அமெரிக்கா பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணத்தை பற்றி செய்தி அறிய இணயத்தில் அதிக அளவு கூகிள் தளத்தை பயன்படுத்தியதால் கூகிள் செய்தி தளத்திற்கான சர்வர்கள் அறை மணி நேரம் ஸ்தம்பித்து விட்டது .இதனால் கூகிள் சர்வர் சிறிது நேரம் செய்திகளை அளிப்பதில் சிறிது தடங்கல் ஏற்பட்டது.
இதே போல் தற்பொழுது அதிக அளவில் பிரபலமாகி வரும் (twitter) இணையதளமும் ஸ்தம்பித்து விட்டது . இங்கிலாந்து நாட்டை சேர்ந்த (B.B.C) இணையத்தளம் இன்று நாற்பத்தி ஆறு சதவிகிதம் வரை டிராபிக் உயர்ந்துள்ளது என்று அறிவித்துள்ளது . செய்திக்காக உலக அளவில் பிரபலாமான இணையதளங்களிலும் இதே நிலைமை தான்.
அந்த நபரின் இறந்த செய்தியை முதலில் அறிவித்தது (www.tmz.com)என்ற இணையத்தளம் .இந்த செய்தி படி படியாக சோசியல் நெட்வொர்க் தளங்களில் பரவி பின்பு வலைத்தளங்கள் மூலமாக உலகம் முழுதும் அதிக அளவில் சென்றடைந்தது .
இன்று கூகிள் (Trends) அதிக் அளவு தேடப்பட்ட தகவலும் மறைந்த பாப் பாடகரை பற்றியதே.இன்று முழுவதும் இணையம் மூலம் விவாதிக்கப்படும் பத்து முக்கியமான தலைப்புகளும் மைக்கேல் ஜாக்சன் பற்றியதே.
May his Soul Rest in Peace.
ReplyDeleteSorry for English...