இணைய சொந்தங்களே வருக வருக !!!!!!!

Pages

Apr 1, 2009

ஊர்திருவிழாவும் மஞ்சள் நீர் ஆடுவிழாவும்

கிராமங்கள் என்று நினைவுக்கு வந்தாலே கண்டீப்பாக கிராமத்தில் நடைபெறும் கோயில் திருவிழாவும் பெரும்பாலானோர்க்கு நினைவு வரும் இந்த பதிவும் கிராமத்து திருவிழாவை பற்றியதுதான் .


இன்று பெருநகரத்தில் ஜன நெருகடியிலும் அயல் நாடுகளிலும் வாழ்பவர்களில் பெரும்பாலோனோர் கிராமத்திலிருந்து பிழைப்பு தேடி வந்தவர்கள் தான்.
கால மாற்றத்தில் இவர்களில் பெரும்பலவனர்கள் தங்கள் மண்ணை மறந்து மண் வாசனையும் மறந்து வாழ்ந்து கொன்டிறுபவர்களுக்கு இந்த பதிவை சமர்பிக்கிறேன் .

ஊர்த்திருவிழா
கிராமங்கள் என்று எடுத்து கொண்டால் கோயில்கள் இருக்கும் .கோயில்கள் என்று எடுத்து கொண்டால் வருடத்திற்கு ஒரு முறை திருவிழா (நோம்பி என்றும் அழைப்பார்கள் கொங்கு நாட்டில் )நடைபெறும் .பங்குனி சித்திரை,வைகாசி போன்ற மாதங்களில் மாரியம்மன் கோயில் கலை கட்டிவிடும் .கம்பம் போட்டு ,தொரனும் கட்டி ,மின்விளக்குகளால் அலங்க்கரும் செய்து ஊரே விளகொளும் பூண்டுவிடும் .கம்பம் நட்ட அந்த ஒரு வாரத்தில் ஒரே அமர்கள படும் .உறவினர்கள் ஒவ்வொன்றாக வரதொடங்குவார்கள்,வீடுகள் எல்லாம் சுண்ணாம்பு பூசப்பட்டு வெள்ளை வெளேர் என்று காட்சி அளிக்கும் .இரவு நேரம் வந்தால் ஊர் பெரியவர்கள் எல்லாம் ஒன்று கூடி பழங்கதைகளை பேசிக்கொண்டும்,சின்னம் சிறுசுகள் கோயில் சுற்றியும் விளயாடி கொண்டும் இருப்பார்கள் .பின்பு மத்தாளம்அடிக்க \ மத்தாலகாரர்கள் வந்து சேர்வார்கள்.மத்தாளம் அடிக்க தொடகியதும் ஊர்காரர்கள் ஒவ்வ்வோருவராக வந்து ஆடவார்கள் .ஆடுபவர்களில் வயதானோர் ஒரு பக்கம் இளைஞர்கள் ஒரு பக்கம் ,சிறுவரகள் ஒரு பக்கம் கூடி ஆடுவார்கள் .ஆட்டத்தில் பல வகை உண்டு குறிப்பாக நான் பிறந்த பகுதியில் சலங்கை ஆட்டம் ,வரிசை ஆட்டம் ,கும்மி ஆட்டம் போன்ற பலவித மான ஆட்டங்கள் ஆடுவார்கள் .


(இங்கு பதிவேர்றபட்டிருக்கும் வீடியோ வரிசை ஆடம் ஆடும் இளைஞர்கள்
எப்படி ஆடுகிறார்கள் என்று பாருங்கள் .வீடியோ ஓடத்தொடங்கி ஒரு நிமடவாக்கில் அவர்களின் ஆட்டத்தை காணலாம் . இந்த வீடியோ காசுகாரன்பாளையும் என்ற ஊரில் படமெடுக்க பட்டது .நன்றி கொங்கு மீடியா பதிவு )





ஆடும்போது இடையில் நிறுத்தி நிறுத்தி சில வாக்குவாரம் சொல்ல்வார்கள் .அந்த ஊர்காரகள் மட்டுமல்ல அருகிலிருக்கும் கிராமதார்களும் வருவார்கள் ஆடுவதற்கு. அதிலும் திருவிழா ஆறுநாட்கள் நடைபெறும் என்றுவைத்து கொண்டால் கடைசி இரண்டு நாட்கள் கோயிலில் ஆடுவதற்கு கூடும் நிரம்பி வழியும் குறிப்பாக இளவட்டம் எதற்கு என்று கேட்குறீங்கள? அப்பதான் உறவுகாரப் பெண்கள் ,ஊர்கார பெண்கள் ஆட்டத்தை காண வருவார்கள் ? !.அதற்காகவே இளவட்ட ஆண்கள் (தப்பாக எண்ணாதீர்கள் எல்லாம் ஒரு மகிழ்ச்சிக்கு தானே ) கால்வலிதாலும் கண்சிமிட்டி ஓரகண்ணால் பார்த்துக்கொண்டே ஆடுவார்கள் .எங்கள் ஊரில் வியாழக்கிழமை தான் விழாவின் முக்கியனால் அன்று அதிகாலையிலேயே பெண்கள் புத்தாடை அணிந்து மாவிலக்கை எடுத்து கொண்டு கோயிலுக்கு வருவார்கள் அந்த நேரத்தில் வெடிவெடித்து மத்தள வாத்தியங்களுடன் வருவார்கள் .பிங்கு பொங்கல் இட்டு சாமிக்கு நேர்த்தி கடன் சில்திய பின்பு(கிடா ,கோழி ).மாவிளக்கை கோயிலில் இருந்து அவரவர் வீட்டிற்கு எடுத்து செல்வார்கள் ,
சிறு சிறு கடைகள் விழா நேரத்திற்கு வந்து இருக்கும் சிறுவர்கள் அம்மாவை நட்சத்ரித்து விளையாட்டு பொருள்களை வாங்குவார்கள் .பெட்டி ஐஸ் காரன் கூ கூ என்று கூவுவான் .அன்று மாலையே மக்கள் கோயிலில் கூடுவார்கள் .
அன்று நேரத்திலேயே மத்தளம் கட்டி ஆட தொடங்கி விடுவார்கள்.பின்பு நட்ட கம்பத்தை பிடுங்கி அதற்கென்றே உள்ள கிணற்றில் எரிந்து விடுவார்கள் .

அப்புறமென்ன திரைகட்டி பழைய சினிமா ஒன்றும் புட்சிய சினிமா ஒன்றும் போடுவார்கள்.

மஞ்சள் நீராட்டு விழா


திருவிழா முடிந்த மறுநாள் மஞ்சள் நீராடு விழா நடை பெரும் மஞ்சளை கரைத்து அனாவில் வைத்து விடுவார்கள் யார் வேண்டுமானாலும் மஞ்சள் நீரை எடுத்து தன் பிரிய பட்டவர்களின் மேல் ஊற்றி விடலாம்,(சிலர் இதுதான் சமயம் என்று தான் விருப்பப்பட்ட பெண்கள் மேல் ஊற்றி வில்யடுவார்கள்).


சரி இவ்வளுவு எழுதுறேனே எதற்காக என்று கேக்குறீங்களா ?

திருவிழாவில்தான் ஊறவுகள் ஒன்றுகூடும் ,வருடம் முழுதும் உழைத்து உழைத்து கலைத்து போனவர்களுக்கு திருவிலாகள் தான் அவர்களின் உற்சாகம் தரும் உரைவிடுமாகும். நீங்கள் பார்த்து இருப்பீர்கள் பெருநகரங்களில் பெரும் வேளைகளில் இருப்பவர்கள் தங்கள் சொந்த ஊர் திருவிழா என்று செய்தி அறிந்தால் அடித்து பிடித்தாவது ஊருக்கு போவதை

ஏன்? தன் சொந்தங்களை காணவும், பந்தங்களை பார்க்கவும் தான் சிலர்க்கு என்னதான் வசதி வாய்புகள் இருந்தாலும் தன் சொந்த ஊரில் இருப்பதுதான் மரியாதை கவுரவும் என்று நினைப்பார்கள் அதை எள்ளவும் மீறி அவர்கள் தன் மண்ணின் மேல் வைத்துள்ள பாசம் பின்னைப்பு ஆகியவைதான் .

திருவிழாவில் எதற்கு ஆடம் பாடம் என்று என்னுகுறீர்களா

ஆட்டம் பாட்டம் என்பது ஒரு சடங்கு என்றாலும் அது பின்னால்லுள்ள காரணத்தை பார்த்தல்
வருடம் முழுதும் வேலை செய்து களைத்தவர்களுக்கு உற்சாகம் ஏற்றும் ஆட்டம் .சினிமா காரர்கள் எல்லாம் இவர்களை போல் தொடர்ந்து ஆடுவார்களா என்றால் இல்லை என்றுதான் கூறுவேன் .கிராமதினர்க்கு இந்த ஆட்டத்தின் மேல் மதிப்பும் மரியாதையும் அதிகம் .சண்டை சச்சரவு மறந்து ஒன்று கூடி நடத்தும் திருவிழாக்கள் இன்னும் கிராமத்தின் அடையாளமாக திகள் கின்றன .








2 comments:

  1. நல்ல பதிவு

    i liked ur blog and have become ur follower.

    You can also visit my blog and if you like it u can be my follower :-)

    Hope u like it

    ReplyDelete
  2. எனது பாலோயர் லிஸ்டில் உங்கள் பெயர் பார்த்தேன்!
    மிக்க நன்றி நண்பரே!
    நானும் இப்பொழுது உங்களுக்கு பாலோயர்!

    பதிவை பார்த்தேன்
    ஈரோட்டுக்கு பக்கமாக தெரிகிறதே?

    நீங்கள் எந்த ஏரியா?

    ReplyDelete