மரபணு மாற்று விதைகள்
கால மாற்றத்தால் நமது பாரம் பரியும் மிக்க விவசாய முறைகளை விடுத்து பசுமை புரட்சி என்று கூப்பாடு போட்டு களை கொல்லியும் ரசாயின உரங்களும் பூச்சி கொல்லி மருந்துகளும் இட்டு நமது மண்ணை நஞ்சாகி விட்டனர் மெத்த படித்த மேதாவிகள் .இதனால் நாம் உண்ணும் உணவும் மெல்ல நஞ்சாகி விட்டது .நாமும் பலவிதமான நோய்களை மடியில் வாங்கி கொண்டு மருத்துவருக்கு பணத்தை அழுதுகொண்டு இருக்கிறோம் .
இது போதாது என்று இப்பொழுது மரபணு மற்று விதைகள் என்ற வஸ்து சில காலங்களாக நமது இந்தியா மண்ணில் ஊன்றபடுகிறது .அப்படி என்றால் என்ன .இயற்கையாய் இருக்கும் விதையின் தன்மையை நவீன தொழில்நுட்பம் மூளும் விதைகளின் தன்மையை மாற்றி விடுவது.அதாவது தக்காளி பழம் சிலநாட்களில் அழுகிவிடும் ஆனால் மரபணு மாற்று தக்காளி அப்படி அழுகாது பலநாட்கள் புத்தம் புது பழம் போல் அப்படியே இருக்கும் .கீழே காண்க
மரபணு மாற்று தக்காளி (இது பத்து நாட்களுக்கு மேல் அப்படியே இருந்தது )
இதுபோன்று நெல் பிற பாயிர்களின் விதைகள் மரபணு மாற்றம் செய்ய படுகிறது .பின்பு இந்த விதைகளால் உருவான பழம் காய்கறிகள் நாம் உட்கொள்ளும் பொழுது அது உள்ளே பொய் நமது மரபணு தன்மையை மாற்றம் செய்து விடுகிறது .இதனால் மலட்டு தன்மை இன்ன பிற நோய்களுக்கு ஆளாகலாம் .
அதே நேரம் விவசாய நிலங்களும் இந்த செயற்கை விதைகளால் மலடாகிவிடும் .அதேபோல இந்த முறை விதைகள் ஒரு முறை மட்டுமே பயன்படும் மறுபடியும் விதைக்க வேண்டும் என்றால் பன்னாட்டு நிறுவனத்திடம் தான் கையேந்த வேண்டும் .
இதிலிருக்கும் உண்மை என்றால் பண வெறி பிடித்த பன்னாட்டு விதை நிறுவனங்கள் இந்தியா அதிகாரவர்கமும் சேர்ந்து நமது நாட்டின் முதுகெலும்பான விவாசைத்தை குழி தோண்டி புதைக்க புரபட்டிருகின்றன
ஏற்கனவே சூதாட்ட முதலைகளிடம் சிக்கி தவிக்கும் இந்த விவசாய்கள் ,பிற்காலத்தில் தைகள் பாரம்பரிய முறையை இழந்து விதைக்க நெல் மணி கூட இல்லாமல் இந்த பன்னாட்டு நாய்களிடும் தான் போய் கையேந்த வேண்டும் .அப்பொழுது அவன் செயற்கையான தட்டுபாட்டை ஏற்படுத்தி ஒரு கிலோ விதையை ஆயிரம் ரூபாய்க்கும் இரண்டாயிரம் ரூபாய்க்கும் விற்பான் .
"நமது மண்ணும் போனது நமது மக்களும் போனார்கள் "
விடுமுறைக்காக நான் ஊருக்கு பதுநாட்கள் சென்ற பொழுது ஒரு நாள் என்னுடைய அப்பா விற்கு பயனீர் என்ற விதை நிறுவனம் அவர்களின் விதையின் விளைச்சலை பற்றி சொல்லவதற்காக வேனில் அலைத்கொண்டுபோகிறோம் என்று கூறினார்கள் அன்றயதினம் அவர் வேறு வேலையாக வெளியே சென்று விட்டதால் ஏன் அப்பாவுக்கு பதிலாக நான் சென்றேன்
அவர்கள் அழைத்து சென்ற இடம் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் குருமந்தூர் அருகே கிராமத்தில் பயனீர் என்ற அமெரிக்கா நிறுவனம் அவர்களின் விதைகளை அந்த பகுதி விவசாய்களிடம் கொடுத்து விளைந்த மக்காசோளம் கருதுகளை காட்டி இப்படி செய்தால் இவ்வளவு மகசூல் என்று விளக்கம் கொடுத்தார்கள் .அவர்கள் சொல்லவதெல்லாம் இது அமெரிக்கா நிறுவனம் ஒரு முறை பயிரிட்டு பாருங்கள் நீங்களே தெரிந்து கொள்வீர்கள் என்று அங்கே சில விவசாய்கள் இயற்கை வேளாண்மை பற்றி வாதமிட்டனர் அதற்க்கு காலனிக்குள் இறங்காத இந்த மெத்த படித்த மேதாவிகள் பல விதமான விளக்கங்கள் கூறி அவர்கள் சமாதனபடுதீனார்கள் .
அந்த நிறுவனத்தின் மக்கா சோள கருதுகள்
பொன்னை வித்தாலும் மண்ணை விற்காத விவசாய்கள் வாழும் நாட்டில் விசத்தை அள்ளி தெளிக்கும் முதலாளிவர்க்கம் .
//பொன்னை வித்தாலும் மண்ணை விற்காத விவசாய்கள் வாழும் நாட்டில் விசத்தை அள்ளி தெளிக்கும் முதலாளிவர்க்கம் .//
ReplyDeleteஅருமையா சொன்னிங்க
அப்படியே வேர்டு வெரிபிகேசனை எடுத்துடுங்க!
dashboard-settings-comments-Show word verification for comments?-இதுல no கொடுங்க ப்ளீஸ்
இல்லைனா மத்தவங்க பின்னூட்டம் போட கஷ்டம்!
nanri nanbare thgavalukku
ReplyDelete