- ஊடகத்துறை இப்பொழுது மிகவும் பெரிய அளவில் வளர்ச்சியை பெற்றுவருகிறது .உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தருவதில் நீ நான் என்று போட்டிபோட்டு கொண்டு செய்திகளை தருகின்றன .இதனால் இன்று உலக நிகழ்வுகளைஉடனுக்கு உடன் தெரிந்து கொள்ள முடிகிறது .
நமது இந்திய நாட்டில் செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேவை மிகப்பெரிய அளவில் வளர்ந்து இருக்கிறது .தொலைக்காட்சி,இணையம்,வானொலி என்று பலவிதமான ஊடகங்களும் அடங்கும் .அதிலும் தொலைக்காட்சி என்று எடுத்து கொண்டால் எத்தனை எத்தனை தொலைக்காட்சிகள் உள்ளூர் தொலைக்காட்சி முதல் உலக அளவில் புகழ் பெற்ற ஸ்டார் ,பி.பி.சி வரை.
- நமது இந்திய நாடு விவசாயத்தை அடிப்படையாக கொண்டநாடு.பெரும்பான்மையான மக்கள் விவசாயத்தை நம்பியே இருகிறார்கள்.எவ்வளவுதான் நாம் மென்பொருள் துறையிலும் ,மின்னணு துறையிலும் நாம்சிறந்து விளங்கினாலும் விவசாயம் தான் நம் நாட்டின் முதுகெலும்பு.ஆனால் இன்று அந்த முதுகெலும்பு ஒடிந்து கிடக்கிறது .நமது ஆட்சியாளர்களின் தவறான கொள்கைகள் தான் காரணம் .சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் மண்ணை மாற்றானுக்கு வித்து மண்ணோடு உறவாடிய விவசாயை வெறும் கையோடு நிற்க வைத்தது . மீதம் உள்ள நிலங்களை ரசாயன உரங்களை பயன் படுத்துங்கள் ,வீரிய விதைகளை பயன்படுத்துங்கள் ,பூச்சிக்கொல்லியை அடியுங்கள் என்று விவசாய்களிடம் சொல்லி மண்ணை மலடாக்கியது ,விவசாயி கடனாளி ஆக்கியது.
இந்த ரெண்டுக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா ?
சொல்கிறேன் .நம் தமிழ்நாட்டை எடுத்துகொள்ளுங்கள் நமது மாநிலம் பெரும்பான்மையாக விவசாய நிலங்களை கொண்டது அப்பொழுது நம் மக்களில் பெரும்பான்மையானோர் விவசாயம் செய்பவர்களே .தமிழுக்கு(தமிங்க்லிஷ் ) தொலைக்காட்சிகள் கிட்ட தட்ட இருபத்தைந்துக்கு மேல் இருக்கிறது .அதில் அரசியல் சார்பு சில தொலைக்காட்சிகள் இருந்தாலும் அவை கட்சினுடைய தொலைக்காட்சிகள் இல்லை கட்சி தலைவர்கள் நடத்தும் தனியார் நிறுவனங்கள் மற்றவை மிகப்பெரிய ஊடக நிறுவங்களின் தொலைக்காட்சிகள் ஆகும் .
சரி இத்தனை தொலைக்காட்சிகளிலும் என்ன ஓளிபரப்பு செய்கிறார்கள் ,திரைப்படங்கள் ,பாடல்கள் ,நகைச்சுவை நிகழ்ச்சி ,நெடுந்தொடர்கள் ,சினிமா சார்ந்த நிகழ்ச்சிகள் போன்றவற்றை மட்டுமே திரும்ப திரும்ப காட்டுகிறார்கள் .
ஊடகம் என்றால் சினிமா மட்டும் தான் என்று ஒரு நிலையை இவர்கள் கொண்டு வந்து விட்டார்கள்.
முன்பு எல்லாம் இரவு நேரத்தில் குடும்பத்தில் அனைவரும் அமர்ந்து ஒன்று கூடி பேசி சிரிப்பார்கள் ஒன்று கூடி உணவு உண்பார்கள் ,ஆனால் இப்பொழுது நிலைமை என்ன குடும்ப உறுவுகளை காட்டுகிறோம் என்று சொல்லி குடும்ப உறவுகளை சிதைக்கும் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.நாம் வாய்விட்டு சிரிபதர்க்கே இன்று திரையில் வடிவேலும் ,விவேக்கும் வரவேண்டியதாக உள்ளது.இன்னும் சில நேரங்களில் மருத்துவம் சம்மந்த பட்ட நிகழ்ச்சிகளை
தொலைக்காட்சி ஊடங்களுக்கு இது மட்டும் போதுமா? கோடிகனக்கானோர் கவனிக்கும் வெகுஜன ஊடகங்கள் மிக பெரிய சமூக அக்கறை இருக்கா வேண்டும் அல்லவா?
மக்களுக்கு உபயோகமாக எவ்வளவு தரமான நிகழ்ச்சிகளை அளிக்கவேண்டும் இவர்கள் .பகுத்தறிவு தலைவர்களின் ஆட்சி இது ஆனால் அவர்களின் தொலைக்காட்சியோ மானுக்கும் மயிலுக்கும் மல்லு கட்டி கொண்டு இருக்கிறது.
ஆடி கலைத்த நடிகைகளை கூட்டி குத்தாட்டம் போடுவதற்கு பதிலாக அழிந்து கொண்டு இருக்கும் நம் நாட்டு புற கலைகளை வளர்க்கும் நிகழ்ச்சிகளை தந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் .கோட்டு சூட்டு அணிந்தவர்களிடம் பேட்டி எடுக்கும் இவர்கள் கோவணம் கட்டியவனை நீங்கள் கவனித்ததுண்டா .விவசாயம் சார்ந்த நமது பகுதிக்கு விவசாயம் தொடர்பான நிகழ்ச்சிகளை இவர்கள் வழங்கியதுண்டா?
இல்லை இல்லை என்று தான் சொல்ல வேண்டும். கோடிகளில் லாபம் சம்பாதிக்கும் இவர்களுக்கு கோவணம் கட்டியவர்களை பற்றி சிந்திக்க நேரம் இருக்குமா ?
மக்களின் நேரத்தை வீனடிபதற்கு பதிலாக விவசாய்கள் பயன் பெரும் அளவுக்கு விவசாயம் சார்ந்த தொழில் வாய்புகள் மற்றும் விவசாயத்தின் இன்றைய நிலயை நிகழ்ச்சிகளை வழங்கினால் எத்தனை லட்சம் மக்கள் பயன் பெறுவார்கள்.விவசாயத்தை பற்றி இன்றைய தலைமுறைக்கு எந்தளவுக்கு தெரியும்.கடையில் காசுகொடுத்தால் பொருள் கிடைக்கும் என்று மட்டும் தான் தெரியும்.
மறைந்து கொண்டு இருக்கும் நமது பாரம்பரிய விவசாயத்தை மீட்டு எடுப்பதில் நம் ஆட்சி ஆளர்களுக்கு எவ்வளவு கடமை இருகிறதோ அதே அளவுக்கும் இந்த ஊடகங்களுக்கும் இருக்கிறது .இந்த வகையில் மக்கள் தொலைக்காட்சி மற்ற தொலைக்காட்சி அலைவரிசைகளில் மாறுபட்டு நமது கலாச்சாரம்,பண்பாடு ,விவசாயம் சார்ந்த நிகழ்ச்சி களை வழங்கு கிறது .இந்த பொறுப்புணர்வு மற்ற ஊடகங்களுக்கும் வரவேண்டும்.