இணைய சொந்தங்களே வருக வருக !!!!!!!

Pages

Jul 7, 2009

மாட்டு வண்டி -நினைவுகள்

படம் உதவி நன்றி மதிமாறன்

மாட்டு வண்டி என்று சொன்னால் கிராமங்கள் தான் நினைவுக்கு வரும் முதலில் .இன்று கிராமங்களில் மாட்டு வண்டிகள் குறைந்து டிராக்டர் வாகனம் வந்து விட்டது .ஆனாலும் விடாப்பிடியாக இன்னும் சில பேர் மாட்டு வண்டி வைத்து கொண்டு விவசாயம் பார்த்து கொண்டுதான் இருகிறார்கள் .மாட்டு வண்டி ஓட்டுவது ஒரு கலை மாட்டின் சுபாவத்திற்கு ஏற்ப அதை அதட்டி ஓட்டுவார்கள்.

நான் சின்ன வயதில் என் அப்பிச்சி வீட்டில் இருந்துதான் பள்ளிக்கூடம் போவேன்.அப்பொழுது எங்கள் அப்பிச்சி வீட்டில் மாட்டு வண்டி இருக்கும் அப்பா எல்லாம் தேங்காய் எடுப்பது ,குப்பை அள்ளுவதற்கு மாட்டு வண்டியை தான் பெரிதும் பயன்படுத்துவார்கள் .அதனால அடிக்கடி மாட்டு வண்டிக்கு வேலை இருந்துகொண்டே இருக்கும் .தோப்பில் தேங்காய் எடுக்க போகும் பொழுது வெறும் மாட்டு வண்டியாதான் போகும் அதனால நானும் எங்க சின்ன மாமனும் வண்டியில் ஏறி கொள்வோம் .எங்க அப்பிச்சி தான் மாட்டை பூட்டி வண்டியை கிளப்புவாரு .அப்படி போகும் பொது என்ன சந்தோஷம் ஆய் ஊய் என்று சத்தம் போட்டு கொண்டே போவோம்.மாட்டு வண்டி தேங்காய் எடுக்குற பக்கம் போயிடுச்சா அப்படியே எட்டி குதுசுட்டு ஆளுக்கு ஒரு தேங்காய் எடுத்து வண்டிக்குள்ள போடுவோம்.

தேங்காய் வண்டில தேங்காய் நரம்பிடுசுன மறுபடியும் கெளம்பும் வீட்டுக்கு நானும் எங்க சின்ன மாமனும் தேங்காய் மேல ஏறி உட்காந்துகுவோம்.அப்புறம் மாட்டு வண்டி வெறுமனே போயிட்டு இருக்கும் பொழுது ரெண்டு கையையும் பலகையிலிருந்து எடுத்து விட்டு எதையும் புடிக்காம நிக்கணும்னு போட்டி வைப்போம் .அப்படியே மெதுவா எந்துருச்சு நின்னு ரெண்டுகையும் எதையும் புடிக்காம நின்ன வரும்பாருங்க ஒரு பயம் அப்பா ஒரே சத்தம் வண்டிக்குள்ள . எங்க அப்பிச்சி திரும்பி பார்த்துட்டு கம்முனு உட்காரமாடீங்கள அப்படீன்னு சொல்லிட்டு மாடுகளை விரட்டும் .

அப்பிடி இல்லையா இப்ப பூங்கவுல குழந்தைகள் விளையாடுமே (see saw) அது போல முன்னடியிருகுற நொகம் அப்படீனு சொல்லுவாங்க அதுல உட்கார்ந்துட்டு விளையாடுவோம் .அதுக்கும் நீமுந்தி நா முந்தினு ஒரே ரகளையா இருக்கும்.

அப்பெல்லாம் ஒரு ஊருக்கு போரதுன கூட மாட்டு வண்டிதான் .கோயிலுக்கு போகனுமா மாட்டு வண்டி தான் அதுவும் கோயிலுக்கு போயிட்டு வரப்ப பொறி கடலை வாங்கி கலந்து ஆளுக்கு ஒரு வாய் அள்ளி போட்டுட்டு பேசி கொண்டே வருவோம் .அப்பா எல்லாம் கோயில்விழா என்றால் மாட்டு வண்டிதான் பிரதான வாகனம் குடும்பமாய் போவார்கள் வண்டி பூட்டிட்டு.

அந்த கனத்தை நினைத்து பார்த்தல் எவ்வளவு சந்தோஷம் .நான் பள்ளி மேல் வகுப்பு செல்ல செல்ல மாட்டு வண்டியும் என்னை விட்டு விலகிக்கொண்டே சென்றது .அதன் அருமை அப்பொழுது தெரிய இப்பொழுது தெரிகிறது அதன் அன்யோன்யம் .டிராக்டர் வந்து மாட்டு வண்டியின் உபயோகத்தை பெருமளவு குறைத்து விட்டது. இன்னும் சொல்ல போனால் நமது நாட்டு மாடுகளே குறைந்து விட்டன எல்லாம் கலப்பின மாடுகள் தான் .எங்கள் வீட்டில் கூட தாத்தா இருந்த வரைக்கும் நாட்டு மாடுகள் தான் அதிகமா வளர்ப்பார் .பின் அவர் இறந்து விட நாட்டு மாடுகள் வளர்க்கும் பழக்கம் போய் உழுவதற்கு எல்லாம் இப்பொழுது எங்கள் வீட்டில் டிராக்டர் தான்.

மீண்டும் வருமா மாட்டுவண்டி என் நினைவுகளை சுமக்க.

5 comments:

  1. maadukal ummai chumanthu iluththa ninaivukalai neer sumakkireer.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. உங்கள் அளவு பரிச்சயம் இல்லை என்றாலும் ... ஊருக்கு விடுமுறைக்கு சென்ற தருணங்களில் இந்த குதூகலத்தை நானும் சில முறை உணர்ந்திருக்கிறேன்..... நல்ல பதிவு நண்பா.... யூத்புல் விகடனில் காலடி பதித்ததற்கு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. //நொகம்//
    எந்த ஊரு பாஷைங்க? எட்டயபுரம் பக்கம் நாங்க மேக்கா / மோக்கா னு சொல்வோம்.
    எங்க வீட்டுல இன்னமும் மாட்டு வண்டி இருக்கு.

    ReplyDelete
  5. //எந்த ஊரு பாஷைங்க? எட்டயபுரம் பக்கம் நாங்க மேக்கா / மோக்கா னு சொல்வோம்.//


    இது கொங்கு நாட்டு சொல் வழக்கு நண்பரே

    ReplyDelete