இவர் மட்டுமா உண்ணா விரதும் இருக்கிறார் தினம் தினம் ஆயிரம் ஆயிரம் பேர் உன்ன உணவின்றி தங்க இடமின்றி இவரை விட மிக வயதானவர்களும் உடல்நலம் குன்றி சிகிச்சை எடுக்கமுடியாமல் நிலைமையில் இருகின்றனர் .
இது முற்றிலும் ஒட்டு வாங்கும் தந்திரமே ஒழிய el தமிழர் மீதான அட்கரை என்பது ஒரு துளி இல்லை .
ஐந்து முறை முதல்வராக இருந்து நீங்கள் ஒருநாளும் இல்லாத திருநாளாம் என்ற பழமொழி படி தான் ஆட்சி பீடம் ஏற மறுபடியும் துன்பத்தில் துவண்டு கிடக்கும் ஈழ தமிழனை தன் கேடயமாக பயன்படுத்துகிறார் . கோடி தமிழரின் தலைவர் அல்ல இவர் ஆயிரம் ஆயிரம் கோடிகளில் புழங்கும் தலைவர் இவர்
என்னவோ நேத்து இரவு இருந்துதான் ரத்த வெறி பிடித்த ராஜபக்சே ஈழ தமிழர் மீது குண்டு போடுவது போலவும் இதை கேள்வி பட்ட அவர் உடனே உன்ன விரும் இருப்பது போலவும் காட்டி கொள்கிறார் .இவரது கொள்கை கோட்பாடு எல்லாம் எப்பவோ வெட்ட வெளிச்சத்துக்கு வந்துடுச்சே அதற்கு சமீபத்திய உதாரணம் ஆளும் கட்சி சார்பாக நடைபெற்ற பந்த் ஒன்றே போதுமே அவசியமான பேருந்து ஒன்றும் ஓடாமல் தமிழர்களை இளைஞர்களை கெடுத்து குட்டி சுவராக்கும் மது கடைகளை திறந்து வைத்தது கலைஞர் டிவி ,சன் டிவி போன்றவற்றில் திரைபடங்கள் ஒளிபரப்புது என்ன கொடுமைடா சாமி .
ஒரு பக்கம் ஒட்டு வாங்க கட்டு கட்ட பணம் விநியோகும் மறுபக்கம் இந்த உண்ணா விரதும் .ஏன் அய்யா இப்படி வயதான காலத்தில் இப்படி உங்களை வருத்தி கொள்கிறீர்கள் .நீங்கள் மனது வைத்தால் எப்பொழுதோ இந்த பிரச்சனயை பேசி தீர்த்து முடித்து வைதுருக்கலாம் .மானம் கேட்டே காங்கிரஸ் கூட கூட்டு போட்டு பதவி ஆசையால் எங்களையும் ஏமாற்றி ஏன் ஈழ மக்களையும் ஏமாற்றி வீணாக நாளை கடத்தி கொண்டு இருகிறீர்கள் .
மீறி தமிழகத்தில் அரசியல் நெருக்கடி முற்றினால் வெள்ளக்காரி கிட்ட பேசி அந்த சிவசங்கரன் ,மற்றும் முன்னாள் உளவு துறை அதிகாரி ஆகிய இரு மலையாளிகளை தான் தமிழர் பிரச்சனயை பற்றி பேச இலங்கைக்கு அனுப்புவார்கள் .தமிழர் பிரச்சனயை பற்றி பேச ஒரு தமிழன தலைவர் அங்கு செல்லாமல் கோட்டு சூட்டு போட்ட அந்த மகராசங்கள எதுக்கு அப்பா அங்க அனுப்புறீங்க .அவர்களும் போய் ஏம்பா நாங்க குடுத்த குண்டு நல்ல வெடுச்சுச்ச இல்லையா என்று கேட்டு விட்டு திருபவும் வந்துடுவாங்க .இதுல மக்கள் கட்டற வரி பணம் தான் செலவானதுதான் மிச்சம் அந்த இரு அதிகாரிகள் போயிட்டு வரதுக்கு .
நீங்க நெனச்சா அங்கு போய் இது பற்றி பேசி தங்களின் கடும் எதிர்ப்பை தெரிவிக்க கூடாத ,அய்யா பிளைட்டு செலவுக்கு நாங்க வென காசு தர்முங்கோ .உங்களுக்கு எங்க நேரம் சினிமா பாராட்டு விழாவுக்கு போய் முதல் வரிசையில் உட்காருவதற்கும் குடும்பத்து சண்டைய தீர்த்து வச்துக்குமே நேரம் சரியா போச்சு .
நடுவண் அரசுல முக்கிய மான அமைச்சர் பதவிகளை கேட்டு வாங்கறதுக்கு எத்தனை முறை டெல்லி போயிருபீங்க ஆனா ஈழ பிரச்சனைக்கு தந்தி மட்டும் தான் அடிகிறீங்க ஏன் உங்ககிட்ட போன் இல்லையா ,இல்ல சென்னைல இருந்து பிளைட்டு இல்லையா டெல்லி போறதுக்கு .காங்கிரஸ் காரன் கிட்ட பதவி வாங்கறதுக்கு டெல்லி போனீங்களே நீங்க கேட்ட பதவி கேடைகலீனு என்ன உண்ணா விரதம் இருந்தீங்கள ? ரூம் போட்டு பேசி தானே வாங்குனீங்க அதே மாதிரி இதையும் செய்ய வேண்டியதுதானே .
இப்ப உங்க ஒரே கவலை என்ன அப்படீனா உங்களுக்கு எதிர ஈழ தமிழ் ஆதரவாளர்கள் தமிழகம் முழுக்க உங்க ஆட்சிக்கு எதிரா பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள் . அவங்கள எப்படி சமாளிகரதுனு தெரியலை உங்களுக்கு .அதனால ஒட்டு மதுரைய தவற மத்த பக்கம் ஒட்டு வாங்கறதுக்கு இது ஒண்ணுதான் வழி .அதான் வந்து உட்காந்துடீங்க அண்ணா நினைவிடதுள்ள .
ஈழ தமிழர் பிரச்சனையை உலக நாடுகளை எல்லாம் விட உங்களுக்கே அதிக முன்னுரிமை இருக்கிறது பேசி தீர்க்க .அதை விடுத்து நீங்களும் உங்கள் உடன்பிறப்பும் ஏன் இந்த வேகாத வெயில்ல இப்படி கஷ்டபடுறீங்க .
இப்ப கூட ஒன்னும் கேட்டு போகலை காங்கிரஸ் காரன் கிட்ட இருந்து வெளிய வாங்க ஈழ பிரச்சனைக்கு போராடுங்க .உங்களுக்கு நாங்க கைகொடுகிறோம் .
அதை விடுத்து இப்ப பண்ற நாடக தனமான உண்னவிருதத்தை நிறுத்துங்க .
உங்கள் உடல்நிலைக்கு இது உகந்தது அல்ல .
ஈழ பிரச்சனை தீர்வதற்கான பூர்வாங்க வேலையே பாருங்க அய்யா அப்பொழுதுதான் நாங்கள் நம்புவோம் தமிழின தலைவர் என்று ?
keep writing ..,
ReplyDeleteஏமாறும் மக்கள் இருக்கும் வரை ஏமாற்றி கொண்டு தானே இருப்பார்கள்!
ReplyDeleteகலக்குங்க ஆனந்தன் .
ReplyDelete