாத மாதிரி பத்து நிமிஷம் பல்ல கடுச்சுட்டு ஆடுற மாதிரி இருக்கனும் (குறிப்பு இந்த மாதிரி ஓபனிங் சாங்கை வைத்தே உங்களுக்கு ஒதுகின நேரத்துல பாதி நேரத்தை முடுச்சரலாம் .

என்ன பேச்சையே காணோம் இப்படி தான் பல பேரு மெகா சீரியலு எடுத்துதான் மெகா கோடீஸ்வரன் ஆகி இருக்கான்.

4 comments:

  1. அனைத்தும் பொருந்தி வருது!
    புடிங்க அட்வான்ஸ!
    நீங்க நம்ம சீரியலோட டைரக்டர்!

    ReplyDelete
  2. முக்கியமான ஒண்ண மறந்துட்டீங்களே? அதான் டைட்டில் சாங்! அதில் எல்லா கேரக்டரையும் காட்டணும் (என்னமோ "premise & three act strucure" மாதிரி)! ஆரம்பத்துல எல்ல கேரக்டரும் நல்லா சந்தோஷமா இருக்குற மாதிரி காட்டணும்! அப்புறம் எல்லா கேரக்டர்களும் “கேட் வாக்” பண்ணனும்! அப்புறம் எல்லா கேரடக்டர்களும் “ஃபாஸ்ட் கட்டிங்கில்” லூசு மாதிரி ஓடணும்! அப்புறம் எல்லா கேரக்டர்களும் “ஸ்லோ மோஷனில் நடக்கணும்” (இப்போதான் சாங்க முடிக்கப் போறீங்க!)! தவிரவும் இப்போதான் “டைரக்‌ஷன்” (எவண்டா அந்த நாயி?) அல்லது “க்ரியேட்டிவ் ஹெட்” (அடிங்க! இதுக்கெல்லாம் ஒரு க்ரியேட்டிவிட்டி தேவையா?) அப்படீன்னு போடணும்! கடைசியா, சீரியலின் (அப்போதைய) வில்லியான மாமியார் அல்லது நாத்தனார் (அப்போதைய) ஹீரோயினை பளாரென்று அறையவேண்டும்! அல்லது தள்ளிவிடவேண்டும்! அப்புறம் ஃப்ரீஸ் ஃப்ரேம்! கமர்ஷியலுக்கு போயிடலாம்!

    ReplyDelete