சுதந்திரம் கிடைத்து அறுபது ஆண்டுகள் ஆயிற்று அதில் அதிகமான முறை உங்கள் கட்சிதான் ஆட்சி செய்தது .அப்படி பெரும்பான்மையான வருடங்கள் ஆட்சி புரிந்த உங்கள் அரசு இந்த ஐந்து வருடத்தில் மட்டும் எப்படி வறுமையை முழுமையாக ஒழிப்பீர்கள் தீவிரவாதத்தை எப்படி முழுமையாக ஒழிப்பீர்கள் .
போதும் எங்கள் நாட்டை நீங்கள் சொரண்டியது .இன்னும் ஒரு முறை நீங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த தேசத்தை அமெரிக்காவிடம் அடுகுவைத்து கொள்ளை அடிக்கமாடீர்கள் என்று என்ன நிச்சயம் .காங்கிரஸ் என்றால் கதர் ஆடை தான் நினைவுக்கு வரும் ஒரு காலத்தில் .ஆனால் இன்றைக்கு ஒரு நெசவாளி சந்தோசமாக வாழ்கிறானா என்று காட்டுங்கள் பாப்போம் .உங்கள் ஆட்சி காலத்தில் ஏழை எளிய மக்கள் இன்னும் அதே நிலையில் அப்படியே முன்னேறாமல் இருகிறார்கள் .ஆனால் பன்னாட்டு முதலாளிகளும் சில இந்திய பண முதலைகளும் ஆயிரகணக்கான கொடிகளை கொள்ளை அடிக்கிறார்கள் .
உலக பணக்காரன் அம்பானியும் இதே நாட்டில் இருக்கிறான் ஒரு வேலை சோத்துக்கு வலி இல்லாதவனும் இங்க தான் இருகிறார்கள் .இந்த இருவர்கிடையே எவ்வளவு பொருளாதார இடைவெளி இதை உங்களால் சமன் செய்ய முடிந்ததா குறைந்த பட்சம் உண்ணும் உணவிற்கு ஆவது வலி செய்ய உங்கள் கட்சியால் முடிந்ததா இல்லை நடுத்தர ,ஏழை சமூக பாதுகாப்புக்கு உங்களால் உத்திர வாதம் கொடுக்க முடிந்ததா .
உங்கள் கட்சியின் ஆட்சி குறைபாடு உதாரணம் இந்த ஐந்து ஆண்டுகளே போதும் . உங்கள் ஆட்சி காலத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு பங்கு சந்தை உயர்ந்தது மும்பை நகரில் .அதே நகரம் அமைந்துள்ள மராத்திய மாநிலத்தில் இன்னொரு மூலையில் லட்சகனக்கான் மக்கள் உங்களது காலத்தில் தான் தற்கொலை செய்து காலத்தில்கொண்டார்கள் .நாட்டுக்கே உணவளித்த உழவன் அவன் வயித்து பாட்டுக்கே உணவிலாமல் மாண்டுபூனார்கள் . யாவது பொருளாதார மண்டலம் என்றீர்கள் என்னடா அது என்று பார்த்த பொழுது ஒன்னும் இல்லாதவன் கிட்ட புடுங்கி இருகுரவன்கிட்ட கொடுக்கிற கதையா கொஞ்சம் நிலம் வைத்து கொண்டு இருந்த உழவன் நிலத்தை பன்னாட்டு கம்பனிக்கு கூறு போட்டு கொடுத்தீர்கள் .
உங்களது கட்சி ஆட்சி காலத்தில் மாதம் ஒரு முறையாவது நாட்டில் தீவிரவாத தாக்குதல் நடக்காமல் இருந்ததில்லை . அதிலும் பாருங்கள் அப்பாவி மக்கள் மட்டுமே கொல்லபடுகிறார்கள் நல்லவர் வேடம் அணிந்தவர்கள் எல்லாம் தப்பித்து கொள்கிறார்கள் .
அதுமட்டுமா உலக ரவுடி அமெரிக்காவின் காலை நக்கி பிழைக்கும் நிலைக்கு கொண்டு சென்றது யார் நீங்கள் தான் . கியூபா போன்ற குட்டி குட்டி நாடே அமெரிக்காவை எதிர்க்கும் பொழுது நீங்கள் தான் ஐயோ அணு ஒப்பந்தம் அணு ஒப்பந்தம் என்று கூறி பாராளுமன்ற உறுபினர்களை பணத்தால் வீழ்த்தி வெற்றியும் கண்டு விடீர்கள் .இன்னும் ரிலையன்ஸ் ,டாட்டா போன்ற பெருமுதலாளிகளுக்கு அணு உலைகளை பங்கிட்டு கொடுபதுதான் மிச்சம் .
பன்னாட்டு தொழிற்சாலைக்கு வரி ரத்து ,மானியம் ,இலவச மின்சாரம் கொடுத்தீர்கள் ஆனால் துவண்டு கிடக்கும் இந்திய ஏழை மக்களுக்கு குடிக்க ஒரு வாய் தணீர் கொடுத்தீர்களா .இன்னும் இங்கு குடி நீருக்கு பல மயில் தொலைவு சென்று கொண்டு வரும் நிலையில் எத்தனை கிராமங்கள்
பழிக்கு பழி என்று உங்கள் கட்சிகாரர் ஒருவர் மாண்ட காரணத்திற்காக லட்ச லட்சம் மக்களை கொன்று குவிக்கும் ஈன பிறவிகள் தான் நீங்களும்.
ஜெய்கோ ஜெய்கோ என்கிறீர்கள் ஆனால் ஐயகோ ஐயகோ என்று ஈழ தமிழர் குரல் உங்கள் காதுகளில் வில்ல வில்லையா .எப்படி கேட்கும் நன்றி கெட்ட ஜென்மங்கள் நீங்கள் ஜெய்கோ பாடல்களை காப்புரிமை வாங்கினீர்களே . அந்த பாடல் வரும் படத்தின் பெயர் போல தான் நம் நாட்டின் நிலைமையும் அதுதான் மாடமாளிகைகள் அருகிலே ஓலை குடிசைகள் . தப்பு செய்தவனுக்கு கருப்பு பூனை பாதுகாப்பு அப்பாவி மக்களுக்கு நீங்கள் வைப்பது பெரிய ஆப்பு .
இனியும் நீங்கள் ஒட்டு கேட்காதீர்கள் வறுமையை ஒல்லிபேன் என்று எங்கள் காதுகளில் இந்த குரல் கேட்டு கேட்டு புளித்து விட்டது எங்களுக்கு .
உங்களுக்கும் தீர்விரவதிகளுக்கும் என்ன வித்யாசம் அவன் குண்டு வைத்து கொள்கிறான் .நீங்கள் ஆட்சிசெய்து கொல்ல்கிறீர்கள் என் இனத்தை .
//உங்களுக்கும் தீர்விரவதிகளுக்கும் என்ன வித்யாசம்//
ReplyDeleteவித்தியாசம் இருக்கு!
தீவிரவாதிகள் ஆட்களை மட்டும் கொல்லுவார்கள்
அரசியல்வாதிகள் கூடவே கொள்ளையும் அடிப்பார்கள்
//ஜெய்கோ ஜெய்கோ என்கிறீர்கள் ஆனால் ஐயகோ ஐயகோ என்று ஈழ தமிழர் குரல் உங்கள் காதுகளில் வில்ல வில்லையா //
ReplyDeleteசாட்டையடி ..